25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 28, 2026

விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகாமந்தனா  பிரமாண்டமான திருமணம்.

தெலுங்கு திரையுலகத்தின் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவுக்கு திருமாங்கல்யம் கட்டினார். விஜய் தேவரகொண்டா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகாவின் ஆசைப்படி மாலையில் 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதில் தெலுங்கு திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.பிரமாண்டமான திருமணத்தை ஒட்டி, வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் ஏழை மக்களுக்காக ராஷ்மிகா மந்தனா 68 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 வீடுகளைக் கட்டியுள்ளார். நூற்றுக் கணக்கான அனாதை இல்லங்களுக்கு விருந் தும் அளித்தார்.ராஷ்மிகா மந்தனா செய்த நல்ல பணிக்காக வாழ்த்துங்கள்.

Feb 28, 2026

நாட்டை காக்க உயிரையே பணயம் வைத்தராணுவ நாய் டைக்சன்.

ராணுவ நாய் டைக்சன் கிஸ்த்வாரில் நடந்த மோதலில் காயமடைந்த போதிலும் தன் கடமையை நிறுத்தவில்லை. தொடர்ந்து தடயத்தை பின்தொடர்ந்து மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியது. நாட்டை காக்க உயிரையே பணயம் வைக்கும்  உண்மையான வீரம்.

Feb 28, 2026

அரசு ஊழியர்களின் புதிய சம்பளம்.

பதவிகள் - மாத சம்பளம்ஆசிரியர் - ₹85,000மருத்துவர் - ₹1,30,000நீதிபதி - ₹1,50,000அறிவியலாளர்  – ₹1,40,000பியான் -   ₹45,000கிளார்க் - ₹50,000அஞ்சல்காரர் - ₹55,000சப்-இன்ஸ்பெக்டர் (SI) - ₹80,000ஹெட் கான்ஸ்டபிள் - ₹69,000அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ASI) ₹76,000ஜூனியர் இன்ஜினியர் - ₹92,000இன்ஸ்பெக்டர்  - ₹1,20,000செக்ஷன் ஆபிசர் - ₹1,29,000ஐஏஎஸ்/ஐபிஎஸ்/ஐஎஃப்எஸ் - ₹1,55,000IAS/IPS (சீனியர் ஸ்கேல்) - ₹2,10,000

Feb 28, 2026

ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

ஹிப்பாலஸ் என்னும் பெயர்கொண்ட கிரேக்க மாலுமி, கி.பி. (பொ.ஆ ) முதல் நூற்றாண்டில் பருவக் காற்றின் உதவியினால் நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுமுதல், யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்துசென்றன ..அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள். ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

Feb 27, 2026

(ஹெவன் 1), முதல் தனியார் விண்வெளி மையம் .

 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட்டில் 2027ல் உலகின் முதல் தனியார் விண்வெளி மையம் (ஹெவன் 1),  விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது.(ஐ.எஸ்.எஸ்.,) பதிலாக, தற்போது செயல்பாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு இது செயல்பட உள்ளது. இதன் விட்டம் 14.7 அடி. உயரம் 33 அடி.அமெரிக்காவின் 'வாஸ்ட்' நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. ஐ.எஸ்.எஸ்., போல விண்வெளியில் மிதந்தபடி பூமியை சுற்றி வரும். ஐ.எஸ்.எஸ்.,ல் இருந்து 'ஹெவன் 1' தனித்துவமாக நவீன மேம்பட்ட வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Feb 26, 2026

தமிழ்நாட்டின் நிர்வாக பிரிவுகள்.

மாவட்டங்கள் - 38 மக்களவைத் தொகுதிகள் - 39 சட்டமன்றத் தொகுதிகள்- 234 மாநகராட்சிகள்- 25 நகராட்சிகள்- 137 வருவாய் கோட்டங்கள்- 94 தாலுகாக்கள் 316 ஊராட்சி ஒன்றியங்கள்- 388 டவுன் பஞ்சாயத்துகள்- 490 கிராம பஞ்சாயத்துகள் - 12525.

Feb 25, 2026

புன்னகைக்கும் 'குவாக்கா'

குவாக்கா என்பது  ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட, மாக்ரோபோடிடே ஒன்ற, கங்காரு குடும்பத்தைச் சேர்ந்த, பாலுாட்டி விலங்கு. இது,'உலகின் மகிழ்ச்சியான விலங்கு என்று அழைக்கப்படுகிறது. !'ஏனெனில்  , அதன்முகத்தில், இயல்பாக ஒரு புன்னகை போன்ற தோற்றம் இருக்கிறது. குவாக்காக்கள், ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ராட்னெஸ்ட் தீவு மற்றும் பால்ட் தீவு போன்ற, சில சிறிய தீவுகளில் காணப்படுகின்றன. இவை, 40 செ.மீ., நீளமும், 3 கிலோ எடையும் கொண்டவை. இவற்றின் உடல், மென்மையான பழுப்பு நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இ இவை புல், இலைகள், மரப்பட்டைகள் மற்றும் சிறு தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தாவர உண்ணி. இது, கருவுற்று 27 நாட்களில், ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். அந்தக் குட்டி, ஆறு மாதங்கள் வரை தாயின் பையில் வளரும். குவாக்காக்களின் மகிழ்ச்சியான தோற்றம் மற்றும் நட்பு குணம், அவற்றை உலகளவில் அன்புக்குரியவையாக மாற்றியுள்ளன. இவை, மனிதர்களிடம் பயமின்றி நட்பாக இருக்கும் தன்மை கொண்டவை. இதனால், ராட்னெஸ்ட் தீவில், குவாக்காக்களுடன் சுற்றுலாப் பயணியர், 'செல்பி' எடுத்துக் கொள்வது பிரபலம். இருப்பினும், அவற்றுக்கு உணவளிப்பது அல்லது தொந்தரவு செய்வது, அங்கு சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழிட இழப்புமற்றும் பிற வேட்டையாடி விலங்குகளால், அழிந்து வரும் இனமாக குவாக்காக்கள்பட்டியலிடப்பட்டுள்ளன.

Feb 24, 2026

ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர் தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப் பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில், ஒரு கிரானைட் கல்லில் நியாண்டர் தால் மனிதன் ஒருவனின் கைரேகை கண்டறியப் பட்டுள்ளது. இது 43,000 ஆண்டுகள் பழமையானது. உலக வரலாற்றிலேயே மிகப் பழமையான, முழுமையாகக் கிடைத்த நியாண்டர்தாலின் கைரேகை இதுதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Feb 24, 2026

பாதிக்கப்படும் பாசிகளின் வளர்ச்சி.

பாசிகளின் வளர்ச்சியில் மாற்றம், நீரின் வெப்ப  மாற்றம் முதலிய காரணங்களால் பெருங்கடல்கள் இருண்டு வருகின்றன. அதாவது உலகப் பெருங்கடல் பரப்பின் 20 சதவீத பரப்பிற்குள், ஒளி ஊடுருவுவது குறைந்துள்ளது. இதனால் சூரிய, சந்திர ஒளியை நம்பி வாழும் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை உண்ணும் மனிதர்களும் பாதிக்கப் படுவர் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Feb 23, 2026

நம்பமுடியாத பொறியியல் சாதனைகளை  உலகின் மிகப்பெரிய 10 அணைகள் .NO-8டுகுருய் அணை (பிரேசில்)

டுகுருய் அணை(பிரேசில்)8,370 மெகாவாட்டோகாண்டின்ஸ் நதியின் மீது கட்டப்பட்ட டுகுருய் அணை, உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களில் ஒன்றாகும். 1984 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கான்கிரீட் ஈர்ப்பு அணை, வடக்குப் பகுதிக்கு 8,370 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகிறது.பிரேசிலின் அமேசான் பகுதியில் கட்டப்பட்ட 78 மீட்டர் உயரமுள்ள ஈர்ப்பு அணை, 45 பில்லியன் கன மீட்டர் நீர்த்தேக்கத்தைக் கொண்டுள்ளது, இது பிரேசிலின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலாகாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது, அதே நேரத்தில் நதி வழிசெலுத்தலில் மேம்பாடுகளை ஆதரிக்கிறது.இதன் கட்டுமானத்துடன், மின்சார அணுகல் விரிவடைந்ததால் புதிய தொழில்கள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புகள் தோன்றின, இது வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளைக் கொண்டு வந்தது.

1 2 ... 65 66 67 68 69 70 71 ... 136 137

AD's



More News