கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட ‘ஜெல்லி’ மீன்!
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான ஜெல்லி மீன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
வீடியோகிராபர் ஜான் ரோனி பதிவு செய்ததாகக் கூறப்படும் இந்தக் காட்சிகளில், மிகப்பெரிய அளவில் காணப்படும் ஆரஞ்சு மற்றும் நீல நிற ஜெல்லி மீன் இடம்பெற்றுள்ளது.
இதன் உண்மையான எடை மற்றும் நீளம் குறித்த தகவல்கள் உறுதியாகத் தெரியாத நிலையில், சில நிபுணர்கள் இது மிகப்பெரிய அளவைக் கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஜெல்லி மீன்களில் ஒன்றாகக் கருதப்படும் Lion’s Mane Jellyfishசுமார் 120 அடி நீளம் வரை வளரக்கூடியதாகக் கூறப்படுகிறது.
ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சில வகைகள் மனிதர்களுக்கு வலியை ஏற்படுத்தும் அளவுக்கு விஷத்தன்மை கொண்ட கொடுக்குகளை உடையவை.
கடலுக்குள் இன்னும் நமக்குத் தெரியாத எத்தனை பிரம்மாண்ட உயிரினங்கள் இருக்கின்றன?
0
Leave a Reply