25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


நிதி திவாரி பிரதமரின் தனிச்செயலராக நியமனம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிதி திவாரி பிரதமரின் தனிச்செயலராக நியமனம்.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச்செயலராக ஐ. எப். எஸ்., எனப்படும் இந்திய வெளியுற வுத் துறை பெண் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப் பட்டுள்ளார்.உத்தர பிரதேசத்தின் வாரணாசி அருகே உள்ள மெஹமுர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி, வணிக வரித்து றையில் உதவி கமிஷன ராக பணியாற்றி வந்தார். கடந்த 2013ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.எப்.எஸ்., அதி காரியாக தேர்வானார். 2014ல் ஐ.எப்.எஸ்.,பயிற்சியின்போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான விருதையும் நிதி திவாரி பெற்றார். முன்னதாக வெளியு றவு அமைச்சகத்தின் சர்வ தேச பாதுகாப்பு விவகார பிரிவின் துணைச்செய லராக நிதி திவாரி பணி யாற்றிய போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2014 பேட்ச் ஐ.எப்.எஸ்., அதிகாரி யான நிதி திவாரி, 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலராக பணியாற்றி வருகிறார். தற்போது இவரை, பிரதமரின் தனிச்செயலராக நியமிக்க, மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித் துள்ளது. இதுகுறித்து அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.

பிரதமர் மோடிக்கு, தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதீஷ்சந் திர ஷா ஆகிய இரண்டு தனிச்செயலர்கள் உள்ள நிலையில், நிதி திவாரியும் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News