தென்னிந்தியாவில் உள்ளRSB ரீடெய்ல் இந்தியா, மாரி ரீடெய்ல், போத்தீஸ் மற்றும் நல்லி சில்க் சாரிகள் உள்ளிட்ட புடவை சில்லறை விற்பனையாளர்கள் அடுத்த6-8 மாதங்களில் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடுகள்(IPO) மூலம் கிட்டத்தட்ட₹20,000 கோடி திரட்டத் தயாராகி வருவதாக இந்த விஷயத்தை அறிந்த வங்கியாளர்கள் தெரிவித்தனர்.இந்த இனப் பெண்கள் ஆடை சில்லறை விற்பனையாளர்கள் பல தசாப்தங்களாக கட்டியெழுப்பிய பிராண்ட் ஈக்விட்டியில் இருந்து பணமாக்குவதற்கும் மதிப்பை உருவாக்குவதற்கும்IPOகள் ஒரு வழியை வழங்குகின்றன என்று அவர்கள் கூறினர்."இந்த புடவை சில்லறை விற்பனையாளர்களில் பெரும்பாலோர் இதுவரை தென்னிந்தியாவின் மெட்ரோ மற்றும் முதல் நிலை நகரங்களில் குவிந்துள்ளனர்,"என்று நிர்வாக இயக்குநரும் தலைவருமான பவேஷ் ஷா கூறினார்.
இந்திய ராணுவத்துக்கு பக்கபலமாக டி.ஆர்.டி.ஓ., உருவாக்கிய அதிநவீன அடுத்த தலைமுறை அக்னி ஏவுகணைகள், இருந்து வருகின்றன.2,000 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை ,அடுத்த கட்ட முயற்சியாக, துல்லியமாக தாக்கி அழிக்கும் 'அக்னி நடுத்தர வகை, பிரைம் ' ஏவுகணையைடி.ஆர்.டி.ஓ., உருவாக்கி உள்ளது. நேற்று முன்தினம் இரவு ரயிலில் இருந்து ஏவும் சோதனை நடத்தி, திட்டமிட்ட படி இலக்கை தாக்கி அழித்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ,'அக்னி பிரைம்' ஏவுகணையை உருவாக்கிய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளை, பாராட்டினார்.இந்த ஏவு கணையை நாட்டின்எந்தவொரு பகுதிக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். எந்த இடத்தில் இருந்தும், குறுகிய காலத்திற்குள், ஏவுகணையை செலுத்தி, எதிரிகளின் இலக்கை துல்லியமாக அழிக்க முடியும்..இதுவரை , சீனா ,அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிடம் மட்டுமே ரயிலில் இருந்தபடி ஏவுகணை செலுத்தும் திறன் இருந்தது. இந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. சாலை வசதி இல்லாத இடங்களில் கூட, ரயில் மூலம், அக்னி ஏவுகணையை எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக போர் சமயங்களில், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதக் கிடங்குகளை எதிரிகள் குறி வைத்து தாக்கக்கூடும்.அந்த நேரங்களில், ரயில்வே குகைகளில், ஏவுகணைகளை மறைத்து வைத்து, எதிரிகளின் கண்களுக்கு தெரியாமல் மறைக்க முடியும்.இந்த சோதனையை நடத் வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகளை பாராட்டு கிறேன். இதன் மூலம், ரயிலில் இருந்தபடி ஏவுகணை ஏவும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது,என்று ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
குளியல் என்பது உடலை தூய்மையாக வைத்திருக்க ,அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய, ஒரு பழக்கமாக இருக்கிறது ஆனால், குளியல் என்றாலே சிவருக்கு பயம் ஏற்படும் நிலையும் உள்ளது.ஏனென்றால் உடலில் தண்ணீர் படும்போது தோல் அரிப்பு தாங்க முடியாது. இந்த நிலைக்கு அக்வாஜெனிக் புரூரிட்டஸ் அல்லது தோல் தினவு என்று பெயர். இது ஒரு சிலருக்கு ஏற்படும் அரிதான தோல் பாதிப்பு ஆகும்.இந்த பாதிப்பு உள்ளவர்கள் தோலில் தடிப்பு அல்லது நிற மாற்றம் எதுவும் ஏற்படுவது இல்லை. குளித்த உடன் உடலை அரிப்பில் இருந்து மீட்க துணியை கொண்டு நீண்ட நோம் தேய்த்துக்கொண்டே இருக்கும் நிலைமை காணப்படும்.இந்நோய் காரணம் குறித்து இதுவரை மருத்துவ உலகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை உடலில் தண்ணீர் பட்டதும், நரம்புகள் ஏன் இது போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு சில காரணங்கள் இருக்கலாம்: என்று மட்டும் சொல்லப்படுகிறது.ஒரு சிலருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் கூடுதலாக அதிகரித்து இருந்தால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்.ஹெபடிடிஸ்-சி மற்றும் சில மூட்டு நோய்கள் இருந்தால் இந்த நிலை ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதே போல் மன அழுத்தம், தோல் கசிவு, சில மருந்துகள் காரணமாகவும் அரிப்பு அதிகரிக்கலாம்.சில வேளைகளில், தண்ணீர் தோலின் மேல்புறத்தை தொட் டதும், மாஸ்ட் செல்கள்' எனப்படும் நோய் எதிர்ப்பு செல்களின் உள்ள ஹிஸ்டமின் போன்ற வேதிப்பொருட்கள் வெளியே அரிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிய வந்துள்ளது. இயற்கையின் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை தெரிவதில்லை. அதில் இதுவும் ஒன்று என மருத்துவ உலகம் கூறுகிறது.
.இளையராஜா, “முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நுால் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என சொன்னது எனக்கு ஊக்கமளிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்” என்றார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு அரசு சார்பில் 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' பாராட்டு விழா சென்னையில் நடந்தது.
பழங்களை துண்டுகளாக நறுக்கி சாப்பிடும்போது சிலர், சில துண்டுகளை அப்படியே வைத்து விட்டு தங்கள் வேலையை தொடர்வார்கள். சில மணி நேரம் கழித்து பார்க்கும்போது ,அவை பழுப்பு நிறமாக மாறியதற்கு. என்ன காரணம் ? ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை வெட்டிய பின்பு அவற்றில் இருக்கும் ஒரு நொதி காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலக்கிறது. அந்த வினையின் காரணமாக பழம் பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த நிகழ்வு 'நொதி பழுப்பு நிறமாக்கல்' என்று அழைக்கப்படுகிறது. இச்செயலின் காரணமாக பழுப்பு நிறமாக மாறிய பழம் அதன் இயல்பு சுவையை இழந்து விடும். இந்த மாற்றம் ஒரு பழம் வெட்டப்படும்போதோ, மரத்தில் இருந்து பழுத்து கீழே விழும்போது சேதமடைந்தாலோ நிகழும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழச்சாறை பழத்துண்டு கள் மீது பூசுவதன் மூலம் இந்த வினையை தடுக்கலாம்.ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பழத் துண்டுகளை சுமார் 2 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு பழங்களை சாதாரண நீரில் கழுவி சாப்பிடலாம்.ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இதில்அனைத்துபழத்துண்டுகளையும்சுமார் 30 முதல் 40 விநாடிகள் ஊற வைக்கவும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இது பழங்களை சில மணி நேரங்களுக்குப் பிறகும் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.பழங்கள் பழுப்பு நிறமாக்குவதை தாமதமாக்க ,வெட்டப்பட்ட பழங்கள் கெட்டுப்போவதை தடுக்க, பிரிட் ஜில் வைக்கலாம்..
12 மணி நேரத்திற்குள் மூன்று இதய மாற்று அறுவை சிகிச்சைகளை முடித்துபெங்களூருவைச் சேர்ந்த நாராயணா இதய அறிவியல் நிறுவனம் தேசிய சாதனை படைத்துள்ளது.பெங்களூரு போக்குவரத்து காவல்துறை(BTP) உருவாக்கிய பசுமை வழித்தடங்களின் ஆதரவுடன், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் இருந்து நாராயண மருத்துவமனையில் உறுப்புகளை பெறுபவர்களுக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக போக்குவரத்து இல்லாத பாதைகள் உருவாக்கப்பட்டன. 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் மூவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள். நுரையீரல் அழுத்தம் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திருந்தனர், மருத்துவமனை ஒரு அறிக்கையில் இது விரைவில் அவர்களை மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர்களாக மாற்றியிருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
SAE ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், தொழில்துறை சராசரியை விடக் குறைவாக3-4 சதவீதத்திற்கு மேல் கட்டுப்படுத்தப்பட்ட செயலில் உள்ள ஆபத்தை பராமரிக்கும், மேலும் முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை ஆபத்து பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தில் கவனம் செலுத்தும்.ஜியோபிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் வியாழக்கிழமை தனது முதல் ஆக்டிவ் ஈக்விட்டி தயாரிப்பான ஜியோபிளாக்ராக் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டை சிஸ்டமேடிக் ஆக்டிவ் ஈக்விட்டி தளத்தில் செப்டம்பர்23 அன்று தொடங்குவதாகக் கூறியது, ஆனால் ஆரம்ப சலுகை காலத்தில் புதிய நிதிக்கு எந்த வசூல் இலக்கையும் நிர்ணயிக்கவில்லை."இது எங்கள் முதல் ஆக்டிவ் ஈக்விட்டி ஃபண்ட். மூன்று அல்லது நான்கு ஆக்டிவ் ஈக்விட்டி ஃபண்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, இது இந்த நிதியாண்டில் வெளிச்சத்தைக் காணலாம். ETFகள் உட்பட பிற தயாரிப்புகளும் காலப்போக்கில் பின்பற்றப்படும்," என்று ஜியோபிளாக்ராக் தலைமை முதலீட்டு அதிகாரி ரிஷி கோஹ்லி கூறினார்.BlackRock இன் உலகளவில் நிரூபிக்கப்பட்ட SAE தளத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த நிதி, 400 சிக்னல்களைக் கண்காணிக்கும் விதிகள் அடிப்படையிலான மற்றும் முக்கியமாக இயந்திரத்தால் இயக்கப்படும் செயல்முறையைப் பின்பற்றுகிறது. முதலீட்டு செயல்முறையில் சுமார்95 சதவீதம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், முக்கிய நபர் ஆபத்தை நீக்குதல், அறிவாற்றல் சார்புகளைக் குறைத்தல் மற்றும் ஒழுக்கமான நிதி நிர்வாகத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும்.SAE ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட், தொழில்துறை சராசரியை விடக் குறைவாக3-4 சதவீதத்திற்கு மேல் கட்டுப்படுத்தப்பட்ட செயலில் உள்ள ஆபத்தை பராமரிக்கும், மேலும் முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை ஆபத்து பாதுகாப்பு மற்றும் நிலையான வருமானத்தில் கவனம் செலுத்தும்.சீனா மற்றும் ஜப்பான் போன்ற பிற பிளாக்ராக் நாட்டு நிதிகளில் அடையப்பட்ட முடிவுகளைப் போலவே,10 ஆண்டு உருவகப்படுத்துதல், இந்த மாதிரி பெஞ்ச்மார்க் குறியீட்டை விட3-4 சதவீத செயல்திறனை வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது என்று கோஹ்லி கூறினார்."நிச்சயமற்ற சந்தை சூழலில், பங்குச் சந்தைகள் கடினமாக இருந்த நிலையில், மற்ற செயலில் உள்ள நிதிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில் ஆபத்தை நிர்வகிக்கும் மற்றும் நீண்ட காலத்திற்கு கவர்ச்சிகரமான ஆல்பாவை நோக்கமாகக் கொண்ட ஒரு தயாரிப்பைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கோஹ்லி கூறினார்.ஜியோ பைனான்சியல்ஸ் மற்றும் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளர்களான பிளாக்ராக் இடையேயான கூட்டாண்மையான ஜியோபிளாக்ராக், மே மாதத்தில் அதன் உரிமத்தைப் பெற்றது, தற்போது எட்டு ரொக்கம் மற்றும் குறியீட்டு நிதிகளில் சுமார் ரூ.18,000 கோடி சொத்துக்களை நிர்வகிக்கிறது. நிதி நிறுவனம் குறுகிய காலத்தில் டிஜிட்டல் விநியோகத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அந்தக் கண்டத்தில் வாழ்கின்ற மராடஸ் ஸ்ப்ளெண்டென்ஸ் எனும் குதிக்கும் சிலந்திகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர். அவை குறிப்பிட்ட விதத்தில்தங்கள் உடலைப் பயன்படுத்தி மிக நீண்ட தூரம் தாவுகின்றன. இதை ஆராய்ந்து ரோபோடிக் தொழில் நுட்பத்தில் பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கையில் பெரிதாக வளரும் மரங்களை திறமையாக கத்தரித்து பொம்மை போல் காட்சிப்படுத்துவதே போன்சாய் எனப்படுகிறது. கிழக்காசிய நாடான ஜப்பானிய மொழியில் 'போன்' என்ற சொல் பானையை குறிக்கும். நடவு செய்வதை, 'சாய்' என்ற சொல் குறிப்பிடுகிறது.ஆசிய நாடான சீனாவில், பென்ஜிங்' என்ற பெயரில் துவங்கியது இந்த குட்டை மரம் வளர்க்கும் கலை.சீனாவில், டாங் வம்ச ஆட்சி காலத்தில் பென்ஜிங் கலை உருவானது. சிறிய பானைகளில்மரங்களை வளர்த்து காட்சிப் படுத்துவதே இதன் நோக்கம். இயற்கையின் அழகு அதில்பிரதிபலித்தது. அமைதி மற்றும் எளிமையைப் போற்றும் வகையில் அமைந்திருந்தது.ஜப்பானில், கி.பி., 12ம் நூற்றாண்டில் பரவியது இந்த கலை.அப்போது சமூகத்தில் கவுரவம் பெற்றிருந்த சாமுராய் மற்றும் பிரபுக்கள், இந்த கலையை உயர்வாக கருதி ஆர்வமுடன் ஈடுபட்டனர். இதை முறைப்படுத்தியதால் புதிய பாணிகள் உருவாயின. பல வடிவங்கள் எடுத்தன.இந்த கலை, 17ம் நூற்றாண்டில் மக்களிடையே பிரபலமடைந்தது. இதற்காக சிறப்பு கருவிகள் உருவாக்கப்பட்டன. நுட்பங்களுடன் மிளரத் துவங்கியது. பின் 19ம் நுாற்றாண்டில் உலகின் பிற நாடுகளுக்கு அறிமுகமானது. பல கலாசாரங்களிலும், தனித்துவமான பாணிகள் உருவாக்கப்பட்டன.இப்போது, போன்சாய் மரம் வளர்ப்பு உலகம் முழுதும் பரவியுள்ளது. மக்களின் முக்கியபொழுது போக்குகளில் ஒன்றாகி உள்ளது. ஒவ்வொரு போன்சாய் மரமும், அதை வளர்ப்பவரின் படைப்பாற்றலையும், அழகியலையும் வெளிப்படுத்துகிறது.
ஆப்ரிக்காவில் மட்டுமே வாழும் விலங்கு ஓட்டகச் சிவிங்கி, இதன் எண்ணிக்கை 1.17 ம் அதிகபட்சம கென்யாவில் 4,240 ஓட்டகச்சிவிங்கிகள் உள்ளன. இந் நிலையில் இவை ஒன்றல்ல. நான்கு வகைகள் உள்ளன என இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி நார்தன், ரெடிகுலேட், மசாய், சதர்ன் என நான்கு வகைகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை, அமைவிடம், நிறம் என பல அம்சங்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வித்தியாசம் உள்ளது. பொதுவாக ஒட்டகச்சிவிங்கியின் உயரம் 14-19 அடி. இதன் குட்டியின் உயரம் 6 அடி இருக்கும்.