வலிமை தரும் வைட்டமின்கள்.
மனித உடலின் வலிமைக்கு வைட்டமின்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில், வைட்டமின்-டி மிகவும் முக்கியமானது. இது சூரிய ஒளி வைட்டமின், கால்சிய வைட்டமின், ரிக்கெட் தடுப்பு வைட்டமின் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உடலை தாங்கி நிற்கும் எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின்-டி அவசியம். இது எலும்பின் வளர்ச்சிக்கு உதவுவதோடு பலவித எலும்பு நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இது உடலில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இரைப்பை உணவு பாதையில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகரிக்கிறது. இது உடலில் குறையும்போது குழந்தையின் கால்கள் மெலிந்து, மார்பு எலும்பு கூடு போன்று குறுகி காணப்படும். கால் மூட்டுகள் ஒடுங்கி நடை, ஓடும் வேகம் குறையும். உடல் இணைப்பு எலும்புகளின் முனைகள் அகன்று, இடுப்பு எலும்பு பரப்பு குறைந்தும் காணப்படும். இந்த வைட்டமின் குறைந்தவர்களின் கால்களின் உறுதித்தன்மை குறையும்.
வெயில் உடலில் படும்போது தோல் தானாகவே வைட்ட மின்-டியை உற்பத்தி செய்கிறது. வெயிலில் செல்லாத குழந்தைகள், சிறுவர்களிடையே இந்த வைட்டமின் குறைந்து காணப்பட இதுவும் ஒரு காரணம். விலங்குக ளின் ஈரல், முட்டை மஞ்சள் கரு, பால், பால் புரதங்கள். வெண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின்-டி காணப்படு கிறது. மாலை நேரங்களில் சூரிய வெப்பம் குறைவாக இருக்கும். எனவே அப்போது வெளியே சென்றால், உடலுக்கு ஓரளவு வைட்டமின்-டி கிடைக்கும். எனவே இந்த வெயிலை தவற விடக்கூடாது.
0
Leave a Reply