25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


24 TH JULY விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

24 TH JULY விளையாட்டு போட்டிகள்

சர்வதேச பாட்மின்டன் பிரிவு தொடர்

 சீனாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் பிரிவு தொடர் சீனாவில், நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, உலகின் 'நம்பர்–6' ஜப்பானின் டோமோகா மியாசகி மோதினர். இதில் சிந்து 21-15, 8-21, 12-7  என வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-11, 21-16 என ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் சிந்து, உன்னதி ஹூடா மோதுகின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஒகமுரா, மிட்சஹாஷி ஜோடியை வென்றது. 

 

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர்

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3’ இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண் டிடேட்ஸ்' 'செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள், முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர். தற்போது அரையிறுதி நடக்கின்றன. உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி, ‘நம்பர்-3', சீனாவின் லெய் டிங்ஜீ மோதிய மற்றொரு அரையிறுதி 'டிரா' ஆனது. ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது.இன்று 'டை பிரேக்கர்' நடக்கிறது. 

 

  இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி,  மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள் போட்டியில் முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் இருந்தது. 3வது, கடைசி போட்டி செஸ்டர் லீ ஸ்டீரீட்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்தியா, பேட்டிங் செய்தது. இந்திய அணி 50 ஓவரில் 318/5 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி, 49.5 ஓவரில் 305 ரன்னில் ஆல் அவுட்டானது. 13 ரன்னில் வென்ற இந்தியா 2-1 என தொடரை  கைப்பற்றியது. 14-20 தொடரை (3-2) வென்ற இந்தியா, 2 கோப்பையுடன் திரும்புகிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News