25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ளது.

 

பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் விவரம்:

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:

 இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, I A S.,(9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் குமார், I A S ., (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: பொதுப் பார்வையாளராக திரு. அனுப்குமார் யாதவ், I A S .,. (9489985872) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

திருச்சுழி: இத்தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S ., (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகள் எவ்விதக் குறைபாடுகளுமின்றி, நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் ஆகியோரை நியமித்து ஆணையிட்டுள்ளது.

 

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு:

இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்: பொதுப் பார்வையாளராக திரு. உதயன் மிஷ்ரா, இ.ஆ.ப. (9489985870) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. சுக்செயின் சிங், இ.வ.ப. (9489985874) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவில்லிபுத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

சாத்தூர் மற்றும் சிவகாசி: இப்பகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக திரு. அரவிந்த் குமார், இ.ஆ.ப. (9489985871) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. அனில்குமார், இ.வ.ப. (9489985875) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

 விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை: பொதுப் பார்வையாளராக திரு. அனுப்குமார் யாதவ், இ.ஆ.ப. (9489985872) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப. (9489985876) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

திருச்சுழி: இத்தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, இ.ஆ.ப. (9489985873) அவர்களும், செலவினப் பார்வையாளராக திரு. வாக்மரே ஜெய், இ.வ.ப. (9489985877) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருப்புக்கோட்டை பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ளனர்.

காவல் பார்வையாளர் மற்றும் புகார் அளிக்கும் முறை:

 மாவட்டம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தெரிவிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

  மாவட்டம் முழுமைக்குமான ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக திரு. அகிலேஷ் குமார் சௌராசியா, இ.கா.ப. (94899 85878) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்கள் வழியாகவோ அல்லது காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தெரிவிக்கலாம். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S . அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News