25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


சில்லி பேபி பொட்டேட்டோ (Chilli Baby Potato).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சில்லி பேபி பொட்டேட்டோ (Chilli Baby Potato).

தேவையான பொருட்கள்:

சிறு உருளைக்கிழங்கு (Baby Potatoes) - 250 கிராம் (வேகவைத்தது),
மிளகாய் தூள் - 1 tsp (காரத்திற்கு ஏற்ப),
இஞ்சி பூண்டு விழுது - 1/2 tsp,
வறுத்த வேர்க்கடலை, தனியா, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம் பொடி - 1 tsp,
மஞ்சள் தூள் - 1/4 tsp,
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க,
கருவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 2-3 tbsp,
உப்பு - தேவையான அளவு,

செய்முறை :

பேபி பொட்டேட்டோக்களை வேகவைத்து, தோல் நீக்கி, ஆங்காங்கே சிறு துளைகள் இடவும்.(மசாலா இறங்க).
ஒரு கிண்ணத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மற்றும் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
மசாலாவில் ஊறிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, தோல் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
சூடான சில்லி பேபி பொட்டேட்டோ தயார். தயிர் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் பரிமாறலாம்.
உருளைக்கிழங்கை அதிகமாக வேகவைக்கக் கூடாது (குழைந்துவிடும்).
அரிசி மாவு அல்லது கார்ன் பிளவர் சிறிது சேர்த்தால் இன்னும் மொறுமொறுப்பாக கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News