கருவேப்பிலை நீர்:
கருவேப்பிலை நீரில்உள்ள ஜீரணத்திற்கு உதவும் தன்மை, அஜீரணம் மற்றும் வயிற்று உப்புதலை தடுக்கும். கருவேப்பிலை நீர் குடித்தால் வயிற்றின் செயல்பாடுகள் பாதிக்காது. இது கொழுப்பை நீக்கும். இதில் உள்ள பையோ ஆக்டிவ் காம்பொனன்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் பசியை குறைக்கும். நாம் அதிகம் சாப்பிட்டதுபோல உணர்வை ஏற்படுத்தும்.இந்நிலையில் இது கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாறுவதின் வேகத்தை குறைக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது. மேலும் இந்த தண்ணீர் குடிப்பதால் இருமல் மற்றும் சளி ஏற்படாது. இதில் மூக்கடைப்பை, நாம் போக்குவதற்கு கருவேப்பிலையில் உள்ள பேக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை அதிகரிக்கும். இதில் உள்ள பிட்டா கரோட்டினி மற்றும் இரும்பு சத்து கூந்தல் நன்றாக வளர உதவும்.கருவேப்பிலைநீர் செய்ய .3 கொத்து கருவேப்பிலையை,4 கப் கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும். அடுப்பை அணைத்து, இதை சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். வடிகட்டி குடிக்கவும்.
0
Leave a Reply