சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிப்பதால்....
ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது மோர் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி இதனுடன் சிறிதளவு புதினா, சீரகத்தூள் கலந்து குடித்தால் ஜீரணச் சக்தி பெருகும்.
சாதம் வடித்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வடித்த கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகளவில் அடங்கி உள்ளன.இதனைப் பயன்படுத்தி ரசம் வைத்தும் சாப்பிடலாம். இட்லிமாவு அரைக்கும்போது இதனைக் கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாகஇருக்கும். சாதம் வடித்த கஞ்சியுடன் திராட்சைப் பழங்களைச் சேர்த்துஅரைத்து முகத்தில் தடவி வர, முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள்நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.
கால் வலியில் அவதிப் படுபவர்கள். சாதம் வடித்த கஞ்சியுடன் வெந்நீர், கல் உப்பு கலந்து மிதமான சூட்டில் கால்களை முக்கி வைத்தால் கால் வலி, வீக்கம் குறையும். இது நல்ல வலி நிவாரணியாக பயன்படும்.
சாதம் வடித்த கஞ்சி பசியைத் தூண்டும் தன்மையுடையது. இதனுடன்' சிறிது சீரகம் கலந்து குடித்தால் சாப்பிட்ட உணவுகள் சீக்கிரம் ஜீரணம்ஆகும்.
முகம், கழுத்து, கைப் பகுதிகளில் சாதம் வடித்த கஞ்சியைத் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் அலசி லர, விரைவில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
நீர்கடுப்பு பிரச்சனை தீரும். நீண்ட நேரம் நல்ல எனர்ஜியுடன் வேலை பார்க்க முடியும். கண் எரிச்சலை தீர்க்க உதவுகிறது.வெள்ளை படுதல் பிரச்சனையை சரிசெய்கிறது.மலச்சிக்கல் பிரச்சனை முற்றிலும் தீரும் புற்று நோய் வராமல் தடுக்கும். உடலின் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும். குடல் அழற்சியைத் தடுக்கும்.மேலும் உடல் எடையை அதிகரிக்க உதவும்.
0
Leave a Reply