25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களின் எதிர்பார்ப்பு

Jul 26, 2022

வேலை என்று தான் முடியும்

நம் நகரில் குண்டும்  குழியுமான ரோடுகளால் மக்கள் அவதிப்  படுகின்றனர்.. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை, ரயில்வே மேம்பாலம்  போன்ற  பல திட்டங்களால், ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு, பணிகளை விரைவில் முடிக்காமல், சாலையில் செல்வோருக்கு பெருத்த இடைஞ்சலாக உள்ளது . மழைசீசன் துவங்கும் நிலையில் சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி சகதியாகி , பேரவதிக்குள்ளாகி உள்ளனர்.  இந்த வேலை என்று தான் முடியும் என ஆதங்கப் படுகின்றனர் நம் நகர மக்கள் 

Jun 14, 2022

இராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்

இராஜபாளையம்  நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெட்டி எண்கள் மாத்திரம், சிறிய அளவில் இரும்பு போர்டில் வைத்துள்ளனர். எல்.இ.டி. கோச் வழிகாட்டும் பலகைகள், கொரோனாவிற்குப் பின் அகற்றப்பட்டு ,செயல்படாமல் இருக்கிறது. 600 மீட்டர் நீளமுள்ள பிளாட் பாரத்தில் இரவு நேர ரயில் வந்ததும். அதில் பயணிக்கும் பயணிகள் எங்கு ஏறுவது என்று தெரியாமல் அங்கும் ,இங்கும் அலைந்து அவதிக்குள்ளாகின்றனர். இதை தென்னக இரயில்வே நிர்வாகம் கவனிக்குமா ? என மக்கள் ஆதங்கப்படுகின்றனர். 

May 28, 2022

உயிர் பலிக்கு காரணமாகும் பேனர்கள்

மெயின் ரோடு சாலைகளில் பேனர் வைப்பதை நீதிமன்றம், அரசு தடை விதித்துள்ளது. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நம் நகரில்  மதுரை ரோடிலிருந்து, தென்காசி ரோடு வரை பேனர்கள் ஆக்கிரமித்து விபத்து ஏற்பட வழி வகுக்கிறது. வியாபாரத்திற்கும், விளம்பரம் தேடுவதற்கும் ,அஞ்சலி செலுத்துவதற்கும், பிறந்தநாள், காதுகுத்து, திருமணம் ,மஞ்சள் நீராட்டு விழாவிற்கும், பேனர் வைப்பது தவறு தானே ! பல உயிர்களைக் காவு கொடுத்து தங்களை விளம்பரம் படுத்தும் மக்களுக்கு என்னதான் அரசு தடைவிதித்தாலும் கண்டு கொள்வதில்லை. இவர்களுக்கெல்லாம் அதிகமாக அபராதம். கைது போன்ற நடவடிக்கைகளை யார் எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

May 10, 2022

ஆகாயத் தாமரையால் பாதிக்கப்படும் நீர்நிலைகள்

 நம் நகரில் உள்ள, புதியாதிகுளம், பிரண்டைகுளம், கொண்டனேரி கண்மாய், புளியங்குளம், வேட்டை பெருமாள் கண்மாய் ஆகிய இடங்களில் அய்யனார் கோவிலில் இருந்து வரும் நீரின் வரத்துக்களால் நிரம்பப் பெற்று, பல்வேறு இடங்களில் நீராதாரத்தை பாதுகாத்து வரும். ஆனால் தற்பொழுது இக் கண்மாய்களில், கழிவு நீர் கலப்பதால் ,ஆகாயத் தாமரை செடிகள் அடர்த்தியாக வளர்ந்து, மீன் உள்ளிட்ட நீர் வாழ் பிராணிகள் , வாழ முடியாத ,கண்மாயாக மாறியுள்ளது. இவற்றுடன் நம் நகரில் உள்ள குளங்களும் இவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் களைச் செடிகள் வளர்ந்து, பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நீர் நிலைகளைப் பாதுகாக்க, பல சமூக ஆர்வலர்கள் திரண்டாலும், மறுபடியும் ஆக்கிரமிக்கும் களைச் செடிகள், ஆகாயத் தாமரையால் ஒன்றும் செய்ய முடியாமல், நீராதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதை யார் கவனிப்பார்கள்?, 

Mar 15, 2022

செங்கோட்டை to பெங்களூர் தேவை ரயில் சேவை

 விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்கள் I.T. நகரமான பெங்களூரில் வேலை செய்பவர்கள் அதிகம் . விழாக் காலங்களில் அவரவர்களுடைய சொந்த ஊருக்கு வருவதற்கு, ரயில் சேவை இருந்தால் சௌகரியமாக இருக்கும், என்று மக்கள் அனைவரும் நினைக்கின்றனர்.  பெங்களூர் சுற்றுவட்டார நகரங்களில் தொழில் வேலைவாய்ப்பு, கல்வி காரணங்களுக்காக வசித்துவரும், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ,அருப்புக்கோட்டை, திருச்சுழியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடி ரயில் சேவையை மிகவும் எதிர்பார்க்கின்றனர். இரவு நேர ரயில் சேவை இருந்தால் மிகவும் நல்லது என எதிர்பார்க்கின்றனர். தெற்கு ரயில்வே நிர்வாகமும், விருதுநகர் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர்களும் ,நடவடிக்கை எடுத்து இம் மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர். 

Jan 13, 2022

இராஜபாளையம் நகரின் கடைசி பகுதியில் இருக்கும் கண்மாய்

இராஜபாளையம் புது பஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதிகுளம் கண்மாய், இராஜபாளையம் நகராட்சி எல்லை பகுதிக்குள் இருந்தும், இதன் நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. 20 ஆண்டுகள் முன்பு வரை கண்மாய் மூலம் தொடர்ச்சியாக இரு போக விளைச்சல் கண்ட விவசாய நிலங்களில், தற்போது பாதிக்கு மேல் தரிசாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணமே நகரில் இருந்து வரும் கழிவு நீர் கலக்கமே, அம்பலபுளிபஜார், சஞ்சீவி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் மூலம் இப்பகுதியை வந்தடைகிறது. சேர்ந்துள்ள கழிவுகள் வெளியேற வழி இல்லாததுடன், பல ஆண்டுகளாக தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளாததால், மண்மேவி மேடாகி விட்டது. இத்துடன் ஆகாய தாமரை வேறு ஆக்கிரமிக்க காண்மாய் நீர் மாசடைந்து காணப்படுகிறது.கண்மாயை துார்வாரி 50 ஆண்டுகளுக்கும் மேலானதால் நீர்பிடிப்பு பகுதி மேடாகிவிட்டது. ஏற்கனவே சேர்ந்துவரும் திடக்கழிவுகள் தொடர்ந்து தங்கி உள்ளதால், மழை காலங்களில் வந்து சேரும் தண்ணீர் கலிங்கல் வழியாக வெளியேறி விடுகிறது. கண்மாயை தூர் வாராவிட்டால் மீதம் உள்ள விவசாயிகளும் சாகுபடியை கைவிடும் நிலை ஏற்படும். ஆண்டாண்டு காலமாக சேர்ந்து வரும் சாக்கடை, சாயம், மனிதகழிவு, மருத்துவ கழிவு, ஆலை கழிவுகள், ரசாயன கழிவுகளை விவசாயத்திற்கு பாய்ச்ச வேண்டி உள்ளது. மடைகள் வழியாக தொடர்ந்து பாயும் இந்த கழிவு நீர், விவசாய மண்ணையும் சகதி ஆக்கிவிட்டது. சுகாதாரக்கேடு மிகுந்த இந்த நீரால்,விளை நிலங்கள் சதுப்பு நில காடுகள் போன்று மாறிவிட்டது. அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.இராஜபாளையம் நகரின் கடைசி பகுதியில் இருக்கும் இக்கண்மாய், சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளது. எந்த ஒரு அவசர காலத்திற்கும், அடிப்படை பிரச்சனைக்கும் அருகில் இருந்து தீர்வு காண முடியாத சூழல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள்தான் பாதிக்கின்றனர்.கண்மாய் அருகிலுள்ள விவசாயிகள் நீர் தேவையை சுலபமாக பெற்று வருவர். இதற்கு மாற்றாக எப்போதும் கழிவுநீர் சூழ்ந்து ஆகாயதாமரை, சீமைகருவேல மரங்கள், படர்ந்து நிற்பதால் மிகுந்த கவலையில் உள்ளோம். மீன் பாசி உள்ளிட்ட கண்மாய் வருவாய்க்கான எந்த வாய்ப்பும் இங்கு இல்லை. மடை அருகிலும், புதர் சூழ்ந்து பராமரிப்பற்ற நிலையில் உள்ளதால் வேதனையாக உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் இராமமூர்த்தி பி.டி.ஒ. அவர்கள், விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி குடிமராமத்து பணிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

1 2 3 4 5 6

AD's



More News