தெற்காசிய கால்பந்தில் இந்தியா பாகிஸ்தான் பெண்கள் போட்டி
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று நேபாளத்தில் துவங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 7 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி முதலில் லீக் முறையில் நடக்கின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு அக்டோபர் 27-ம் தேதி முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் அக்டோபர் 30-ல் நடக்கவுள்ள பைனலில் பலப்பரிட்சை நடத்தும்.
இந்திய அணி "A" பிரிவில் பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்கதேசம் என வலுவான அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. இன்று தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி கேப்டன் ஆஷாலதா தேவி 31 மணிப்பூரின் இம்பாலை சேர்ந்தவர் தனது 15 வயதில், இந்தியாவின் 17 வயதுக்குட்பட்ட அணியில் முதன் முறையாக தேர்வானார் .கடந்த 2011-ல் வங்கதேசத்திற்கு எதிராக அறிமுகம் ஆனார். இன்று தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். இந்திய பெண்கள் கால்பந்தில் இம் மைல் கல்லை எட்டும் முதல் வீராங்கனை என்ற பெருமை பெறவுள்ளார்.
0
Leave a Reply