25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களின் எதிர்பார்ப்பு

Jul 30, 2024

ராஜபாளையம் பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட் டுக்குடிநீர் திட்ட பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் பாதாள சாக்கடை திட்ட பணி முழுமை அடையாத நிலையில் உள்ளன. பலஇடங்களில் சோதனை ஓட்டத்தின் போது புதிதாகபோடப்பட்டதார்ச் சாலை, பேவர் பிளாக்கல் பதிக்கப்பட்ட தெருக்கள் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் ஒரு சிலவார்டுகளில் குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. தென்காசி சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் பின்புறம் குடிநீர் வீணாக சாலையில் சென்றன.  ராஜபாளையம் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்?எனபொது மக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jul 27, 2024

கைத்தறி நெசவாளர்கள் விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமல் அழிந்து வரும் பாரம்பரிய கைத்தறி தொழில்

.இராஜபாளையம் சத்திரப்பட்டி புனல்வேலி, முத்துச்சாமிபுரம், தளவாய்புரம், சேத்தூர், சொக்கநாதன் புத்தூர், ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் பிரதான தொழிலாக இருந்து வருகின்றது. பொங்கலுக்குரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச  வேட்டி சேலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . இதில் 5000 திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடி உறுப்பினராக இருந்தும், உப தொழில்களான கண்டு தயாரித்தல், தார் சுற்றுதல், சாயம் ஏற்றுதல், பாவு, உற்பத்தி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் உற்பத்தியை அதிகரிக்கும்பொருட்டு 2012ல் 90 விழுக்காடுமானியத்துடன்மின்சாரம்இலவசமாக்கப்பட்டு கைத்தொழில் அனைத்தும் பெடல் தறியாக மாற்றப்பட்டது. உடல் உழைப்பு குறைவு, உற்பத்தி அதிகம் என்பதால் கூலி ரூ.68 ஆக குறைக்கப்பட்டது. இறுதியில் 2015-ல் கூலியை உயர்த்தக்கோரி நெசவாளர்கள் பேராட்டம் நடத்தியதால் மீட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தப்பட்டது. இதில் உப தொழில்களில் ஈடுபடும் முதியோர்களின் நிலை என்பது 8 மணி நேரம் ஒரே  இடத்தில் அமர்ந்து தார் சுற்றினால் நாள் ஒன்றுக்கு 40 வரை மட்டுமே கூலியாக கிடைக்கிறது . நெசவாளர் பதினைந்து மணி நேரத்திற்கு மேல் நின்று வேலை செய்தாலும் அவரால் ரூ.250 மட்டுமே தினக்கூலியாக பெறமுடியம்.நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் தங்களின் பெற்றோர் படும் துயரத்தை அறிந்து மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். அரசு வழங்கி வந்த முத்ரா கடன் திட்டம். இறப்புக்கு பின் வாரிசு தாரர்களுக்கு ஒய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அழிந்து வரும் பாரம்பரிய கைத்தறி தொழிலை காப்பாற்ற தமிழக அரசு, கைத்தறி துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே நெசவாளர்களின் கோரிக்கை. 

Jul 24, 2024

இராஜபாளையம் தெற்குவெங்காநல்லூர் இந்திரா நகர்.செயல்படாத சுகாதார வளாகம், பாதியில் நிற்கும் ரோடு பணி அவதியில் மக்கள்.

 இராஜபாளையம் தெற்குவெங்காநல்லூர் ஊராட்சி சஞ்சீவி மலை பின்புறம் இந்திரா நகர் வீடுகள் அமைந்து 25 ஆண்டுகள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதி என எந்த பணியும் நடைபெறவில்லை,  ரைஸ் மில்  பின்புறம் உள்ள பகுதியில் கழிவு நீர் வெளியேற்ற வசதி இன்றி வீட்டின் முன் தொட்டிகள் அமைத்து நிறைந்த பின் வாளியில் வெளியேற்றி வருகின்றனர். இதனால் கொசு தொல்லை, துர்நாற்றம் சுகாதார கேடு ஏற்படுகிது. மழையின்போது கழிவுகள் தேங்கி பாதிப்பு அதிகரிக்கிறது.மக்கள் எதிர்ப்பை மீறி குடியிருப்பு அருகே டாஸ்மாக் கடை அமைந்ததால், குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் அருகே 9.5 லட்சம் செலவில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்ததால் பெண்கள் அப்பகுதி செல்ல அச்சப்பட்டு திறந்த வெளியை பயன்படுததும் கொடுமை உள்ளது.குடியிருப்பின் பல்வேறு பகுதிகளுக்கு முறையான ரோடு, சாக்கடை வசதி இதுவரை அமைத்து தரவில்லை. இதை யார் கவனிப்பார்கள் என்று இந்திரா நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jul 22, 2024

பழுதான கண்மாய் ஷட்டர்களை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

 இராஜபாளையம் விவசாய தேவைகளின் முக்கிய ஆதாரமாக உள்ள கண்மாய், குளங்களுக்கு நீரை தேக்கி வைக்கவும் அவசியமான போது திறந்துவிடவும். ஷட்டர்கள் முறையாக இயங்குவது அவசியம். 750-க்கும் அதிகமான கண்மாய்களில் நீர்வளத்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப் பாட்டில் உள்ள பெரும்பாலானவற்றில் இதே நிலை இருந்தும் மழைக்காலத்தின் போது அவற்றை முறையாக இயக்க முடியாமல் தண்ணீர் வெளியேறிய நிலை காணப்படுகின்றன. நீர்வள ஆதாரத்துறையினர் அதிகாரிகள் கண்மாய்களை, மாரமத்து பணிகளில் கரையை உயர்த்துவது, ஆழப்படுத்துவது என நடைபெறும் பெரும்பாலான பணியில், ஷட்டர்களை முறையாக செயல்பாட்டின் கீழ் கொண்டு வருவது இல்லை. இராஜபாளையம் கருங்குளம், அயன்கொல்லங்கொண்டான் பெரியகண்மாய், வெங்காநல்லூர் கண்மாய், முகவூர் கண்மாய், சமுசிகாபுரம் கீழ இழுப்பிலாங்குளம் உள்ளிட்ட கண்மாயிகளில் இந்த  நிலை உள்ளது.கிணறு வசதியின்றி கண்மாய் நீர் இருப்பையே நம்பி உள்ள நெல் சாகுபடியில் ஈடுபடும் கண்மாய் ஒட்டிய விவசாயிகளுக்கு இதனால் தொடர்ச்சிக்கல் ஏற்படுகிறது. வரும் காலங்களில் மழைக்கு முன்பாக இதற்கென தனித்துவம் வாய்ந்த பொறியாளர்கள் துணையுடன் வரத்து  கால்வாய்களை சீரமைத்து நவீன முறையில் ஷட்டர் பராமரிப்பு பணிகளைகண்காணிக்கவேண்டும்,எனஇராஜபாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Jul 20, 2024

விவசாயத்திற்கான வண்டல் மண் அனுமதியை தொடர்ந்து விவாசாயிகள் போர்வையில் மண் கொள்ளை

மாவட்டத்தின் பருவ மழைக்கு முன் விவசாய தேவைகளுக்காக அனுமதி பெற்று வண்டல் மண் இலவசமாக விவசாயிகள் அள்ளுவதற்கு அறிவிப்பு வந்தது. இதையடுத்து இராஜபாளையம் கோவிலூர் அருகே வாண்டையார் குளத்தில் 3 கனரக மண் அள்ளும்  இயந்திரம் ,மண் லாரிகளுடன் விவசாயிகள் பெயரில் மண் கொள்ளை தொடங்கியது. விவசாயிகள் புகாரின் பேரில் சேத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், வருவாய் துறையினர் சொக்கநாதன் புத்தூர் விலக்கு செக்போஸ்டில் செங்கல் சூளைகளுக்கு சென்ற லாரிகளை நிறுத்தி அனுமதி சீட்டு குறித்து விசாரித்தனர். பின்னர் கண்மாயிலிருந்து டிராக்டர்கள் மூலம் மண் கொள்ளை தடையின்றி நடந்து வருகிறது.இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன் விவசாயிகள் பெயரில் அரசியல்வாதிகள், அலுவலர்கள் கண்காணிப்பில் செங்கல் சூளைகளுக்கும், எஸ்டேட் தொழிலுக்கும் மண் சப்ளை நடந்து வருகிறது. உண்மையான விவாசியகளுக்கு , பயன் போய் சேரவில்லை. புகாரால் லாரிகளில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டு டிராக்டர்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அள்ளப்படுகிறது. என்றார். தனியாருக்கு செல்லும் அரசின் நிதி முறைப்படுத்தி ,விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்காணிக்க வேண்டும். என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Jul 18, 2024

நாய்கள் தொல்லை, கொசுத்தொல்லை, இராஜபாளையம் 33 வது வார்டு

இராஜபாளையம் நகராட்சி 33 வது வார்டுகளின் வாறுகால்களில் தேங்கும் கழிவுகளால் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது. பாதி சந்துகளில் ரோடு போடப்படவில்லை, பேவர் பிளாக் சிமெண்ட் ரோடு உயர்த்தி போட்டுள்ளதால் வீடுகள் தாழ்வாகி கழிவுநீர் புகுந்து விடுகிறது. குடியிருப்பு அருகே செல்லும் பிரதான கால்வாய் புதர் மண்டி மெயின் ரோட்டில் பாய்கிறது. சங்கரன்கோவில் ரோடு இணைக்கும் பகுதி பள்ளமாகி பாலம் கைப்பிடிச்சுவர் கம்பி உடைந்து உள்ளதால் கழிவு நீர் பாலத்தில் தேங்குகிறது.குடியிருப்பு அருகே தொற்று நோய் பாதிப்பு நாய்கள் அதிகம் சுற்றுவதால் அச்சம் ஏற்படுகிறது. குறுகலான தெருக்கள் ஆக்கிரமிப்புகளால் ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியவில்லை.இதை யார் சரி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jul 16, 2024

இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே வன எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அகழி மண் மேவியதால் விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் செய்து வருகின்றன

இராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மண் மேவிய அகழியை வனத்துறையினர் பராமரிக்காததால் விளை நிலங்களில் யானைகள் புகுந்து,மா. தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க வனப்பகுதி எல்லையோரங்களில் யானை அகழிகளை வெட்டுவதோடு, சேதமான மண் மேவிய அகழிகளை செப்பனிடவும் வனத்துறை நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு பகுதிகளில் அய்யனார் கோவில் அருகே பல்வேறு இடங்களில் அகழிகள் சேதமடைந்தும், மண்மேவியும் உள்ளதால் யானைகள் வெளியேறும் பாதையாக உபயோகிக்கின்றன. காலப்போக்கில் மண் மூடியதுடன் இவற்றை பராமரிக்காததால் யானைகள் தனியாகவும் கூட்டமாகவும் வந்து சேதம் செய்து வருகின்றன.இராஜபாளையம் அய்யனார் கோயில் அருகே மண்மேவிய அகழியை செப்பனிடாமல் வைத்துள்ளதால் விவசாயிகளை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு தீர்வாக வனப்பகுதியில் இருந்து வெளியேற முடியாத படி விலங்குகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்வதுடன், புதிதாக நிதி ஒதுக்கி அகழிகள் வெட்டப்பட வேண்டும்.  அதோடு ஏற்கனவே வெட்டப்பட்ட அகழிகளை மண்மேவாமல், சேதமடையாமல் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jul 13, 2024

சாலைகளின் நடுவில் உள்ளமின்கம்பங்களால் போக்குவரத்து இடையூறு.

இராஜபாளையம் ஜானகிராம் மில் முதல் யூனியன் அலுவலகம் வரை மொத்தம் 287 மின் கம்பங்களும், 18 டிரான்ஸ்பார்மர்களும் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஒவ்வொன்றும் 10 முதல் 30 அடி வரை சாலையை ஆக்கிரமித்து உள்ளன.இராஜபாளையத்தில் ரோட்டை பெருமளவு    ஆக்கிரமித்துள்ள  மின் கம்பங்களை,கோர்ட் உத்தரவிட்டும், அகற்றுவதில் மின் வாரியத்திற்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் நடக்கும் பிரச்சனையால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண கோர்ட் உத்தரவிட்டும் மின்வாரியம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இரண்டும் தற்போது வரை காலம் தாழ்த்தி வருகிறது .என்று இப்பிரச்சனை சரியாகும்? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jun 29, 2024

தாமதமாகும் நிழற்குடை பணி

இராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை பி.எஸ்.கே பார்க் முன் 3 வருடங்களாக பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையில் பஸ் ஸ்டாப் பயணிகள் இருக்கை, மழை வெயிலிலிருந்து பாதுகாப்பு தாழ்வாரம் என எந்த வித பணிகளையும் முடிவு பெறாமல் வைத்துள்ளனர். இப்பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jun 21, 2024

இராஜபாளையத்தில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள்.

இராஜபாளையம் நகரில் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.இராஜபாளையம் பெரியகடைபஜார் தெருவில் ரோடு வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பூங்கா முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஏணிகடைகள், ரோட்டில் அமைந்துள்ள ,டி.பி.மில்ஸ் சாலை ஓரம் பழைய இரும்புக்கடை என பெரிய பட்டியலிடலாம். இதனால் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது. இதை யார் கவனிப்பார்கள். என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காமராஜர் நகரில் உள்ள ஹாஸ்பிடல் ரோடு, சாலை ஓரம் வேன்கள், லாரிகள், நிறுத்தி வைக்கப்படுகின்றன.நகராட்சியில்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. செப்டிக்டேங்க் கிளின் செய்யும் வாகனங்களை தைரியமாக நிறுத்திவைக்கின்றனர். சுகாதாரக் கேடு விளைவிக்கும் செப்டிக்டேங்க் வண்டிகள் குடியிருப்புகள், ஹோட்டல்கள், இடையே நிறுத்தி வைப்பது சரியல்ல.இந்தப் பகுதியில் லாரிகளின் ,எதிரில் இருசக்கர வாகனங்கள் வரும் பொழுது, சாலை ஓரம் ஒதுங்க ,வாய்க்கால்களில் விழுந்து விடுகின்றன. இவை அடிக்கடி இங்கு நடைபெறுகிறது. இதை யாராவது சரி செய்வார்களா ? என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 2 3 4 5 6

AD's



More News