ரயில்வேமேம்பாலம் ராஜபாளையம் பி.ஏ.சி. ஆர் ரோட்டில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் வழியில் அகலமாகவும் வளைவுடன் காணப் படுவதால் வேகமாகசெல்லும் வாகனங்கள் ஏறி இறங்கும் போது கட்டுப்பாடின்றி மோதி விபத்துக்குஉள்ளாகின்றன. கடந்த இரண்டு மாதத்திற்குள் 15 க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மேம்பாலத்தின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து இரவு நேர ரிப்ளக்டர்கள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை செயல் பாட்டிற்கு வந்த பின்பும் கால்வாய்களில் மழைக் காலங்களின் போது பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ரோட்டில் சென்று பாதிப்பு ஏற்படுத்துகிறது. சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ்ஸ்டாண்ட் செல்லும் ஓடையில்மக்களால் துாக்கி வீசப்பட்ட குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக்பைகள், தெர்மாகோல் ஓடை பாலத்து தூண்களில் தடுக்கப்பட்டு மொத்தமாக தேங்கிநின்றன.இவற்றை அகற்ற துாய்மை பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.கடந்த முறை பெய்த கன மழையால் அகலமான கால்வாயையும் மீறி கழிவு நீர் ரோட்டில் ஓடியதுடன் அருகாமையில் இருந்த வாகன காப்பகம் உள்ளிட்டவைகளுக்குள் புகுந்து பலத்த சேதம் ஏற்படுத்தின.ஒருமுறை உபயோகித்து வீசி எரியும் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில்நகராட்சி பகுதிகளில் ,கண்காணிப்பை அதிகரிப்பதுடன் கழிவுகளைமுறையாகதூய்மைபணியாளர்களிடம்ஒப்படைக்கவேண்டும்.இதுகுறித்துதொடர்விழிப்புணர்வுநடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் நெல் சாகுபடியில் - ஈடுபட்டு வரும் விவசாயிகள், போதிய மழை இல்லாததாலும், கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் விவசாய பணிகளில் தொய்வு ஏற்பட்டது.கடந்த மாதம் பெய்த தொடர்மழையின் காரணமாக ஊருணி, கண்மாய் உள்படநீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.ராஜபாளையம் நகர்மற்றும்அதன்சுற்றுவட்டார கிராமங்களில்தற்போதுவிவசாயபணிகள் நடைபெற்றுவருகின்றன.கருங்குளம், கடம்பன்குளம், கொண்டனேரி, தெற்கு வெங்காநல்லூர், கொல்லம்கொண்டான், நக்கனேரி, சேத்தூர், முகவூர், சுந்தரராஜபுரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புத்தூர், நல்ல மங்கலம், மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண் டான், முதுகுடி ஆகிய ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் வயல்களைசீரமைக்கும் பணி, உழவு பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நாற்று நடவு பணிகளும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பறவைகள் வயல்களில் மேயும்போது அதன் எச்சத்தை வயலில் இடுவதால் உரமாக பயன்படுகிறது. விவசாயிகளுக்குதேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாவட்டநிர்வாகம் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இதற்கான கெடு என தகவல் வந்ததில் தினமும் ராஜபாளையத்தில் செயல்படும் ஏழு முகாம்களுக்கு மாணவர்களின்பெற்றோர் படை எடுத்தனர்.மொத்தம் உள்ள ஆதார் சேவை மையங்களில் ஸ்டேட் பேங்க், நகராட்சி அலுவலகம் இரண்டும் பழுது காரணமாக செயல்படாத நிலையில் தனியார் வங்கி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மற்ற இடங்களில் பள்ளி மாணவர்களு டன் பெற்றோர் கூடினர்.பி.எஸ்.கே பார்க் அருகே நேற்று தனியார் வங்கியில் நுாற்றுக்கும் அதிகமான பெற்றோர்ஒன்று கூடியதால் சிக்கல் ஏற்பட்டது. தினமும் வந்து பதிவு செய்ய முடியாமல்திரும்பி செல்வதாக கூறி வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் மாணவர்களின் பெற்றோரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுகலைந்து போக செய்தனர்.நாள் ஒன்றுக்கு 30 டோக்கன் மட்டும் வழங்குகின்றனர். அப்டேட்டிற்கான கால அவகாசம் இல்லாததால் தொலைதூரத்தில் இருந்து வந்துஏமாற்றத்துடன் திரும்புகிறோம். பள்ளி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடுசெய்து மாற்று வழி காண வேண்டும், என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதி பாதசாரிகளின் பாது காப்பிற்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் சென் றுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை,முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட நகரைசுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் பலஆண்டுகளாக முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன.சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்காகநெடுஞ்சாலைக்கு இடங்கள் அளவீடு செய்யப்பட்டு குறியீடு வரையப்பட்டு,ஆக்கிரமிப்பு சொந்தமான அகற்றும் பணிகள் நடக்காததால் மேலும் புதிதாகமுளைத்துள்ளன. சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்பிற்காகவும் ,வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், அமைக்கப்பட்ட இவற்றை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் ,ரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ,அதிகரித்து வருவதுடன், மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. நகர் பகுதிபோக்குவரத்து நெரிசலை சீராக்க நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, வருவாய்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறனர்.
ராஜபாளையம் சம்பந்தபுரம், டி.பி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி பகுதிகளில் ஏற்கனவே மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அருகே கஞ்சா இளைஞர்கள் நடமாட்டம், மது அருந்துதல், தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி குளியல் போன்றசெயல்கள் நடந்துள்ளது.ராஜபாளையம் நகராட்சி குடிநீருக்காக அய்யனார் ஆற்றில் இருந்து தண்ணீரை தேக்கி சுத்திகரிப்பு குழாய் மூலம் நகர் பகுதியில் அமைந்துள்ள 6 மேல்நிலை குடிநீர் தொட் டிகளில் சேமித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.கூடுதல் குடிநீர் தேவைக்காக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கி புதிதாக 10 மேல்நிலை தொட்டிகள் அமைக்கப் பட்டு விநியோகம் நடக்கிறது. குடிநீர் தொட்டி சுற்றி உள்ள இடங்களில் இளைஞர்கள், சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்துவருகிறது. இது போன்ற பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் ராஜபாளையம் மேல்குடிநீர் தொட்டிகளில் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி கண்காணிப்பு கேமரா அமைத்து சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புலிகள் காப்பக மலைப்பகுதியாக தேவதானத்தில் இருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்துார், வத்திராயிருப்பு, சாப்டூர் வரை நீடிக்கிறது. இந்த மலைப் பகுதியில் புலிகள் கரடி, யானைகள்,சாம்பல் நிற அணில்கள் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகள் உட்பட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளது.புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் தலைமையில் நான்கு வனச்சரகர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் இவற்றைக் காக்கும் பொருட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலையில் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.சமூக விரோத கும்பல்கள் வனப்பகுதிக்குள் புகுந்து மான் வேட்டையில்தொடர்ந்து , செயல்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து வழக்குகள் பதிவு செய்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற ஜாமின் பெற்று மீண்டும் வனவிலங்குவேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் இப் பகுதியில் வனவிலங்குகள் வேட்டைஎன்பது தொடர்கிறது.கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமித்தும், மலையடி வாரத்தில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்தும், விவசாயிகள் அல்லாத தனி நபர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதிக்கு வருவதை தடுக்கவும், வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் மேல்நிலைப் பள்ளிகள், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரயில் பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் கடந்து செல்லும் நிலையில் பெயரளவிற்கு சீரமைக்கும் பணி நடப்பதை ஆய்வு செய்து முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி சீரமைக்க வேண்டும். ராஜபாளையம்நகர் பகுதி ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டே ஷன் செல்வதற்கு ரயில்வேபீடர் ரோடு அமைந்துள்ளது. அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளிகள், துவக்கப்பள்ளி அமைந்துள்ள நிலையில் 24 மணிநேரமும் ரயில்கள் வந்து சென்று பயணிக்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.புது பஸ் ஸ்டாண்ட் செல்வதை எதிர்க்க பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள்இந்த ரோட்டை பயன்படுத்துகின்றன. ஆறாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் உபயோகிக்கும் இச்சாலையில் உள்ள சீரற்ற மேடு பள்ளங்கள் ஆபத்தை விளைவிப்பது டன், வேக கட்டுப்பாடு குறியீடுகள், பாதசாரிகள் நடைமேடை, எச்சரிக்கை பலகைகள் என எதுவும் செயல்பாடு இல்லை.முழுமையாக மேடு பள்ளங்கள் இன்றி ரோடுகளை மேம்படுத்திபாதுகாப்பு குறியீடுகள் அமைத்து வேகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திவிபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
ராக்காச்சிஅம்மன்கோயில் பாதையில்,ராஜபாளையம் மேற்குதொடர்ச்சிமலைஅடிவாரம் ,ஓடைக்காடுபகுதியில் தென்னை மரங்களும், ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்களை கடந்த ஒரு வருடத்திற்கும்அதிகமாக முருகன் குத்தகை எடுத்து 20 ஏக்கர் விவசாயம் செய்து பராமரித்து வந்தார் இரவுநேரத்தில் தோப்பிற்குள் புகும் யானை கூட்டம் வாழை மரங்களை ஒடித்துசேதப்படுத்தியதுடன், தென்னை மரங்களையும் கடந்த சில நாட்களாக சாய்த்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நாட்களில் பயன் தரக்கூடிய வாழை மரங்கள் முழு வதும் யானை கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள் ளது. வனத்துறையினர், வருவாய்த் துறையினர் இழப்பீடை அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயி முருகன் எதிர்பார்த்துள்ளார் .
.2023ல் ரூ.8.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்டிலிருந்து தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு நேரடிஇணைப்பு ரோடுபணிகளுக்காக,. பெரியாதிகுளம், கடம்பன்குளம்கண்மாய்பாசனபகுதிவழியே 30 மீட்டர்அகலத்தில் 2.10 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில்ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பிப்.8ல் அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதத்திற்குள் பணிகள் முடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு 18 நீர்வழி பாலங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாசன வயல்களுக்கு நடுவே இணைப்பு சாலை செல்வதால் வாய்க்கால் தண்ணீர் மறுபக்கம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான நெல் வயல்கள் பாசனத்திற்கு வழியற்ற நிலை ஏற்பட்டடுள்ளது . பணிகள் தொடங்கி ஏற்கனவே ஒரு போகம் நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் தாமதத்தால் தற்போது முதல் போக சாகுபடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்காலுக்கு தடையின்றி தண்ணீர் போக வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.