25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் 2025-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை பதிவுபெற்ற தொழிற்சாலைகள் இணையதளம் வாயிலாக புதுப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் 2025-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை பதிவுபெற்ற தொழிற்சாலைகள் இணையதளம் வாயிலாக புதுப்பிக்கலாம்

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் உரிமம் புதுப்பித்தல் மற்றும் இதர நடைமுறைகள் ONLINE மயமாக்கப்பட்டு உள்ளதால் விருதுநகர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் ஆட்சி எல்கைக்குட்பட்ட பதிவுபெற்ற தொழிற்சாலைகள்  2025-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை ONLINE   மூலம் www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக உரிமம் புதுப்பிக்க 31.10.2024 அன்று கடைசி நாள் ஆகும்.

 உரிமக் கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தவேண்டும். 01.11.2024-க்கு பின் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் தொழிற்சாலைகள் தாமதக் கட்டணம் செலுத்தவேண்டும்.பதிவேற்றம் செய்யப்பட்ட உடனேயே தங்களது தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்கப்பட்டு இணையவழி முறையிலேயே வழங்கப்படும். உரிமம் புதுப்பிக்கப்பட்டவுடன் படிவம் -2 (3 நகல்கள் அதில் 1-ல் ரூ.5-க்கான நீதிமன்ற கட்டணவில்லை), உரிம நகல் (படிவம்-4) மற்றும் இதர ஆவணங்களை கையொப்பமிட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே உரிய காலத்தில் உரிம கட்டணம் செலுத்தி தொழிற்சாலை உரிமத்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் விருதுநகர் அலுவலக தொலைபேசி எண். 04562 269115-ல் தொடர்பு கொள்ளலாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News