25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களின் எதிர்பார்ப்பு

Jan 18, 2024

இராஜபாளையம் காமராஜ் நகர் 20-வது வார்டில் குப்பையால் சுகாதாரக்கேடு

இராஜபாளையம் காமராஜ் நகர் 20-வது வார்டில் ,பழைய பஸ்டாண்ட் பின்புறம் காமராஜ் நகர் 6 தெருக்கள், சர்ச் தெரு ரயில்வே பீடர் ரோடு, வடக்கு பகுதி, செவல்பட்டி தெற்கு தெரு ஆகியவை இவ்வார்டில் உள்ளன. நகராட்சியிலேயே அதிக வரி வருவாய் வரும் ஏ பிரிவில் இருந்தும் போதிய மின்விளக்கு, குப்பை அகற்றும் பணி நடைபெறுவதில்லை. சமூக விரோதிகள் நடமாட்டம், திருட்டு அதிகளவில் உள்ளது. தினசரி தூய்மை பணி செய்தல், குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல், சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல், வேண்டும் என இந்த வார்டு மக்கள் எதிர்பாதிக்கின்றனர். 

Jan 17, 2024

பேங்கர்ஸ் காலனி பகுதியில் நாய்கள் தொல்லை

இராஜபாளையம் மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி பேங்கர்ஸ் காலனிகுடியிருப்போர் நாய்கள் தொல்லை, மழைநீர் கழிவுநீர் செல்ல வாறுகால் வசதி இல்லை, சமூக விரோதிகள் நடமாட்டம் உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர், வாறுகால் இன்றி வெளியேற்றப்படும் கழிவுநீரோடு, மழைநீர் ஆங்காங்கு தேங்கி நிற்பதால் பகல் நேரங்களிலும் கொசு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். திருவள்ளுவர் நகரிலிருந்து நுழையும் பகுதி மின்விளக்கு வசதியில்லை. இதனால் இருட்டில் நின்றபடி  வேறு பகுதியில் இருந்து வரும் சிலர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.போலீசாரின் ரோந்தும் கண்காணிப்பு கேமராவும் அவசியமாகிறது என்று கூறுகின்றனர்.  

Jan 04, 2024

காதுகளை செவிடாக்கும் பஸ்கள்

 பஸ் எப்படி காதை செவுடாக்கும் என்கிறீர்களா ? நம் நகரில் உள்ள தனியார் பஸ்கள் மக்களை கவர்கிறோம் என்ற பெயரில் காதுகளை செவிடாக்கும் வகையில் ஸ்பீக்கர்களை அலறவிட்டு ஒட்டுகின்றனர். பஸ்களில் பயணிக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு  ஆளாகின்றனர்.ஆரம்பத்தில் பயணிகளுக்கு இது பிடித்தாலும், தற்பொழுது செல்போனில் ஹெட்போன்வைத்துக் கேட்கும் காலமாகிவிட்டது. இது தேவையில்லை. கண்டக்டர்களிடம் சப்தத்தைக் குறைக்கச் சொன்னாலும் குறைப்பதில்லை இதை யார் தடுப்பது என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jan 03, 2024

அதிகரித்து வரும் பார்த்தீனிய செடி பரிதவிப்பில் விவசாயிகள்

இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி கண்மாய் ஒட்டிய இடங்களில் நெல், வாழை, கரும்பு பயிர்களும், மற்ற இடங்களில் தென்னை, மா உள்ளிட்ட தோப்புகளும் சீசனுக்கு ஏற்ற பயிர்கள் சாகுபடி அதிகம். .இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்துள்ள நிலையில் விவசாய தோப்புகளில் தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. இந்நிலையில் சீரான இடைவெளிகளில் உழவு பணிகள் மேற்கொண்டும் பெய்து வரும் மழையால், பார்தீனிய களைச் செடிகளை கட்டுப்படுத்த தெரியாமல் விவசாயிகள் தவிப்பில் உள்ளனர். பார்த்தீனிய களைச் செடிகளை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Jan 02, 2024

குழாய் உடைப் பால் வளைவில் தடுமாறும் வாகனங்கள்

 இராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர் காத்த அய்யனார் கோவில், ஆறு,மூலிகை சித்தர் மடம் ,அருகாமை பகுதியில்  6 ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையினர் மெயின்ரோட்டை அகலப்படுத்தி சீரமைத்தனர்.விவசாய தோப்பு பகுதிகளை நாடும் மக்கள் போக்கவரத்து அதிரித்தது முடங்கியார் பாலம் அடுத்து ரோடு வளைவில் மெட்ரிக் பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகி வருகிறது. மூன்று ரோடு சந்திப்பாக அமைந்த இந்த ரோட்டில் இருந்து விவசாய நிலங்களுக்கும், கணபதி சுந்தரநாச்சியார்புரம், புதூர் கிருஷ்ணாபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் இணைப்பு ரோடாக இருந்து வரும் நிலையில் வாகனங்கள் சென்று மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் குழாய் உடைப்படை சரிசெய்து சாலையை சீரமைக்க வேண்டும் என  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 28, 2023

இராஜபாளையம் முதல் பிளாட்பாரத்திற்கு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மாற்றி பயனாளர்கள் அணுக வசதி செய்யக் கோரிக்கை.

முதலாம், இரண்டாம் பிளாட்பார்மில் இருந்து தான் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளான திருட்டு, பொருட்கள் ஆட்களை தவற விடுதல். விபத்துக்கள் குறித்து ரயில்வே போலீசாரிடம் முறையிட வேண்டும். மூன்றாவது பிளாட்பார்மில் போலீஸ் ஸ்டேஷன் இருப்பதால், நடைமுறை சிக்கலால் புகார்கள் விடுபடுகின்றன. போலீசாரும் ஒவ்வொரு முறையும் நடைமேடை ஏறி இறங்கி ஸ்டேஷன்களுக்கு செல்வதில் சிரமம் உள்ளதால் மாற்ற, வழி காணவேண்டும்.தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில் ஸ்டேஷன் மேம்பாட்டிற்கான கட்டட பணிகள் துவங்க உள்ள நிலையில் பயணியர் சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் முதலாவது பிளாட்பார்மில் மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 15, 2023

இராஜபாளையம் ஊருணிகளில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இராஜபாளையம் நகராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் 50 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊருணிகள் உள்ளன. நகரை ஒட்டிய பெரிய கண்மாய்களான புளியங்குளம், பிரண்டைகுளம், கொண்டநேரி, பெரியாதிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் முழு அளவிலும் சிறிய அளவிலான ஊருணிகள் ஆகாய தாமரை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.இதனால் பறந்து விரிந்த கண்மாயின் தண்ணீரை வெளியே தெரியாதபடி மறைத்து பசுமை போர்த்தியது போல் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் வளரும் மீன்கள் உள்ளிட்ட உயிர்கள் வாழ்வதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் கொசுப்புழு உற்பத்தி கேந்திரமாக மாறி விடுகிறது.தண்ணீரும் விரைவில் ஆவியாவதுடன் கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆகாய தாமரையின் கிழங்குகள் அடைத்துக் கொண்டு தண்ணீர் தேங்க முடியாமல் செய்கிறது. மேலும் மடைகளில் தண்ணீர் வெளியேற சிக்கல் உண்டாகிறது. இதே நிலை தொடர்ந்தால் அனைத்து நீர் நிலைகளுக்கும் ஆகாய தாமரை பரவி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சாகுபடிக்கு தடை ஏற்படுத்தும் ஆகாய தாமரையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 12, 2023

.பஸ் ஸ்டாண்ட் நுழைவு ரோட்டில் இணைப்பு பகுதியை வாகன ஓட்டிகளுக்கு தடை

ராஜபாளையத்தில் இருந்து புது பஸ் ஸ்டாண்டில் உள் நுழையும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பும் போது ரோட்டை ஒட்டிய பகுதியில் பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்கப்படாமலும், மேடு பள்ளமாக காணப்படுவ தால் சற்று தள்ளி சென்றுஉள் நுழைகிறது.இதனால்திருநெல்வே லியில் இருந்து எதிரே வரும்  வாகனங்களும், பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்து மெயின் ரோட்டிற்கு வரும் ஆட்டோக்கள், டூ வீலர்கள் உள்ளீட்ட வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.பஸ் ஸ்டாண்ட் நுழைவு ரோட்டில் இணைப்பு பகுதியை வாகன ஓட்டிகளுக்கு தடை ஏற்படாதவாறு சரிசெய்ய  வேண்டும் என்று  இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்...

Nov 21, 2023

இருள் சூழ்ந்த இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் 

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளுக்காக இடிக்கப்பட்டு புதிய கட்டுமானபணிகள் நடந்து வருறது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் முன்புறம் எரிந்து வந்த மின்விளக்கும் பழுதடைந்தது. பெண்கள் பாதுகாப்பு கருதி போலீசார் அருகில் உள்ள பெட்ரோல்|பங்க் நிர்வாகத்தினரிடம் கேட்டு தற்காலிகமாக பல்ப் வசதி செய்திருந்தும் வெளிச்சம் போதிய அளவு இல்லாமல் அகற்றும் நிலை ஏற்பட்டது.இதன் அருகாமை பகுதியை திறந்த வெளி கழிப்பறையாக  ஆண்கள்பயன்படுத்துவதும், அருகிலேயே ஒயின்ஷாப் இருந்து சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் மாலை முதல் இரவு வரை தினமும் பெண்களின் நிலை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகிறது. பெண்களின் பாதுகாப்பு கருதியாவது நகராட்சி நிர்வாகம் உடனடியாக, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Nov 17, 2023

போக்குவரத்தை பாதித்த தொடர்மழை

தொடர் மழையில் மலையடிப்பட்டி சஞ்சீவிமலை பகுதியில் இருந்து ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே வரும் மழைநீர் பாதிப்பால் பாலத் தடுப்பு சுவர், ரோட்டின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்துள்ளது.இராஜபாளையம் நகர் நடுவே செல்லும் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப் பாதையாக தஞ்சை மார்க்கெட் பகுதியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் வழியாக செல்லும் டி.பி.மில்ஸ் ரோடு இருந்து வந்தது. ரயில்வே மேம்பால பணிகளுக்காக முடங்கி இருந்த இந்த ரோடு தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் சென்ட்ரல் பேங்க் அருகே தரைப்பால ரோடு மழையால் ஒரு பகுதி உபயோகிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு விட்டது. தடையற்ற போக்குவரத்திற்காக பாலத்தை மீண்டும் பலப்படுத்தி அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 2 3 4 5 6

AD's



More News