25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


குருவை மிஞ்சிய சிஷ் யன்,  விஸ்வநாதன் ஆனந்தை வென்றார் பிரஞ்ஞானந்தா!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குருவை மிஞ்சிய சிஷ் யன்,  விஸ்வநாதன் ஆனந்தை வென்றார் பிரஞ்ஞானந்தா!

இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஐந்து முறை ,உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சக வீரர் பிரஞ்ஞானந்தா மோதினர். கடைசியாக 2018-ல் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் இருவரும் மோதினார். தவிர ஆனந்த் பயிற்சியில் வளர்ந்த பிரஞ்ஞானந்தா, தற்போது 6 ஆண்டுக்குப் பின், மீண்டும் அவருடன் மோதியதால் எதிர்பார்ப்பு எகிறியது.

காலிறுதியில் முதல் இரு போட்டியும் டிரா ஆக, ஸ்கோர் 1.0 1.0 என சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி டைபிரேக்கருக்கு சென்றது. இதில் ஆனந்த், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்தே பிரக்ஞானந்தா ஆதிக்கம் செலுத்தினார்.22-வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தார். இதைச் சரியாக பயன்படுத்திய பிரஞ்ஞானந்தா, 26 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 2-0 1-0 என வென்று ,அரையிறுதிக்கு முன்னேறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News