ராகி பஜ்ஜி
தேவையானவை :
ராகி மாவு -1 கப், கடலை மாவு-1 கப், மிளகாயத்தூள்-1 டீஸ்பூன், வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு அல்லது பெரிய வெங்காயம் - தேவைக்கு, சமையல் சோடா - 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவைக்கு.
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சோடா, தேவையான உப்பு சேர்த்து, வேண்டிய தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு அல்லது பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான ராகி பஜ்ஜி ரெடி.இது நார்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த சத்தான தானியமாகும்.
0
Leave a Reply