25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களின் எதிர்பார்ப்பு

Nov 02, 2023

ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு

ராஜபாளையத்தில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு ராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள ரோடுகளில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தால் பொது மக்கள் பாதித்து வருகின்றனர்.நம் நகரில் உள்ள முடங்கியாறு ரோடு, ரயில்வே பீடர் ரோடு, டி.பி மில்ஸ் ரோடு இது தவிர தென்காசி தேசிய நெடுஞ்சா லையில் ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் நகராட்சி அதி காரிகளிடம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு பற்றி அளவீடு செய்து குறியிட்டு சென்றனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முறையான ஒத்துழைப்பு நகராட்சி சார்பில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது ..ராஜபாளையம் நகராட் சிக்கு உட்பட்ட 15 வது வார்டில் பழைய பஸ்ஸ் டாண்டு எதிரே செல்லும் வடக்கு, தெற்கு தெரு உள்ளிட்ட ஏழு தெருக்கள், ஊரணிப் பட்டி தெரு, இதனை ஒட்டிய இரண்டு பக்க மெயின் ரோடு ஆகியவை இவ்வார்டில் உள்ளது.. பள்ளமான ரோடு, துார்வாராத வாறுகால், நாய் கள் தொல்லை, வாகனம் ஆக்கிரமிப்பு உட்பட பல் வேறு பிரச்சனைகளில் சிக்கி ராஜபாளையம் நக ராட்சி 15 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்,மெயின் தெருக்களை தவிர குடியிருப்பின் அனைத்து பகுதி குறுக்கு தெருக்கள் தாமிரபரணி, பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு செப்ப னிடாமல் விட்டுள்ளனர்.ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருக்கு ராஜபாளையம் நகரமைப்பு அலு வலகம் முறையான ஒத்துழைப்பு வழங்கி தடை யற்ற போக்குவரத்திற்கு வழி காண வேண்டும். என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Oct 14, 2023

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் பயணிகள் ரோட்டில் நிற்கும் அவலம்.

பழமையான கட்டடங்களினால் ஆபத்து ஏற்படும் காரணம் கூறி, ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள், இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. ஒரு ஆண்டிற்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்புடன் தொடங்கி ,இடையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஆயிரக்கணக்காகன பயணிகள், மாணவிகள், நோயாளிகள், நின்று செல்லும் பகுதிகளுக்கு அடிப்படை வசதியான குடிநீர், போலிஸ் பாதுகாப்பு, மின்விளக்கு, கழிப்பறை, நேர தகவல் பலகை அமைத்து தருவதுடன் சுற்றுப்பகுதியை சுகாதாரமாக வைக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவில் படி பழைய பஸ்டாண்ட் பணிகளை வேகப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

Sep 22, 2023

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டில் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் முழுவதும் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் கடந்து சென்று வரும் நிலையில் இதற்காக காத்து நிற்கும் மாணவிகள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு வழி இன்றி சிக்கலை சந்திக்கின்றனர்.. ஏற்கனவே இருந்த கழிப்பறைகளில் பெண்கள் சுகாதார வளாகம் மட்டும் பஸ் ஸ்டாண்டின் பின்புறம் இடிக்காமல் விட்டுள்ளனர்.. .கட்டுமான பணி முடியும் வரையாவது பெண்கள், மாணவியர் பாதுகாப்பு கருதி பஸ் நிறுத்தம் அருகே, தற்காலிக ம் சுகாதார வளாகம் ஏற்படுத்தி பராமரிக்க வேண்டும் என மக்கள் எதிபார்க்கின்றனர்.

Sep 19, 2023

இராஜபாளையத்தில் குவி லென்ஸ்கள் அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

இராஜபாளையம் நகர் பகுதி வழியே கேரள மாநிலத்துக்கு செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நாளுக்கு பல்லாயிரக்கணக்கான நாள் பெருகிவரும் வாகனங்களால் வாகனங்கள் இந்த ஒரே ரோட்டினை பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. நீண்டகாலமான மாற்று வழியாக இருந்து வந்த டி.பி.மில்ஸ் ரோடும் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை செயல்பாட்டுக்கு வராததால் முடங்கியுள்ளது. நகராட்சி மக்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஒன்றே உபயோகிக்கும் ரோடாக இருந்து வருவதும், ஏற்கனவே இதை குண்டும் குழியுமாக செப்பனிடாமல் இருப்பதும் வகன ஓட்டிகளை தொடர் விபத்துக்கு ஆளாகி வருகின்றன.இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை பிரதான வளைவுகளில் வைக்கப்பட்டிருந்த குவி லென்ஸ்கள், மிளிரும் விளக்குகள், விழிப்புணர்வு பதாகைகள் விபத்து தடுப்புகளில் நல்ல பலனை அளித்து வந்தன். நாளடைவில் பராமரிப்பற்று அவை செயல்பாடு இன்றி போயின. ஏனவே மக்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி நெரிசல் மிகுந்த பஞ்சு மார்க்கெட், காந்திகலைமன்றம், சங்கரன்கோவில் முக்கு, டிபி.மில்ஸ் ரோடு, ஹாஸ்பிடல் ரோடு, ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட இடங்களில் குவி லென்ஸ்கள், விழிப்புணர்வு பதாகைகள் வைப்பதற்கு போக்குவரத்து அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sep 16, 2023

அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு

இராஜபாளையம் நகரில் அரசின் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு குறித்த அறிவிப்பை கொடுத்தும், கண்காணிப்பின்றி குறையாத பழக்கத்தினால் நீர் வரத்து தடங்களில் அடைப்பு ஏற்படுவதுடன் நீரின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.ஆரம்பத்தில் இது குறித்து வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தவிர்க்குமாறும், உபயோகம் கண்டறிந்தால் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இவற்றையும் மீறிமார்க்கெட்,பூக்கடை,இறைச்சிகடைகள்,ஓட்டல்கள்,ரோட்டோரகையேந்திபவன்கள் என அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது .பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மழை நீர் வரத்து கால்வாய்கள், கண்மாய்கள், சாக்கடைகளில் கொட்டப்படுகின்றன.இவை மழைகாலங்களில் ரோட்டோர வடிகாலை விட்டு சாக்கடைநீர் நடை பாதைகளில் தேங்கி நிற்பதும், கொசு உற்பத்திக்கும் ஏதுவாக மாறி வருகிறது. கடைகளில் விவசாயிகளுக்கு ஆதாரமான கண்மாய்களில் மலையளவு குவிந்து கேட்பாரற்ற நிலைக்கு விவசாயிகளை தள்ளி விடுகிறது.பிளாஸ்டிக் பயன்பாட்டினை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து தடை செய்வதுடன் தொடர் அபராத நடவடிக்கைகளை பின் பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்..

Aug 28, 2023

ராஜபாளையம் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை தேவை

ராஜபாளையம் நகர்ப் பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரையிலான விவசாய பகுதிகளில் மானாவரி பயிர்களான எள், உளுந்து, அவரை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து தானியங்களை பிரிக்க விவசாயப் பகுதிகளில் இருந்து மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து உலர்த்தி தானியங்களை பிரித்து எடுத்தபின்கழிவுகள் ரோட்டோரம் விட்டு செல்வது தொடர்கதையாகிறது.இதில் சிலர் தீ வைப்பதால் சமூக ஆர்வலர்களால் பாதுகாத்து வளர்க்கப்படும் பச்சை மரங்கள்கருகி தீக்கிரையாவதுடன் மின் ஓயர்கள் பாதிப்பு என்பது தொடர்கிறது.ஏற்கனவே ஆலமரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் கருகி சேதம் அடைந்துள்ளன.இதே நிலை அப்பாள் ராஜா ஊரணி, தாட்கோ காலனி, ராஜூக்கள் கல்லுாரி அருகிலும், அலுமினியம் கம்பெனி, தனியார் மூலிகை கம்பெனி, முடங்கியார் பாலம் அடுத்த வனத்துறை குடியிருப்பு என ரோட்டோர பகுதிகளில் விவசாய கழிவுகள் எரிப்பது தொடர்கிறது.விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதை வனத்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்..

Apr 13, 2023

. ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பேருந்து நிலையத்தில்பயணிகள் வசதிக்காக உள்ள தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும்

.ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதன் அருகே செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஊராட்சி வணிக வளாகம், வங்கி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளனஇங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி கடந்த2021ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்கப்படாமல் பயன்பாடின்றிசேதமடைந்து உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் குடிநீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பயணிகள் வசதிக்காகபேருந்து நிலையத்தில் உள்ள தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Apr 05, 2023

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலப் பணிகள் மற்றும் அதன் கீழ் இரண்டு பக்கமும் சர்வீஸ் ரோட்டிற்கான பணிகள் நடந்து வருகிறது.ரோட்டின் ஒரு பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, குடிநீர் ரோட்டில் வழிகிறது.ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர் ரோட்டில் குழாய்  உடைப்பால் குடிநீர் வீணாகி வருவதுடன், மேம்பாலம் கீழ்பகுதியில் ஒரு பகுதியில் போக்குவரத்து பாதித்து வருகிறது. ஏற்கனவே மண்ரோடாக உள்ளதால் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இப்பகுதியினர் போக்குவரத்தை பயன்படுத்த முடியாமல், சகதியாக மாறி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே குழாய் உடைப்பை சீரமைக்க உடனடி நடவடிக்கை வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்.

Jan 18, 2023

பழைய பஸ்ஸ்டாண்ட் பணியை துவங்க

ராஜபாளையம் நகராட்சி ஒரு லட்சத்திற்திகும் மேல் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது.. ஏற்கனவே நகர் பகுதி நடுவே இயங்கி வந்த பழைய பஸ் ஸ்டாண்ட், நெருக்கடி காரணம் காட்டி 2006 ல் சங்கரன் கோவில் ரோட்டில் ஒருங்கிணைந்த புது பஸ் ஸ்டாண்ட் துவங்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் நலன் என்று கூறி பல்வேறு அரசியல் காரணங்களினால் முழுமையாக இயங்குவது தடை ஏற்பட்டது.. இதனால் பழைய பஸ் ஸ்டாண்டில் டவுண் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது -2018ல் தொடங்கி தற்போது வரை முடிவடையாத ரயில்வே மேம்பால பணிகளால் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த தென்காசி மெயின்ரோடு, ஒரு வழி பாதை மாற்று வழியான டி.பி.மில்ஸ். ரோடு முடக்கத்தால் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகி வருகின்றன. தற்போது அறிவிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர்  செல்ல வேண்டிய டவுன் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டுடன் திரும்புவதை விட்டு , புது பஸ்டாண்ட் வரை செல்வதால் , பி.ஏ.சி.ஆர் சிலை, காந்தி கலைமன்றம் , தென்காசி மெயின் ரோடு வழியே , சங்கரன் கோவில் முக்கு பகுதியில் மொத்தமாக நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.. பிரச்னைகளுக்கு தீர்வாக, புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தென்காசி ரோடுக்கான இணைப்பு ரோடு பணியை , முடித்த பின்பும், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் முடிவடைந்த பின்பும் ,பழைய பஸ்ஸ்டாண்ட் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sep 23, 2022

இராஜபாளையம் நகர சாலைகள் சரக்கு வண்டிகளால் பாதிப்பு

நம் நகரில் மேம்பாட்டு பணிகள், ரயில்வே பாலம், பாதாள சாக்கடை, தாமிரபரணி நீர்வழித்தடம் போன்ற பணிகளால் ரோடு ரோடாகவே இல்லை. குண்டும், குழியுமாக தோண்டி, மூடாமல் பாதைகளை சீரழித்து உள்ளனர். இவற்றில் சரக்கு லாரிகள் கடைகளுக்கு முன்பு நிறுத்தி சரக்கை இறக்கி வருகின்றனர். இதனால் வேறு சாலை போக்கு வரத்தில் மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இந்த அதிக நெருக்கடிகளை சமாளிக்க சரக்கு வண்டிகள் மதியம்  1 மணியிலிருந்து 4 மணி வரை வர அனுமதித்து மற்ற நேரங்களில் தடை செய்யலாம். இவற்றை போக்குவரத்து போலிஸார், நகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜபாளையம் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 2 3 4 5 6

AD's



More News