25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான சோதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பான சோதனை

  விருதுநகர் மாவட்டம், உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருத்த கடைகளுக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து,  கடந்த  ஒரு வாரத்தில் (19.05.2024 முதல் 25.05.2025 வரை) உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து பெட்டிக் கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்த புகையிலை பொருட்கள் உள்ளதா என  சோதனை நடத்தினர். அதில் 16 பெட்டிக்கடைகளில் 20 கிலோ 350 கிராம் எடையுள்ள ரூபாய் இருபதாயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 16 பெட்டிக்கடைகள் சீல் வைக்கப்பட்டு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக  தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும.3-வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும்.
 இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு  வைப்பது  கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News