25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


மக்களின் எதிர்பார்ப்பு

Nov 21, 2024

தொடர் விபத்துக்கு உள்ளாகி வரும் சத்திரப்பட்டி ரோடு

ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அடுத்த சத்திரப்பட்டி ரோட்டில் இருந்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகம். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்லும் இப்பகுதியின்  போக்குவரத்து  நெரிசல் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரோட்டை அகலப் படுத்தியதுடன் வாகனங்கள் முந்துவதை தவிர்க்க மேம்பாலம் அடுத்த பகுதியில் இருந்து பொன்னகரம் நுழைவு பகுதி வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.இந்நிலையில்  சாலையில் ஏற்பட்டுள்ள  பள்ளங்கள், ஆக்கிரமிப்பு, சென்டர் மீடியன் பகுதிகளில் வாகன ஒட்டிகள்  காணும் விதமான ரிப்லக்டர் இல்லாதது, மரக்கிளைகள் ரோடு வரை படர்ந்து வாகனங்கள் ஒதுங்க முடியாது, ,  சென்டர் மீடியன் அருகே மணல் குவிந்துள்ளது போன்ற பல சிக்கல்களால் இப்பகுதி வாகன ஒட்டிகள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் கவனிப்பார்களா? இப் பகுதி  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Nov 20, 2024

பஸ் வசதி இன்றி தென்றல் நகரில் ராஜபாளையம் மக்கள் தவிப்பு

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத்தோப்பு ரோட்டில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.நகர் பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில்  அமைந்துள்ள இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்களுக்கு செல்ல முறையான அரசு பஸ் போக்குவரத்து, மினிபஸ்  போன்ற வாகன வசதி இன்றி தவிக்கின்றனர். அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், ராம் நகர், இந்திரா நகர், பச்சை காலனி, சக்தி நகர், சாஸ்திரி நகர், பேங்கர்ஸ் காலனி, தென்றல் நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல ஆட்டோக்கள் மட்டுமே ஒரே வழி. ஆட்டோக்களில் அவசரத்திற்கு வந்து செல்ல ரூ.200 வரை கட்டணம் ஆகிறதுவசதி வேண்டி தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Nov 18, 2024

செயல்பாட்டிற்கு  வராத அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.

 ராஜபாளையத்தில், அமைக்கப்பட்டு வரும் 864 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் துவங்கி 4 ஆண்டுகள் கடந்தும் ஒப்படைப்பு பணிகள் முடியாதது, குறித்து  ஏக்கத்தில் உள்ளனர். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக மொத்தம் 864 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோட்டில் இடம் தேர்வு செய்து கடந்த 2020 மே மாதம். பூமி பூஜை நடந்து.  கட்டுமானப்பணி கொரோனாவால் தாமதமானது. பின் கட்டட பணி முடிந்தும்  மின் இணைப்பு வழங்காதது, பூங்கா அமைப்பதில் தாமதம், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் முடிவு பெறாதது என பல்வேறு காரணங்களால் தாமதமாகி கட்டட பணிகளுக்கு அடுத்து பயனாளிகள் தேர்வு, ஒப்படைப்பு என தாமதம் தொடர்கிறது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் விரைந்து ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டு பிப். மாதம் பணிகள் முடிந்தும் தற்போது வரை தாமதிப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர் .

Nov 13, 2024

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி,

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை, திருப்பூர், நாமக்கல், தேனி, தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பெரிய, சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தினமும் 400 டன்னிற்கு அதிகமாக சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இதன் உற்பத்தி தற்போது திண்டுக்கல் மட்டுமல்லாமல் பிற் மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இதனால் 2 நாட்களாக திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைந்து கிலோ ரூ.20க்குவிற்பனையானது.தற்போது மழைக்காலம் என்பதால் அவைகள் நனையாமல் இருக்க குடோன்களில் பாதுகாக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றை விற்க முடியாத மொத்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்துநீடித்தால்இன்னும்இதன்விலைகுறையவாய்ப்புள்ளதாகவியாபாரிகள்தெரிவித்தனர்.உற்பத்திவிவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.

Nov 12, 2024

சாலை ஓரம்  நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்.

ராஜபாளையம் நகர்பகுதியில் செல்லும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். கர் ஏற்கனவே நீண்ட வருடங் களாக ஆக்கிரமிப்பு அகற்றாமலும், சாலையோர மின் கம்பங்களை ஓரமாக நகற்றி வைக்காமலும் ரோட்டின் அகலம் குறைந்துள்ளது.இந்நிலையில் பஞ்சு மார்க்கெட் அடுத்த வளைவு பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலை ஓரத்தையே, வரிசையாக டிப்போவாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டிரிப் முடிந்து மீண்டும் இயக்குவதற்கு நிறுத்த இடமின்றி இவ்வாறு செய்கின்றனர்.இதனால் வெளியூரிலிருந்து புதிதாக வரும் லாரிகள், சுற்றுலா பஸ் கள், கனரக வாகனங்கள் வளைவில் முந்தும்போது விபத்துகளை சந்திக்க நேர்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியும் வரை விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும் என மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Nov 09, 2024

ராஜபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையை மண் போட்டு மூடப்பட்டதால் மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.

 ராஜபாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தை இலகு ரக வாகனங்கள்  கடக்க சுரங்கப்பாதை ரூ.3 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்டவாளம் கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்டு சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் , பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் தற்போது பணிகள் முடிந்த நிலையில், நகர் பகுதி இணைக்கும்  அணுகு சாலை பணிக்கு ஒத்துழைப்பு இல்லை."தொடர்ந்து ஏற்பட்ட  தாமதமும் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்  பாதையின் நிலைத்தன்மை பாதுகாக்க வேண்டி மண் போட்டு மீண்டும் மூடி விட்டனர்., அரசு துறையினர் இடையே பிரச்னையால் ஏற்பட்டுள்ள ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்  பாதையை மண் போட்டு  மூடப்பட்டதால் விரக்தியடைந்துள்ளனர்.

Nov 06, 2024

இளைஞர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆற்று ஓரங்களில் போட்டு உடைப்பதும், தோப்புகளில்  திறந்தவெளி மது கூடங்களாக மாற்றும் அவலம்

மலையை ஒட்டி அய்யனார் கோயில், சேத்துார், தேவதானம் பகுதிகளில் மழைக்காலங்களில் ஆற்று நீர் வரத்து உள்ளது.இவற்றில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர பல  கி.மீ., தொலைவு உள்ள ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்  பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை சேர்த்து வருகின்றனர்.  இளைஞர்கள் மது அருந்தி விட்டு பாட்டில்களை ஆற்று ஓரங்களில் போட்டு உடைப்பதும், தோப்புகளில்  திறந்தவெளி மது கூடங்களாக மாற்றும் அவலம் நடந்து வருகிறது.  மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசி விட்டு செல்வதால் யானைகள், மான்கள்உள்ளிட்ட வனவிலங்குகளின் கால்கள் சேதமாகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.செயல்படாமல் உள்ள செக்போஸ்டை கண்காணித்து நடைமுறைக்கு கொண்டு வரவும், வருவாய்த்துறை போலீசார்  இணைந்து நடவடிக்கை எடுக்கவும், பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Oct 31, 2024

தீபாவளியா ஐய்யய்யோ ?

கங்கா ஸ்நாநம் ஆச்சா ? லோக்கல் டேப் தண்ணிதான்!தீபத்திருநாளில் நரகாசுரனை வதைத்து நியாயத்தை நிலை நிறுத்தியதால் அனைவரும் கொண்டாடுகிறோம். ஆனால் தீபாவளி நாள் தான் வருகிறது, என்று எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள். தெரியுமா ? கேஸ் டெலிவரி செய்பவர்கள், குறவன், முனிசிபல் கிளீனர்கள், வண்ணான் இப்படிப் பலர் நரகாசுரன் வடிவில் வந்து தீபாவளிக்கு காசு கேட்டால்,தீபாவளி யாருக்குத்தான் பிடிக்கும் ?ஏதோ போனஸ் வாங்கி புதுத் துணி எடுத்து பட்டாசு வாங்கி  உறவினர்களுக்கெல்லாம் பலகாரம் கொடுத்து தீபாவளிக்காக பலகாரம் செய்து விட்டு, வேலை செய்பவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்து, ஆபர் சேல் கண்டு ஏமாந்து, இப்படிக் கொடுத்துக் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் தீபாவளி பிடிக்கும் ?வாங்கபவர்களுக்கோ, கொடுப்பவர்களுக்கோ தெரியலையே ! 

Oct 30, 2024

பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்ஷன், கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை

பாதாள சாக்கடை கனெக்க்ஷன், தாமிரபரணி கனெக்க்ஷன், என்று போட்டி போட்டு வீட்டிற்கு 2, 3, தண்ணீர் கனெக்க்ஷன், பாதாள சாக்கடை கனெக்க்ஷன் என்றால் செப்டிக் டேங்க் நிறைந்தால் பிரச்சனை இல்லை என்று எல்லோரும் ஒப்புக் கொண்டனர்.கட்டணம் இவ்வளவு வரும் என்று மக்கள் யாரும் எதிர் பார்க்கவில்லை, ஆனால் தற்போது இதற்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்ட வேண்டும் என கூறுவதாக பொது மக்கள் சொல்கின்றனர். இவர்கள் யார் ? நகராட்சியால் இருந்து வருகிறார்களா ?தாமிரபரணி குடிநீர் நகராட்சியிடம் ஒப்படைக்காத போது பராமரிப்பு செலவினங்களுக்கு யார் பொறுப்பு பராமரிப்பிற்காக ஆட்களை ஒதுக்குவது ஏன் ? மக்கள் புரியாமல் குழம்பி உள்ளனர். இதற்கு யார் பதில் சொல்வார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Oct 28, 2024

இராஜபாளையம் புது பஸ் ஸடாண்டில் செயல்பாட்டிற்கு வருமா 'நம்ம டாய்லெட்'

பஸ் ஸ்டாண்ட்உள்ளிட்ட பொது வெளிகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுத்து கழிப்பறைகளை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டதே 'நம்ம டாய்லெட் திட்டம்' இதில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் கூடிய கழிப்பறை பெண்களுக்காக நவீன தொழில் நுட்பம் உள்ள பைபர் பிளாஸ்டிக்கினால் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் நான்கு அறைகளுடன் அமைக்பப்பட்டது.இதில் தானியங்கி முறையில் சுத்தம் செய்யும் வசதியும், சோலார் மின்விளக்கு, வசதியும் அமைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு சிறிது காலம் செயல்பாட்டில் இருந்த நிலையில், போதிய நீர் வசதி பராமரிப்பு இன்றி, பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் கூட்ட நேரங்களில் இதனை நாட முடியாமல், பெண்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில், இதனைச் சுற்றி திறந்த வெளியாக பயன்படுத்தும் அவலம் நடைபெறுகிறது. நம்ம டாய்லெட் திறக்கப்படாமல் உள்ளதை செயல்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் எதிர்பார்க்கின்றனர்

1 2 3 4 5 6 7

AD's



More News