25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 26, 2025

சாத்தூர் நகராட்சி வார்டு-1 பெரியார் நகரில் புதிய பொது விநியோக கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி வார்டு-1 பெரியார் நகரில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பொது விநியோக கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர். திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Feb 25, 2025

இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியீடு செய்கிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்காக முன்னேற விழைகிற மாவட்டம் திட்டத்தின் (ADP(Aspirational District Program)) கீழ் விருதுநகர் மாவட்டம் ரூ.3 கோடி விருதையும் பெற்றுள்ளது.ஆரம்ப சுகாதார கட்டமைப்பினை மேம்படுத்தி தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, விருதுநகர் பொது சுகாதாரத்துறை "விரு கேர்" (எசைர உயசந) என்ற மாவட்ட தாய், சேய் கண்காணிப்பு மையத்தினை துவங்கியது.கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து 5 வயது வரை தொடர்ந்து அவர்களது உடல் நலத்தில் அக்கறையுடன் செவிலியர்கள் மருத்துவர்கள் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஏதேனும் குறைபாடுகள், உடல் நல தொந்தரவு இருந்தால் உடனடியாக அவர்களை அணுகி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது என சிறப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும், கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு தாய்மார்கள் இறப்பு ஏதும் இல்லாத நிலையை அடைந்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாக விருதுநகர் திகழ்வதாகவும் நிதிஆயோக் பாராட்டியுள்ளது.

Feb 25, 2025

வளரிளம் பெண்களுக்கான இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஜி.எஸ்.டி.மஹாலில் (25.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் - காவேரி படுகை (ONGC) இணைந்து இரத்த சோகையற்ற விருதுநகரை உருவாக்குவோம் என்ற முன்னெடுப்பில், வளரிளம் பெண்களுக்கான இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார்.இந்த திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வளரிளம் பெண்கள் இரத்தசோகையற்ற, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நமது மாவட்டத்தில் உள்ள விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் பெண் குழந்தைகளிடத்தில் இருக்கக்கூடிய இரத்த சோகை குறைபாடு தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஏறத்தாழ 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இரத்தசோகை பாதிப்புடன் இருக்கிறார்கள் என தெரியவருகிறது.இதில் 2 சதவீதமான பெண் குழந்தைகள் ஒரு தீவிரமான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரத்தத்தின் உடைய இரும்புச்சத்தின் அளவு குறைந்து உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். மிதமான இரத்தசோகை பாதிப்புக்குண்டான குழந்தைகள் ஏறத்தாழ 25 சதவிகிதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு  மருந்து, மாத்திரை, தீவிரமான ஊட்டச்சத்துக்கள் மூலமாக சரி செய்ய வேண்டும். மீதமுள்ள 38 சதவிகித குழந்தைகள் உணவு பழக்க வழக்கங்களின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அதிகமாக வலுவை தாங்கக்கூடிய அளவிற்கு கட்டிடத்தை கட்டி எழுப்புவதற்கு போதுமான அளவு அடித்தளம் எப்படி முக்கியமோ, அதுபோல ஒரு மனிதன் 75 ஆண்டு காலம்  சராசரியாக வாழ்கிறார்கள் என்றால், இதில் மிக முக்கியமான நாட்கள் என்பது குழந்தைகளுடைய முதல் ஆயிரம் நாட்கள் ஆகும்.அதாவது ஒரு தாயினுடைய வயிற்றில் அது கருவாக உருவானதிலிருந்து குழந்தையின் உடைய 1000 நாட்கள் என்பது ஏறத்தாழ  இரண்டரை வயது வரைக்கும் அவர்களுக்கு முழுமையான உடல் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்கிறது. அப்பொழுதுதான் அடிப்படையான மூளை வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி எல்லாம் ஏற்படுகிறது.இந்த நேரத்தில் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு அவசியமோ, அது போல் எதிர்கால வாழ்க்கைக்கு மனிதன் வாழக்கூடிய நாட்களில் மிக முக்கியமான உடல் வழு ஏற்படக்கூடிய அந்த பதின்ம பருவ வயதுகளில், அவர்களுக்கான புரதச்சத்தின் மூலமாக ஏற்படக்கூடிய உடல் கட்டுமானம், கால்சியம் சத்தின் மூலமாக ஏற்படக்கூடிய  எலும்பு வலுப்பெறுதல் இவற்றையெல்லாம் சரிவிகித உணவு என்கிறோம். அதாவது எல்லா சத்துக்கள் இருக்கக்கூடிய அளவிற்கு உணவை இருக்க வேண்டும்.உணவு என்பது நம்முடைய பசியை மட்டும் போக்குவதற்கானது அல்ல. இந்த உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரத சத்து, கொழுப்பு சத்து  போன்ற பெரிய அளவிலான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதே போல் பொட்டாசியம் போன்ற சிறிய அளவிலான சத்துக்களும் நமக்கு தேவைப்படுகிறது. நுண் ஊட்டச்சத்துகளும், பெரிய ஊட்டச்சத்துகளும் ஒரு மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அவை பெரும்பாலும் நமக்கு உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால் எந்த உணவில் எந்த சத்துக்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு நாம் எல்லா சத்துக்களும் கிடைக்கக்கூடிய அளவிற்கு நம்முடைய உணவை வைத்துக்கொள்வதுதான் சரிவிகித உணவு.பசியை மட்டும் போக்குவது சரியான உணவு முறை அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் ரத்தத்தில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து அளவை சரியாக கவனிக்கவில்லை என்றால் பின்னால் ஒரு பெரிய பாதிப்புக்குள்ளாகி ஒரு பெரிய அளவிலான மருத்துவ உதவியை நாட வேண்டி இருக்கும்.நாம் சாப்பிட வேண்டிய உணவுதான் நமக்கு மருந்து. அதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தசோகையை தவிர்ப்பதில் மிக முக்கியமானது  இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் அதிகமாக உட்கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகி இரத்த சோகையை சரிசெய்ய இயலும்.ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த உணவு குறித்த புரிதல் மிக அவசியம். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலமாக, நமது பகுதிகளில் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு இரத்தசோகை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து பெட்டகம் என்பது உணவு பொருட்களாகும். சரிவிகித உணவு நன்றாக சாப்பிட்டு வந்தால் அது தான் மருந்து. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று அடிக்கடி வந்து ஹீமோகுளோபின் அளவு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தின் எதிர்காலம் என்பது உடல் நலன் தான்.  இதனை பற்றி நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர்களுக்கும் எடுத்து கூற வேண்டும். நீங்கள் அனைவரும் மிகச்சிறந்த முன்னேற்றத்தை பெற்றிருக்கக்கூடிய மாணவிகளாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து தொகுப்பு வட்டார வாரியாக திருச்சுழியில் 996, நரிக்குடியில் 130, காரியாபட்டியில் 845 மற்றும் அருப்புக்கோட்டையில் 965 ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் முதல் கட்டமாக 245 மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, திருச்சுழி வட்டார மருத்துவ அலுவலர் மரு.புனிதா, மாவட்ட சுகாதார அலுவலர்கள், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் - காவேரி படுகை நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 25, 2025

விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் விபத்து நிகழ்ந்த நாளன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும் இருந்தால் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றியபோது “பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்” என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் – 13, நாள் – 12.02.2025-ன்படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் குழந்தைகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.4,000/-மும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.6,000/-மும், ஆகிய ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் பணப்பலனை பெறவும்,    பட்டாசு தொழிற்சாலை விபத்தில் தாய் தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.2,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) தாய் தந்தை இருவரும் மரணமடைந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.4,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) பெறவும்  10.11.2024-க்கு முன் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10.11.2024 அன்று  18 வயது  நிறைவடையாதவர்களாகவும் 10.11.2024-க்கு பிந்தைய  விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் விபத்து நிகழ்ந்த நாளன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும்  இருந்தால் விண்ணப்பிக்கலாம்.பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவி தொகை பெறமேற்குறிப்பிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு  அரசுக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 10.11.2024 அன்றைய தேதியில் உயர் கல்வி பயிலும் மற்றும் 10.11.2024க்கு பிறகு உயர் கல்வியில் சேரும் குழந்தைகள் எவரேனும் இருந்தால் விண்ணப்பிக்கலாம். .  மேற்குறிப்பிட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஏதுவாக  இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின்   பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம், தொடர்பு அலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “ இணை இயக்குநர், தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம். கதவு எண்- 4, என்.பி.எஸ்.என் ஆறுமுகநாடார் ரோடு,தங்கம்மஹால்முதல்தளம்,சிவகாசி-626123.என்றமுகவரிக்குவிண்ணப்பிக்கும்படியும்,மேலும் விண்ணப்பத்துடன் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விண்ணப்பிக்கும் குழந்தைகளின் பிறந்த தேதி ஆதாரமாக பிறப்புச்சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ்  ஆகியவற்றை இணைத்து அனுப்பும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், இது பற்றி கூடுதல் விவரங்கள் அறிய 9865958876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447 45064 (இணை இயக்குநர், சிவகாசி)  ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 24, 2025

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், வேல்ராஜ் திருமண மண்டபத்தில் (24.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 3 பகுதிகளில் உள்ள 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் ஊரகம், இராஜபாளையம் நகரம்  ஆகிய 12 வட்டங்களில் உள்ள மொத்தம் 1200 கர்ப்பிணிபெண்களுக்குசமுதாயவளைகாப்புவிழாநடத்தப்படுகிறது.அதன்ஒருபகுதியாகஅருப்புக்கோட்டையில் நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர்  (பொ) திருமதி பத்மாவதி, அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி சுந்தரலட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

Feb 24, 2025

வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில்  (24.02.2025) விருதுநகர் வட்டம், ஒண்டிபுலிநயக்கனூர் குறுவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கி வரும் .சத்யபிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.02.2025 அன்று வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என மொத்தம் 7 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.15.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகர் வட்டம், ஒண்டிபுலிநயக்கனூர் குறுவட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கி வரும் மெ/ஸ்.சத்யபிரபு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 05.02.2025 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சம் மற்றும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 இலட்சமும் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்த அருப்புக்கோட்டை வதுவார்பட்டியை சேர்ந்த திருமதி ராமலட்சுமி  என்பவரின் வாரிசுதாரரான (கணவர்) திரு.கோணப்பசாமி என்பவருக்கும், சிவகாசி மீனம்பட்டியை சேர்ந்த திரு.சைமன் டேனியல் என்பவரின் வாரிசுதாரரான  (மனைவி) திருமதி சங்கரேஸ்வரி என்பவருக்கும், சிவகாசி அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி வீரலெட்சுமி என்பவரின் வாரிசுதாரரான  (கணவர்) திரு.ரவிச்சந்;திரன் என்பவருக்கும் என உயிரிழந்த 3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும்,வெடி விபத்தில் காயமடைந்த சிவகாசி அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி கஸ்தூரி  என்பவருக்கு ரூ.2 இலட்சம் மற்றும் விருதுநகர்  கோட்டையூரை சேர்ந்த  திருமதி முருகேஸ்வரி, விருதுநகர் வட்டம் ஆவுடையாபுரத்தை சேர்ந்த திரு.மாணிக்கம் மற்றும் அதிவீரன்பட்டியை சேர்ந்த திருமதி மகாலட்சுமி  ஆகியோர்களுக்கு தலா ரூ.50,000- வீதம் என மொத்தம் காயமடைந்த 4 நபர்களுக்கு ரூ.3.50 இலட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலைகளையும் என ஆக மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.15.50 இலட்சத்திற்கான நிவாரணத்தொகைக்கானகாசோலைகளைவருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 24, 2025

கூட்டுறவுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்  (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில்  கூட்டுறவுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,  அவர்கள் தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 அன்று நிகழ்த்திய சுதந்திர தினவிழா உரையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடனுதவி  அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.  அந்த அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில்முனைவோருக்கு தலா ரூ.3 இலட்சம்  மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா ரூ.2 இலட்சம் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி விருதுநகர் மாவட்டத்தில், பந்தல்குடி, சூலக்கரை, மேட்டமலை-சாத்தூர், முகவூர், கிருஷ்ணன்கோவில், வீரசோழன், சின்னமூப்பன்பட்டி, தாயில்பட்டி, மல்லாங்கிணறு, வத்திராயிருப்பு, வன்னியம்பட்டி விலக்கு, அருப்புக்கோட்டை தெற்கு தெரு, அய்யனாபுரம், ஆனையூர், அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலை, எம்.ரெட்டியாபட்டி, காமராஜர் நகர் - இராஜபாளையம், சாத்தூர், கிருஷ்ணாபுரம், மேலையூர், திருவில்லிபுத்தூர், எம்.புதுப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், அழகாபுரி-இராஜபாளையம், அல்லம்பட்டி, வெள்;ர், முடங்கியார் சாலை - இராஜபாளையம் என மொத்தம்  27 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ்-இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை, சாலிகிராமத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், கொள்முதல் செய்து வழங்கும் மருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்க ஏதுவாக 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட மருந்து கிடங்குகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதன வசதி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப மருந்துகள் உடனடியாக அனுப்பும் வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து முதல்வர் மருந்தகங்களுக்கு நகர்வு செய்ய தனியே வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளை கணினி மூலம் ஆன்லைனில் மருந்தாளுநர்/ தொழில்முனைவோர் கேட்பு பட்டியல் ஏற்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் இந்த முதல்வர் மருந்தகத்தினை பயன்படுத்தி குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறுமாறு வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார்,  அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் திரு.ஐ.அந்தோனி மரிய டயஸ், அருப்புக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி சுந்தரலட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Feb 23, 2025

தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் 38 மின்கலன் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் (22.02.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட21 ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில்  ரூ.95.95 இலட்சம் மதிப்பில்  38 மின்கலன் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்  தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி  துவக்கி வைத்தார்.

Feb 23, 2025

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட ம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து, இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம்,  திருச்சுழி ஜி.எஸ்.டி மஹாலில்  (22.02.2025) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட ம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து, இளம் தளிர் என்ற தலைப்பில் நடத்திய ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து ஆறு வயது வரை அந்த குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு  கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும்தான் கொடுக்கிறோம். அதன் பின்பு அந்த குழந்தைக்கு ஆறு மாதத்தில் இருந்து இணை உணவுகளை  கொடுக்கின்ற போது, அதை ஊட்டச்சத்து மிக்கதாக  எப்படி தொடர்ச்சியாக அந்த குழந்தைக்கு கொடுப்பது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சத்தான உணவுகள் என்பது செலவு அதிகமாகும்  என்று இல்லை. நமது பகுதியில் கிடைக்கக்கூடிய சிறு சிறு உணவுப் பொருட்களைக் கூட தொடர்ச்சியாக அவர்களுக்கு கொடுப்பதன் மூலமாகவும், குறிப்பாக  செரிமானம் ஆகக்கூடிய அளவிலான புரதச்சத்து  கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.புரதச்சத்து  குழந்தைகளின் உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அது எந்த உணவில் அதிகமாக கிடைக்கும் என்பதெல்லாம் இந்த கருத்தரங்கில் மருத்துவர்கள் எடுத்துக்கூற உள்ளனர்.எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவது மிகவும் அவசியம். அது 6 மாதம் முதல் 6  வயது வரை பெற்றோர்கள் கொடுக்கக்கூடிய உணவில் தான் இருக்கிறது.இதையெல்லாம்  உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக இன்று கருத்தரங்கு நடைபெறுகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி  கவனித்து நல்ல ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலம் சார்ந்த  பிரச்சனைகளுக்கு அறிவியலால் நிரூபிக்கப்படாத முறையை பின்பற்றுவது தவறாகும்.குறிப்பாக கிராமங்களில் தொக்கு எடுப்பது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.எனவே  அதை மருத்துவ ரீதியாக பார்த்து அதற்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.நமது பகுதிகளில் மருத்துவர்கள்,  செவிலியர்கள் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்த்து சரி செய்வதற்கும், நல்ல சத்தான சாப்பாடு கொடுப்பதும் மிகவும் முக்கியம். அதனை எடுத்துக்கூறும் வகையில் தான்  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் (பொ)  திருமதி பத்மாவதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 23, 2025

காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம்,  காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (22.02.2025)  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்  பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கலைஞரின் கனவு இல்லம் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டம் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், சமத்துவபுரம் உயிர் நீர் இயக்கம்,  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு அபிவிருத்தி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு  மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை தரமாக விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  அவர்கள் அறிவுறுத்தினார்.மேலும், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள், நிலுவையிலுள்ள பணிகள், முடிவுற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமானதாகவும் உரிய காலத்திற்குள் செய்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் அரசின் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பிரத்யேக திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்ச்சியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்பட்டு வருகிறது.அரசின் பொதுவான திட்டங்களையும் தாண்டி இலக்கிய, கலை, பண்பாடு உள்ளிட்ட திட்டங்களிலும் ஒரு தனியிடத்தை நமது மாவட்டம் பெற்றிருக்கிறது.நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவு படுத்தவும், குறிப்பாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள், பத்திரிகை மூலம் கிடைக்கப்பெறும் குறைதீர்க்க வேண்டிய செய்திகளுக்கு அரசு அலுவலர்கள் உடனடியாக செயல்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். முன்னேற விளையும் பகுதியான நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் செயல் படுத்தப்படும் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் நிர்வாக சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதனை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.மேலும், அங்கன்வாடி புதிய கட்டடங்கள் கட்ட வேண்டியதன் தேவை, மராமத்து செய்ய வேண்டிய அரசு கட்டடங்கள், இடமில்லாத அங்கன்வாடி மையங்களுக்கு  இடத்தை தேர்வு செய்தல் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதிகளில் அங்கன்வாடி மையங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மேற்கூரை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.பணிகள் நடைபெறும் மையங்களில் மாற்று ஏற்பாடாக அருகில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் அங்கன்வாடி மையத்தை செயல்படுத்தலாம்.நபார்டு திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில்  அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தண்ணீர் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அனைத்துபணியாளர்களின் சேவைகளை உறுதிசெய்ய வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேவர் கல்தளம் அமைத்ததற்கு பின்பு சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். சுகாதார நிலையங்களுக்கு செல்லும் சாலைகளில் போதிய தெருவிளக்கு  வசதியை செய்ய வேண்டும்.நரிக்குடி, வீரச்சோழன் முக்குளம், கட்டனூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்.பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக க.விலக்கிலிருந்து ம.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மார்க்கமாக ஆலம்பட்டி கிராம வரை செல்வதற்கு சிற்றுந்து வசதி ஏற்பாடு செய்யப்படும்.முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு இயலாத அதிக நீளமான சாலைகளை பிற திட்டங்கள் மூலமாக நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி நிறைவேற்றப்படும்.குடிநீர் விநியோகம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.அனைத்து பகுதிகளிலும் தேவையான குடிநீர் வழங்குவதற்கு  உரிய நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

AD's



More News