25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>

'தேக்கடி தேவி' கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'தேக்கடி தேவி' கோயில்.

காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என பக்தர்கள் அழைக்கின்றனர். மனக்குறை தீர வெள்ளியன்று குருதி பூஜையை நடத்துகின்றனர்.

200 ஆண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு என்ற இருளி மரத்தின் அடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதன் அருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியம்மனும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கை அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.

விநாயகர், நாகேஸ்வரர், கருப்ப சுவாமி,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர வேண்டி அம்மனின் பாதத்தில் நிலத்தின் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் பயம் மறையும். இதை நடைகுருதி பூஜை என்கின்றனர்.

திருவிழாவின் போது தேவி புறநாதஸ் காவல் தெய்வமான காளியை 'தேக்கடி தேவி' என பக்தர்கள் அழைக்கின்றனர். மனக்குறை தீர வெள்ளியன்று குருதி பூஜையை நடத்துகின்றனர்.

200 ஆண்டுக்கு முன்பு கேரள, தமிழக பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கியிருந்தனர். வனவிலங்குகள் அதிகம் இருந்ததால் வனதெய்வமான காளியம்மனை வழிபட்டனர். அதன் அடையாளமாக குலமாவு என்ற இருளி மரத்தின் அடியில் திரிசூலம் வைத்து வழிபட்டனர். அதன் அருகில் இருந்த கல்லில் சுயம்பு மூர்த்தியாக காளியம்மனும் காட்சியளித்தாள். பின்னர் அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

கொடிமரம் பிரதிஷ்டை செய்த போது துர்கை அம்மனுக்கும் சன்னதி கட்டப்பட்டது.

விநாயகர், நாகேஸ்வரர், கருப்ப சுவாமி,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆயில்யம் நட்சத்திரத்தன்று நாகருக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம், விஷபயம் விலகும். நிலம், பூமி தொடர்பான வழக்குகள், பிரச்னை தீர வேண்டி அம்மனின் பாதத்தில் நிலத்தின் மண்ணை வைத்து வழிபடுகின்றனர். இளநீர் வைத்து வழிபட்டால் பயம் மறையும். இதை நடைகுருதி பூஜை என்கின்றனர்.

திருவிழாவின் போது தேவி புராணத்தை ஏழு  நாள் பாராயணம் செய்வர். இதனை 'சப்தாஹம் 'என்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News