”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், காரியாபட்டி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (16.07.2026) அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கள ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று 15.07.2026 காலை 09.00 மணி முதல் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன் படி இரண்டாம் நாளான (16.07.2026) அதிகாலை காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்தும், மல்லாங்கிணறு பேரூராட்சி திம்மன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், தூய்மை பணியாளர்கள் மூலம் பொது மக்களிடம் இருந்து திடக்கழிவுகள் தரம் பிரித்து பெறப்பட்டு வரும் பணிகளையும், மல்லாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அம்ருத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும், மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள், கோப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில்அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, காரியாபட்டி வட்டாட்சியர் திரு.திருப்பதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply