25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


தமிழ்நாடுநாள் தினத்தை யொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் நடைபெற்ற  போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடுநாள் தினத்தை யொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் நடைபெற்ற போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன .

தமிழ்நாடுநாள் விழாவினையொட்டி தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 ஆம் நாளன்று விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றன. அரசு, தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 73 மாணவர்கள் பேச்சுப் போட்டியிலும், 69 மாணவர்கள் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

பேச்சுப்போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சவிதா முதல் பரிசாக ரூ 10000/-மும், ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கூ.பிரதீபா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், திருத்தங்கல் எஸ்.என்.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி வ.லோகபிரியா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.

அதேபோல், கட்டுரைப்போட்டியில், மம்சாபுரம், பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ.வைதேகிலட்சுமி முதல் பரிசாக ரூ.10000/- மும், தோனூகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி இரா.சங்கீதா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி மா.யோக சந்திரிகா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News