.குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர் பொருள்: ஒரு சிலர் வறட்டு கௌரவத்திற்காக தாங்கள் செய்யும் சில செய்கைகளை குறிக்கிறது.
பழமொழி சரியானது: குறி வைக்கத் தப்பாது ராமசரம்பழமொழி தவறானது: குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்விளக்கம்:அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம், ஒரு சம்பந்தமும் இல்லை. குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி, ஸ்ரீராமபிரானின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.நாமும் குறிக்கோளை நோக்கி, ஸ்ரீராமபிரானின் அம்பு போன்று தகுந்த முயற்சியுடன் கடினமாக உழைத்தால் இலக்கை அடையமுடியும் என்பதை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.
.அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள் பொருள்: ஒரு விடயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் ,அதை தெரிந்தவர் போல் காட்டிக் கொள்பவர்களை குறிக்கிறது.
மிதித்தாரை கடியாத பாம்புண்டோபொருள்: ஒரு செயலுக்கான எதிர்வினையை அனுபவிக்காதவர் என்று எவரும் இல்லை.சொல் அம்போவில் அம்போ? பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் தாக்கத்தை விட, நமது நாவில் இருந்து வரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும்.
கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா? பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.
.கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன். பொருள்: எந்த ஒன்றையையும் எப்படி பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்றார் போலவே அதன் பயன் இருக்கும். நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம் பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அதற்கான நேரம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!பொருள்:நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது.உண்மையான பொருள்:நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்
ஏறச்சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிகோபம்.பழமொழி விளக்கம்ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சிலருக்கு சந்தோசத்தை கொடுக்கும் மற்றவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும், எருதுவின் மேலே ஏறினால் எருதுவுக்கு வலிக்கும் ஏறவில்லை என்றொல் நொண்டிக்கு கஷ்டம் .நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் கொடுக்கும்.என்பதை குறிப்பது தான் இந்த பழமொழி.
காடு வா வா என்கிறது; வீடு போ போ என்கிறது.இறைவனை நினைக்க இளமையிலேயே அறிந்து கொண்டால் முதுமையில் நமது ஆத்மா இறைவனோடு இணைந்து விடும். இறைவனை உணர, மனதில் கொண்டு வர, இறை சூத்திரம் தெரிந்திருக்க வேண்டும். வாழ்க்கையின் முடிவில் சிந்தித்துப் பயனில்லை. இதனால் நாம் அறிவுப்பூர்வமாக விழிப்புணர்ச்சியோடு இறைவனை உள்ளத்தில் கொண்டுவந்து வழிபட வேண்டும். அதுவே பேரறிவு
தம்பியுடையான் படைக்கஞ்சான் தம்பியை உடைய ஒரு அண்ணன் எதற்கும் அஞ்சாமல், அனைத்தையும் தைரியமாக செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் ,தன் குடும்பத்தை காத்து நிற்க தன் தம்பி இருக்கிறான் என்ற தைரியம்.