25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Feb 11, 2026

மருத்துவ பழமொழிகள்.

1. ஆறு வெற்றிலை இருந்தால் அறியாதவன் வீட்டிலும் சாப்பிடலாம். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். 2. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் முதுமையிலும் இளமை. 3. மேகம் போக்கும் ஆலம்பட்டை, பித்தம் போக்கும் வேப்பம் பட்டை 4. ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா. 5. ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன். 6. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி 7. மேகம் முற்றினால் வெள்ளை. வெள்ளை முற்றினால் வெட்டை வெட்டை முற்றினால் கட்டை  8.இறங்கு பொழுதில் மருந்து குடி. 9. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசியைப் போக்க. 10. குடலைக் கழுவி உடலைப் பேண்

Feb 04, 2026

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ). நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

Jan 28, 2026

சாப்பாடு பற்றிய பழமொழிகள்.

பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்...... பங்கு இட்டவளுக்கு, பானை தான் மிச்சம். குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை பூவுக்கு அழுததாம்...... ஆகாதது வேகாதது ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு...... பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை, ஏழைக்குத் தகுந்த, எள்ளுருண்டை....

Jan 21, 2026

சாப்பாடு பற்றிய பழமொழிகள்.

பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது..... அன்னம் இறங்குவது அபான வாயுவால்..... .உள்ள புள்ளை உரலை நக்கி கிட்டு இருக்க, வேற புள்ளைக்கு திருப்பதிக்கு போனாளாம்..... மருந்தாக இருந்தாலும், விருந்தோடு உண்.... சொரிந்து தேய்க்காத எண்ணையும், பரிந்து இடாத சோறும் பாழ்......

Jan 14, 2026

கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.

கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.இந்தப் பழமொழியையும் 'கோவில் பூனை தேவனுக்கு அஞ்சாது' என்று தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கோயிலில் சாமிக்கு நெய் பூ வைத்து அர்ச்சனை செய்தால் ,அது இறைவனிடம் போய்ச் சேரவா போகிறது? மாறாக, நாம் நம் எண்ணத்தில் மற்றும் செயலில் இறை பக்தியுடன் வேண்டுவதும் புகழ்வதும்தான் அவருக்கு உண்மையான அர்ச்சனை.

Jan 07, 2026

ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.

இந்தப் பழமொழி 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்' என்று தவறாகக் கூறப்பட்டு வருகிறது. ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ,பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை ,அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து, பிறகு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே உண்மையான பழமொழியின் அர்த்தம்.

Jan 06, 2026

“கூளை குடியைக் கெடுக்கும் குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”

வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்குத் தகுந்த பயனைத் தரும். இல்லையென்றால் நிலம் வீனாகிவிடும் என்ற நடைமுறை உண்மையை, என்ற பழமொழி மூலம் அறியலாம்“கூளை குடியைக் கெடுக்கும்குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”என்ற பழமொழி மூலம் அறியலாம்.நிலத்தைப் பாதுகாக்கும் முறையையும் விதைகளையிட்டுப் பயிர் விளைவிக்கும் முறையையும் மறைத்து வைக்காமல் எல்லோரும் பயன்பெரும் வகையில் கிராம விவசாயிகள் எடுத்து கூறினர்.

Dec 31, 2025

குத்தாலத்தில குளிக்கப் போகக் கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான்.

குத்தாலத்தில குளிக்கப் போகக் கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான். ஆர்வக்கோளாறு மற்றும் ஒரு விஷயத்தில் அதிகப்படியான ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு சொல்லப்படும் பழமொழி

Dec 24, 2025

ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம்.

ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்துவந்தவ நெல்லு குத்துராளாம். தன்மனைவியைப்பதறடித்துவிட்டுபுதிதாகச்சேர்த்துக்கொண்டபெண்ணுக்கு(வைப்பாட்டி)உரிமைகொடுத்துக்கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது.

Dec 17, 2025

வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா  செல்வுல வச்சிக்க.

வந்தா வரவுல வச்சிக்க, இல்லன்னா  செல்வுல வச்சிக்க.வாழ்கையில் நமக்குக் கிடைப்பது இலாபம் என்று வைத்துக்கொள்வோம். கிடைக்காததை அது நமக்கு இல்லையென்ற ஒரு நன் மனதுடன் கவலையற்று இருப்போம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 18 19

AD's



More News