25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Jul 30, 2025

விவசாயமப்பழமொழி ‘‘ஆடிப்பட்டம் தேடி விதை’’

ஆடி மாதத்தில் விதைப்பதே விதைப்பதற்குச் சரியான காலகட்டமாகும்.மேலும், விவசாயம் செய்கின்றபோது விவசாயம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது பலனை மட்டும் எதிரபார்த்தல் கூடாது. என்ற இக்கருத்தை, பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன

Jul 23, 2025

‘‘பருவத்தே பயிர் செய்’’

காலத்தோடு, காலத்திற்கேற்ற பயிர்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு பயிரிட்டால் தான் நன்கு விளைச்சலைப் பெருக்க இயலும். பருவம் தவறி விதைத்தால் எதிர்பார்த்த விளைச்சலைப் பெற முடியாது. இதனை, இப்பழமொழி தெளிவுறுத்துகின்றன.

Jul 16, 2025

‘‘முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்’’

 நிலத்தில் மாட்டை ஏரில் பூட்டி உழும்போது ஒன்றன் பின் ஒன்றாகவே உழுதல் வேண்டும். அதனைவிட்டுவிட்டு நான்கு ஏர்கள் உழுகின்றதெனில் வரிசையாக உழுதல் கூடாது என்ற முறைமையை, பழமொழி விளக்குகின்றது.

Jul 09, 2025

‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’

‘‘எள்ளுக்கு ஏழு உழவு’’                                                                                                                                                 .நெல், கரும்பு, சோளம் என ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு மாதிரியாக உழுதல் வேண்டும். எள் விதைப்பதற்கு முன்னர் நிலத்தை ஏழு முறை உழுதல் வேண்டும். அப்போதுதான் எள் நன்கு முளைத்து வளர்ந்து பலனளிக்கும். இல்லை எனில் வளர்ச்சி குன்றி விளைச்சலும் குறையும். இத்தொழில் நுட்பக் கருத்தினை, பழமொழி தெளிவுறுத்துகிறது.

Jul 02, 2025

உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி..

சிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு தின்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன்'உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி' என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி தின்பண்டத்தையும் அவனே தின்றுவிடுவான்.

Jun 25, 2025

தண்ணீர் இல்லாத குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றானாம்.

தண்ணீர் இல்லாத குளத்துக்கு மீன் பிடிக்கச்சென்றானாம்.பொருள்: எந்த பொருள் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று வாங்க வேண்டும்; இல்லாத இடத்தில் தேடக் கூடாது. அப்படி தேடுவதாகச் சொன்னால், அது பொய்.

Jun 18, 2025

தாயும் பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு வேறு.

பொருள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை உண்டு.யாரும் யாரையும், எந்த விஷயத்திற்கும் நிர்ப்பந்திக்க முடியாது; 'இந்த பாதை ஆபத்து' என்று இதமாகச் சொல்லி, நகர்ந்து விடுவது நல்லது, அது, நாம் வளர்த்த மகனே ஆனாலும் கூட!

Jun 10, 2025

தை பிறந்தால் வழி பிறக்கும்.

சொல்லப்படும் பொருள்:தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

Jun 03, 2025

மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.

மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாகக் கூறுகிறார்கள்.

May 27, 2025

அள்ளாம குறையாது, சொல்லாம வராது.

அள்ளாம குறையாது, சொல்லாம வராது.எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது. குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 18 19

AD's



More News