ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் ஜூஸ்
வெண்டைக்காய் ஜூஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும் பொழுது இதயம் சார்ந்த நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். வெண்டைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும்.வெண்டைக்காய் ஜூஸில் நிறைந்துள்ள கால்சியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர எலும்பு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உடம்பில் இரத்த பற்றாக்குறை உள்ளவர்கள் அல்லது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்குவெண்டைக்காய் ஜூஸ் நல்லது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதன் மூலம் இரத்த சோகையிலிருந்தும் விடுபடலாம்.வெண்டைக்காய் ஜூஸில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வெண்டைக்காய் ஜூஸை தொடர்ந்து குடித்து வர நுண்கிருமிகளால் ஏற்படக்கூடிய தொற்றுகளை தவிர்க்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.
0
Leave a Reply