அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம் பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.
அப்பன் அருமை செத்தால் தெரியும்பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அது போல ஒரு விஷயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாம் அறிவதில்லை.
.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் பொருள்:: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.
.இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லைபொருள்: ஒரு விடயத்தை பற்றி நன்கு அறியாமல் ,அது இப்படி தான் என்று முன் கூட்டியே, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவது தவறு.
"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்" என்பதே சரி. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகும்போது, அவரிடம் யாரேனும் பண உதவிகேட்டு நள்ளிரவில் வந்தாலும் அவர்களுக்கு அவன் உதவி செய்வான்
இதற்கு அர்த்தம்-உடல் மெலிந்து வலிமை இல்லாதவனுக்கு என்னை குடுத்தால் வலிமை பெறுவான் .உடல் எடை அதிகமாக எடையை குறைக்க வேண்டும் என்பவனுக்கு கொள்ளு குடுத்தால் உடல் எடை குறையும் இதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்
.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்குஇழைக்கும் போது, அவரால் எதிர்க்க முடியாமல் ,இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர், தீங்கிழைத்தவர் எப்படிப்பட்டவர் ஆயினும், அவரை அழித்து விடும்.
ஆய்ந்து பாராதான் காரியந்தான் சாந்துயரந் தரும். பொருள்: ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது துயரத்தை கொடுத்துவிடும்.
பொருள்: நல்ல மாட்டிற்கு ஒரு சுவடு என்பதே உண்மையான பழமொழி. இதில் சுவடு என்ற வார்த்தை மருவி சூடு ஆகி விட்டது. சுவடு என்றால் கால் தடம் என்று பொருள். அந்த காலத்தில் சந்தையில் மாடு வாங்கும்பொழுது எந்த மாட்டின் கால் தடம் நன்றாக(அழுத்தமாக) இருக்கிறதோ அதுவே பலம் பொருந்திய மாடு என்பதை அறிந்து அதை வாங்குவது வழக்கம்.
பொருள்: தாசில் என்ற வார்த்தைக்கு பொருள் அதிகாரம். எந்த ஒரு விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த ஆசைப்படுவதற்கு முன்பாக அதற்கான உழைப்பை போடவேண்டும். அதிஷ்டத்தை நம்பி இருந்தால் எதுவும் ஆகாது என்பதே இதன் பொருள்.