வைத்தியனிடம் கொடுப்பதை.வாணியனுக்குக் கொடு,பொருள்-நல்ல தரமான உணவுப் பொருள்களை வாங்கி உண்பதற்குப் பயன்படுத்த வேண்டும். கலப்பட உணவால் தான் பெரும்பாலான நோய்கள் உருவாகின்றன. விலை மலிவாகக் கொடுத்தோ அல்லது தரமற்ற உணவுப் பொருளை வாங்கிப் பயன்படுத்தினால் ,நோய் உடலில் ஏற்படும். அதனை மக்கள் தவிரத்தல் வேண்டும். இக்கருத்தை மேற்கூறிய பழமொழி நன்கு புலப்படுத்துகிறது. உணவு சரிவர உண்ணாதிருந்தாலும் உடலுக்குத் தீங்கு நேரிடும். கருமித்தனத்துடன் சிலர் பட்டினியாக இருப்பர். அவ்வாறு உணவினைச்சரியான நேரத்திற்கு உண்ணாதிருந்தால்வயிற்றில் புண் அல்சர் ஏற்பட்டு மருத்துவரை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்க மருத்துவத்திற்குச் செலவுசெய்வதைவி டஅதிக விலையாக இருப்பினும் தரமான உணவுப்பொருள்களை வணிகரிடம்வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
நாற்பது வயதை எட்டியவர்களுக்கு உலக அறிவு நிறைய இருக்கும். அவர்பேச்சில் உறுதி இருக்கும். நாவண்மை நிரம்பியிருக்கும். அதனைக் குறிப்பிடுவதற்குதான் "நாற்பது வயதில் நாய்குணம்.அறுபது வயதைக்கடந்தவர்கள் அனுபவ அறிவில் நிறைந்திருப்பார்கள். வெறும் எட்டில், எழுத்தில் வரும் அறிவல்ல அது .அந்த அரிய அனுபவத்தைக் குறிப்பிடும் விதமாக சொல்லப்பட்டதுதான் "அறுபது வயதில் அரிய குணம்".
பொருள்:அடி என்பது இறைவனின் திருவடி துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை பற்றினால், அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் ,எதிர் நோக்கத் தேவை இருக்காது, என்பதை உணர்த்தவே அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டும் போக்கும்.பொருள்:ஆறு மலையிலிருந்து வருவதால் பல மூலிகைகள் அதில் கலந்திருக்கும். அதில் குளித்தால், வாதம் உள்ளிட்ட நோய்கள் நீங்கும்.அருவி நீரில் பல கனிமச் சத்துக்கள்மிகுந்து காணப்படுவதால் இதனைக் கனிமச்சத்து நீர் ( MINERAL WATER ) என்றும் கூறலாம். பருகினால் அல்லது இதில் குளித்தால் பித்தநோய், கல்லீரல் தொடர்புடைய நோய்கள், கீழ்வாதம் உள்ளிட்ட பல நோய்கள் போகும்.சோற்று நீர் என்பது நீராகாரம். இது அருந்திவர வாதம், பித்தம் இரண்டும் நீங்கும் எனப் பல்வேறு சித்த மருத்துவக் குறிப்புகளை பழமொழி எடுத்துரைக்கிறது.
“இஞ்சி தின்ற குரங்கு போல ” பொருள்இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது, குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது, மாங்காய் இஞ்சியைப் போன்றது.காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு, அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து, கடித்துச் சுவைத்து விடும்.அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும், கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?பொருள்: ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால், நீ ஊதுற அந்த நேரத்தில் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்.
ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை.பொருள்:இலுப்பைப்பூ இனிப்புச்சுவை உடையது.பழங் காலத்தில் சர்க்கரை எனும் இனிப்புப் பொருளை கண்டு பிடிக்காத காலங்களில் இதனையே இனிப்புக்காக உண்டனர். இப்போதும் பழங்குடிகள் இனிப்புக்காக இலுப்பைப்பூவை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இலுப்பையின் பூமட்டும் அல்ல இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் உடையது.தாகத்தைத் தீர்க்கும் மலச் சிக்கலைப் போக்கும். மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூவில் குளுக்கோஸ் அதிகம் என்பதாலேயே இனிப்புச்சுவை உருவாகிறது.
இந்த பழமொழியானது ,தற்காலத்தில் உழைக்காமல் சாப்பிடுபவர்களை, கேலி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யாதெனில், ஐப்பசி பௌர்ணமியில் சிவன் கோவில்களில் பச்சரிசி சாதத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். அதை காண்பவருக்கு சொர்க்கம் கிட்டும் என்பதே இதன் பொருள்.
,இன்றைய தலைமுறையினரிடத்தில் இந்த பழமொழி இவ்வாறு கூறுவதை நாம் கேட்டிருப்போம் ஆனால் அன்று வயதானவர்கள் இந்த பழமொழி அவ்வாறு கூற வில்லை. அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரி- யிலும் கூட கொடை கொடுப்பான். இது தான் சரியான பழமொழி .அதாவது மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள், நேரம் காலம் பார்க்காமல் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவும் வள்ளல்களை குறித்து, நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழி. காலப்போக்கில் இவ்வாறு மறுவி விட்டது.
"அஞ்சு பெற்றால் அரசனேயானாலும் ஆண்டி ஆவான்" என்பதும்அதாவது 5 குழந்தைகளை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பதல்ல அர்த்தம் இந்த ஐந்து குணங்கள் குடும்பத்தில் இருந்தால் 1) ஆடம்பரமாக வளரும் தாய்2) பொறுப்பில்லா ஊதாரி தந்தை3) ஒமுக்கமற்ற துர்குணமுடைய மனைவி4) ஏமாற்றவும் துரோகமும் செய்யும் சுற்றத்தினர்/ உடன்பிறந்தோர்5) சொல் பேச்சு கேளாத பிடிவாத குணமுடைய பிள்ளைகள்(ஆணாணாலும்/பெண்ணாணாலும்)என இவை ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் ,ஆண்டி/ போண்டி ஆவான் .. காலம் மனிதனை மற்றுமல்ல .பழமொழிகளையும் மாற்றிவிடுகிறது.