25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பழமொழி.

Aug 07, 2024

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி 

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி ஓட்டை கப்பல் என்பது நமது உடல். ஒன்பது மாலுமி என்பது நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள்.

Jul 31, 2024

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?உடையார்பாளையம் என்பது சத்திரியர்கள் அதிகம் வசிக்கும் வீரம் நிறைந்த பகுதியாக இருந்தது. உள்ளூரில் வீரச்செயல் புரியாதவன் உடையார்பாளையம் சென்று அங்கு உள்ளவர்களிடம் தனது வீரத்தை நிரூபிப்பானா என்பதே இந்த பழமொழியின் விளக்கம்.

Jul 24, 2024

வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி

வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி முருங்கைக் கீரையை நாம் எப்போதும் அதிகமாக வேகவைத்து உண்ணக்கூடாது. வேகவைக்கும் நேரம் அதிகம் ஆக ஆக அதன் சத்துக்கள் குறைந்துகொண்டே போகும். அதே போல அகத்தி கீரையை வேகவைக்காமல் உண்ணக்கூடாது. அகத்தி கீரை வெந்தால் தான் அது நம் உடலிற்கு உகந்த சத்துக்களை தரும்.

Jul 17, 2024

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா?

நமக்கு ஒரு வேளையாவது பசிக்கு உணவளித்த வீட்டிற்கு என்றும் கெடுதல் செய்யவோ நினைக்கவோ கூடாது.

Jul 10, 2024

பழம் நழுவி பாலில் விழுந்தது போல...

"பழம் நழுவி பாகில் விழுந்தது போல" என்பதே சரி. பாகு என்பது வெல்லப்பாகை குறிக்கிறது. பொதுவாக பழமே இனிப்பாக இருக்கும். அந்த பழம் வெல்லப்பாகில் விழுந்தால் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்

Jul 03, 2024

ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.

ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்."அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்" என்பதே சரி. அயம் என்றால் குதிரை என்று பொருள். செயம் என்ற சொல்லுக்கு பூமி வெற்றி என்றொரு பொருள் இருந்தாலும் இதற்க்கு பூமி என்று மற்றொரு பொருள் உண்டு. குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவன் குதிரையின் மீது ஒரு காலையும் நிலத்தின் மீது ஒரு காலையும் வைத்து குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள முடியாது. 

Jun 26, 2024

கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.

கண்டதை கற்க பண்டிதன் ஆவான். "கண்டு அதை கற்க பண்டிதன் பண்டிதன் ஆவான்" என்பதே சரி. அறிவு சார்ந்த நூல்களை கண்டு அதை ஆராய்ந்து கற்பவன் பண்டிதன் ஆவான். "கண்டு அதைகற்க பண்டிதன் பண்டிதன்ஆவான்" என்பதே சரி. அறிவுசார்ந்த நூல்களைகண்டு அதை ஆராய்ந்து கற்பவன்பண்டிதன் ஆவான். மருத்துவம் பற்றி மட்டும் கற்றுத் தேர்பவர் மருத்துவர் ஆவார்.இயந்திரங்களின் இயக்கம் பற்றிக் கற்றுத் தேர்பவர் இயந்திர வல்லுனர் ஆவார். அது போலவே சட்டம் படித்தவர் நிலையும் அமையும்.ஆனால் இவ்வித வரம்பேதுமின்றியும் , நடைமுறைப் பயன் பற்றிக் கருதாமலும் அனைத்தையும் கற்பவரே பண்டிதர் ஆவார்.

Jun 19, 2024

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

"சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?" என்பதே சரி சும்மாடு- சுமை தூங்குபவர்கள் சுமையின் பாரம் தலையில் தெரியாமல் இருக்க சுமைக்கு கீழ் சும்மாடு வைப்பதுண்டு. சோழியன்- சோழியை உருட்டி பலன் சொல்லுபவர். இவருடைய தலையில் குடுமி இருக்கும். சோழியனுடைய தலையில் இருக்கும் குடுமி சும்மா ஆகிவிட முடியாது என்பதே இந்த பழமொழியின் பொருள்.

Jun 12, 2024

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.

Jun 05, 2024

அடாது செய்தவன் படாது படுவான்

அடாது செய்தவன் படாது படுவான் பொருள் :  பல அநியாய செயல்களை செய்பவன், ஒரு கட்டத்தில் தனது செயல்களுக்கான பலனை அனுபவிப்பான்.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News