யார் யார் எத்தகைய பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும் என்பதையும் பழமொழிகளில் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்ப் பாசன வசதி, பிற செலவுகள் செய்வதற்குரிய பணம் வாய்ப்பிருப்போர் வாழையைப் பயிரிடலாம். நீர் வசதி பிறவோ இல்லாதவர்கள் எள்ளைப் பயிரிட்டுப் பயன் பெறலாம். இதனை,என்ற பழமொழி மொழிகின்றது. வாழை பயிரிடுவோர் காற்றினால் மரம் சாய்ந்து விடுகின்றபோது அதனால் பாதிப்படையாமல் அவ்விழப்பைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி இருக்க வேண்டும். மேலும், எள்ளிற்கு அதிக அளவு நீர் தேவைப்படாது. சிறிதளவே நீர் தேவைப்படும் காற்றடித்தாலும் எள் செடியானது பாதிப்படையாது. இதனால் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படாது என்பதை இப்பழமொழி குறிப்பிடுவதும் நோக்கத் தக்கது.
பணக்காரர்கள் தாம் தூம் என்று செலவு செய்வார்கள். எவ்வளவு நாளைக்கு? எல்லாம் அந்தப் பணம் உள்ளவரை மட்டும்தான். சிலர், தங்கள் அருகில் நண்பர்கள் பக்கபலமாக இருந்தால், ஒரு பிரச்சினை வரும்போது தங்கள் மேலே தவறு இருந்தாலும் கூட, நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மிகவும் அதிகமாகப் பேசித் தங்களது வீரத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதுவே அவர்கள் தனியாக இருந்தால், பயந்துபோய் ஓடிவிடுவார்கள்.
நடமாடும் வங்கியான ஆட்டின் புழுக்கை அன்றைக்கே உரமாகப் பயன்படும். மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகவ்வியம்’ என்பர். இத்தகைய இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை, பழமொழிகள் விளக்குகின்றன.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் கொள்கையில் மாறமாட்டார்கள். நல்லது மட்டுமே செய்வார்கள்.
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?பொருள் மாட மாளிகை காட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா.? அதை நோக்கி முன்னேற நிஜ வாழ்க்கையில் உழைத்து ,கனவை நனவாக்க வேண்டும். வெறும் கனவு காண்பதால் பலனில்லை.
‘‘நெல்லுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட,தென்னைக்குத் திருவாரூர்த் தேரோட’’எனத் அனுபவ மொழியாகக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் ஒரு நண்டு போகும் அளவிற்கு இடைவெளிவிட்டு நடவேண்டும், என்று இப்பழமொழி குறிப்பிடுகின்றது. இதனை இன்று ஒரு மிதிவண்டியின் டயருக்குள் 17 குத்துக்கள் இருப்பதைப் போல் நெற்பயிரை நடவு செய்தல் வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் இன்று இதனை செம்மை நெல் சாகுபடி என்றும் குறிப்பிடுகின்றனர்.வாழைக் கன்றை நடவு செய்கின்றபோது ஒரு மாட்டு வண்டி போகுமளவு இடைவெளிவிட்டு நட வேண்டும். தென்னைக்கு ஒரு தேர் ஓடுமளவிற்கு இடைவெளி விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பயிரையும் எவ்வாறு நட்டால் பயிர் அதிக விளைச்சலைத் தரும் என்பதை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர் நமக்குக் கூறியுள்ளனர்.
தண்ணீருக்கு பயந்தால் நீச்சல் வருமா?பொருள்: ஒரு பணியை செய்ய முடிவு செய்தால், அச்சப்படக் கூடாது; துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும்.
‘‘உழுகிறபோது ஊருக்குப் போயிட்டு அறுக்கிறபோது அரிவாளோடு வந்தானாம்’’அனைவரும் வயலில் பயிரிடுகின்றபோது நாமும் பயிரிடவேண்டும். அப்போதுதான் அது விளையும். இல்லையெனில் அஃது பாழ்பட்டுப் போய்விடும். மேலும் உழவுத் தொழிலில் கவனம் செலுத்துதல் வேண்டும் என்பதையும் இப்பழமொழி நன்கு விளக்குகின்றது..ஒவ்வொரு பயிரையும் அதற்குரிய தொழில் நுட்பத்திற்குத் தகுந்தாற்போல் நடவு செய்தால் அப்பயிர் நன்கு விளைச்சலைத் தரும். அவ்வாறு செய்யவில்லையெனில் விளைச்சல் குறையும். பயிர் நடவு செய்யும் இத்தொழில் நுட்பத்தை,
சர்க்கரை என்றால் தித்திக்குமா?சர்க்கரையை சாப்பிட்டால்தானே தித்திக்கும். அதற்குக் காசு வேண்டாமா? வாழ்க்கைக்கு எப்படி வாழ வேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்தக் கனவை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.சிலர் ஒருவருக்காக எல்லாமும் செய்வேன் என்று சர்க்கரைப் போன்று பேசுவார்கள். ஆனால், ஒரு துரும்பைக்கூட அசைக்கமாட்டார்கள். இந்தப் பிதற்றல்காரர்கள் வாயால் வடை சுடுவதால் என்ன பலன்?
துளசிக்கு வாசமும், முள்ளுக்கு கூர்மையும் முளைக்கிற போதே தெரியும்.பொருள்: துளசிசெடி, கன்றாகஇருக்கும்போதே,அதன்வாசனைதெய்வீகமணத்தைப்பரப்பத்துவங்கிவிடும்; முள்ளும், முளைக்கும்போதே அதன் கூர்மை தன்மைதான் முதலில் வெளிப்படும். அதுபோல, ஒருவரின் குணத்தை, அவரின் ஐந்து வயதிலேயே அறிந்துகொள்ள முடியும்