25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பழமொழி.

Mar 04, 2026

உணவுப் பழக்கம் பழமொழி வடிவில். NO -3

 மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.வாந்திக்கு மருந்து மணத்தக்காளி. வாத நோய் தடுக்க அரைக்கீரை. வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.  பருமன் குறைய முட்டைக்கோஸ். பித்தம் தணிக்க நெல்லிக்காய்.குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை. 

Feb 25, 2026

உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்:NO-2.

 கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.கொலஸ்ட்ரால் குறைக்கப் பன்னீர் திராட்சை.சித்தம் தெளிய வில்வம்.சிறுநீர் கடுப்புக்கு அண்ணாசி.சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை.

Feb 18, 2026

உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்: .NO- 1.

1. சீரகம் இல்லா உணவு சிறக்காது.2. தன் காயம் காக்க வெங்காயம் போதும்.3. வாழை வாழ வைக்கும்.4. அவசர சோறு ஆபத்து.5. இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.6. ரத்தக் கொதிப்புக்கு அகத்திக் கீரை.7. இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை.8. உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.

Feb 11, 2026

மருத்துவ பழமொழிகள்.

1. ஆறு வெற்றிலை இருந்தால் அறியாதவன் வீட்டிலும் சாப்பிடலாம். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். 2. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் முதுமையிலும் இளமை. 3. மேகம் போக்கும் ஆலம்பட்டை, பித்தம் போக்கும் வேப்பம் பட்டை 4. ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா. 5. ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன். 6. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி 7. மேகம் முற்றினால் வெள்ளை. வெள்ளை முற்றினால் வெட்டை வெட்டை முற்றினால் கட்டை  8.இறங்கு பொழுதில் மருந்து குடி. 9. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக, பனம்பழம் தின்பார் பசியைப் போக்க. 10. குடலைக் கழுவி உடலைப் பேண்

Feb 04, 2026

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ). நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

Jan 28, 2026

சாப்பாடு பற்றிய பழமொழிகள்.

பண்டாரம் பிண்டத்துக்கு அழுதானாம்; லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம்...... பங்கு இட்டவளுக்கு, பானை தான் மிச்சம். குடலு கூழுக்கு அழுததாம், கொண்டை பூவுக்கு அழுததாம்...... ஆகாதது வேகாதது ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு...... பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை, ஏழைக்குத் தகுந்த, எள்ளுருண்டை....

Jan 21, 2026

சாப்பாடு பற்றிய பழமொழிகள்.

பசி ருசி அறியாது, நித்திரை சுகம் அறியாது..... அன்னம் இறங்குவது அபான வாயுவால்..... .உள்ள புள்ளை உரலை நக்கி கிட்டு இருக்க, வேற புள்ளைக்கு திருப்பதிக்கு போனாளாம்..... மருந்தாக இருந்தாலும், விருந்தோடு உண்.... சொரிந்து தேய்க்காத எண்ணையும், பரிந்து இடாத சோறும் பாழ்......

Jan 14, 2026

கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.

கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.இந்தப் பழமொழியையும் 'கோவில் பூனை தேவனுக்கு அஞ்சாது' என்று தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கோயிலில் சாமிக்கு நெய் பூ வைத்து அர்ச்சனை செய்தால் ,அது இறைவனிடம் போய்ச் சேரவா போகிறது? மாறாக, நாம் நம் எண்ணத்தில் மற்றும் செயலில் இறை பக்தியுடன் வேண்டுவதும் புகழ்வதும்தான் அவருக்கு உண்மையான அர்ச்சனை.

Jan 07, 2026

ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.

இந்தப் பழமொழி 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்' என்று தவறாகக் கூறப்பட்டு வருகிறது. ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ,பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை ,அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து, பிறகு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே உண்மையான பழமொழியின் அர்த்தம்.

Jan 06, 2026

“கூளை குடியைக் கெடுக்கும் குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”

வேளாண்மைக்குப் பயன்படுத்தும் கருவிகள் சரியாக இருக்குமானால் விவசாயிகளுக்குத் தகுந்த பயனைத் தரும். இல்லையென்றால் நிலம் வீனாகிவிடும் என்ற நடைமுறை உண்மையை, என்ற பழமொழி மூலம் அறியலாம்“கூளை குடியைக் கெடுக்கும்குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்கும்”என்ற பழமொழி மூலம் அறியலாம்.நிலத்தைப் பாதுகாக்கும் முறையையும் விதைகளையிட்டுப் பயிர் விளைவிக்கும் முறையையும் மறைத்து வைக்காமல் எல்லோரும் பயன்பெரும் வகையில் கிராம விவசாயிகள் எடுத்து கூறினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 17 18

AD's



More News