முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல….சொல்லப்படும் பொருள்:தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.உண்மையான விளக்கம்:முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது..
சொல்லப்படும் பொருள்:கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.உண்மையான விளக்கம்:கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.
தை பிறந்தால் வழி பிறக்கும்.சொல்லப்படும் பொருள்: தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.
ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும் விளக்கம்: ஆடம்பர செலவுகளை அதிகமாய் செய்து குடும்பம் நடுத்தெருவிற்கு வருவதற்கு முன்பே செலவுகளை குறைத்து சிக்கனத்தை பெருக்கி வளமாக வாழ வேண்டும் எனும் எச்சரிக்கையை இப்பழமொழி செய்கிறது .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் வருமுன் காப்பது நல்லது ,பொருள்: அணை போட வேண்டும்- காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏழை சொல் அம்பலம் ஏறாதுவிளக்கம்: ஏழையின் பக்கம் நீதி இருந்தாலும் அவன் பொருளில்லாதவன் என்னும் காரணத்தால் அவன் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதை இப்ப பழமொழி விளக்குகிறது.பொருள்: அம்பலம் ஏறாது - செல்லுபடியாகாது.
.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு, எவ்வளவு பெரிய செல்வமும் ,சிறு துரும்பாகவே தெரியும்.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.
கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.
.துணை போனாலும் பிணை போகாதே பொருள்: பிறருக்கு துணையாக இருப்பது நல்ல விடயம் என்றாலும் அதற்காக பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது. உதரணமாக சொல்ல வேண்டும் என்றால்: யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் என்று சொல்லுவார்கள் அல்லவா அது போல.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே பொருள்: ஒரு விசயம் நடப்பதற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும். உதாரணமாக தேர்தல் வருகிறது என்றால் உடனே சாலை போடுவது போல.