“நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு”நல்லவன் வருகிறான் .செம்பை எடுத்து உள்ளே வை. என்பதை வஞ்சப்புகழ்ச்சியணியாக மாற்றி கொங்கு தேசத்தில் சொல்கிறார்கள்.
“.வாழைப்பழத்தை கொண்டு போனவ வாசப்படியில வாயைக் கொண்டு போனவ நடு ஊட்டுல”பொருள் இருப்பதால் மட்டும் மரியாதை கொடுத்து வீட்டிற்குள் அனுமதித்து விடமாட்டார்கள். நன்றாக பேசத்தெரிய வேண்டும். பொருளே இல்லாமல் இருந்தாலும் கூட ,வெறும் பேச்சு இருந்தால் சமாளித்துக் கொள்ளலாமாம்.
"எறும்பு தின்னா கண்ணு நன்னா தெரியும்" என்று காபி.,டீ., மோர்., இதில் எறும்பு இருந்து, அதை நாம் பருகினால் (தின்னால்) நமக்கு கண் தெரியாது .பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால் கண்ணே கிடையாத, நுகர்வு சக்தி மூலம் ,தன் வாழ்க்கைக்கு தேவையான உணவை தேடும் எறும்புக்கு, நாம் போடும் அரிசிமாவினால் ஆன கோலத்தை, அந்த எறும்பு தின்றால் அதனால் ஆண்டவன் சந்தோஷமாகி , நமக்கு கண்பார்வை கோளாறுகளை வராதவாறு காப்பானாம் .(அதாவது எறும்புகள் கண் இல்லாத எங்களுக்கு ,உணவளித்த அந்த ஆத்மாவுக்கு ,இறைவனே நல்ல கண்ணை அருளி காப்பாற்றும், என வேண்டுமாம். அதனால் இறைவன் சந்தோஷமாவானாம்)எனவே தான் பெரியோர்கள் எறும்பு தின்னால் (நாம் போடும் அரிசிமா கோலத்தின் அரிசிமாவை) நமக்கு கண் நன்கு தெரியும் என்று கூறினர்.பெண்களே நீங்கள் வீட்டின் முகப்பில், வீட்டில் சாமி சன்னதி முன், இனியாவது அரிசி மா கோலமிடுங்கள். ஸ்டிக்கரை/ பெயிண்டை பயன்படுத்தாதீர்கள்.
“ஆனைக்கு ஒரு காலம் வந்தால் ,பூனைக்கு ஒரு காலம் வரும்”ஆ நெய் ( பசுவின் நெய்) சாப்பிட்டால் உடம்பு நன்றாகத் தேறி வரும்.இதற்கு இப்படி ஒரு காலம். என்றால், பூ நெய் (தேன்) சாப்பிட்டால் உடம்பு இளைத்து சரியான படி வைக்கும். இதற்கு ஒரு காலம்.
“பாத்திரம் அறிந்து பிச்சையிடு" "கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு”புலவர்கள் மன்னரிடம் பாடிப் பரிசை வாங்கிச் செல்வர். புலவர்கள் திறனை அறிந்து பிச்சையிடுங்கள் என்பது அர்த்தம் . கோ என்றல் அரசன். அரசனின் திறமையை அறிந்து பெண்ணை கொடு என்பது அர்த்தம்.
களவு என்பது திருடுவது, கத்து என்பது பொய் சொல்வது ,இரண்டையும் மறப்பது, என்பதே அர்த்தம்
புண்பட்ட நெஞ்சிற்கு நல்ல விஷயங்களை புக விட்டு மனதை ஆற்றுவது என்பது அர்த்தம்
கழு என்ற கோரைப் புல்லினால் , தைக்கும் பாயிலிருந்து, கற்பூர வாசனை வருமாம் .இதற்கு அர்த்தம்.
ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்... இது ஒரு பழமொழி. ஆனால், இது ஒரு மருத்துவக் குறிப்பு, இதனின் உட்பொருள். ஆனையைப் பிரித்தால் + நெய், அதாவது "ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும், பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் பசுவின் நெய்யை குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச் சத்து உடலில் சேர்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.. பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவிலிருருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யைச் சுருக்கி தேனைக் கூடுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அர்த்தமாகும். தேன் எளிதில் செரிக்கக் கூடிய உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும் பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்.. தேனையும் சாப்பிட்டு வந்தால் நலமுடன் இருக்கலாம் ஆயுளும் வளரும்.