ராஜபாளையம் போக்கு வரத்து போலீஸ் சார்பில் டூவீலரில் செல்வோர்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ,காந்திசிலை ரவுண்டானா அருகே நெடுஞ்சாலை துறை இன்ஸ்பெக்டர் நவாஸ்தீன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஹெல் மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் சிக்கல், பாதிப்புகள், ஹெல்மெட் அணிவதால் விபத்தின் போது ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கம் அளித்தார். எஸ்.ஐ கார்த்திகேயன் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.
இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மழைக்குப்பின் சாரல் தொடர்ந்து பெய்து வருவதால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலுக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காலை உணவு திட்டத்திற்கான ஆயத்த பணிகளை செய்ய அரசு எவ்வித நிதியும் ஒதுக்காமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களிடம் திட்டத்திற்கான பணிகளை செய்யக்கோரி கடந்த இரண்டு வாரங்களாக மிரட்டுகின்றனர்.இதனால் காலை உணவு திட்டம் ஆசிரியர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு பணிகள் காரணமாக கடும் மன அழுத்தத்தில் உள்ள நிலையில் ,தற்போது திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். எனவே அரசு பள்ளிகளுக்கும் அனைத்து பொருட்களையும் அரசு இலவசமாக தர வேண்டும். என்றார்.காலை உணவு திட்டம் என்ற பெயரில் தினமும் பள்ளி ஆசிரியர்களை துன்புறுத்துவதாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
இராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும் முடங்கியார் மெயின் ரோட்டில் ஏற்கனவே வளர்ந்திருந்த மரங்கள் சாலை அகலப்படுத்தும் பணிகாரணமாக அகற்றப்பட்டது. இப்பகுதிகளில் தற்போது நடப்படும் மரக்கன்றுகளை பேணி காத்து ,பயன்படும் மரங்களாக வளர அமைப்பின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.ரோட்டின் ஓரம் வைக்கப்பட்டுள்ள மகிழம், புங்கை வேம்பு, நாவல் மரக்கன்றுகளுக்கு கால் நடைகள் சேதப்படுத்தவாறும் வெயில் படும் படியுமான சுற்று வேலி அமைத்து தகுந்த இடைவெளிகளில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றனர்.மாயூரநாதர் கோயில் சுற்றுச்சாலையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கின்றனர். பச்சை மடம் ஊரணி நீர்நிலை பாதுகாக்கவும், முயற்சி எடுப்பதோடு நகரின் பல்வேறு தெருக்களில் பசுமை அதிகரிக்க காரணமாக இருந்து வருகின்றனர். அரசு இடங்கள் ரோட்டோரம் என இவர்கள் வளர்த்து பராமரிக்க, மரக்கன்றுகள் தற்போது மரங்களாக மாறி பலன் தந்து வருகிறது. பரியாவரன், சாயி பசுமை இயக்கத்தை இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்.போலிசாருக்கு பாராட்டுகொலை வழக்கில் துப்பு துலக்கி திறமையாக செயல்பட்டு ,குற்றவாளிகளை கைது செய்த இராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.பிப்ரவரி 24-ல் முருகானந்த் தம்பதியை கட்டிபோட்டு ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இராஜபாளையம் புது பஸ் ஸ்டான்ட் அருகே சந்தேக நபரை பிடித்து விசாரணையில், மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவர் சம்பவத்திற்கு மூளையாக இருந்து மாநிலத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நகராட்சி குடிநீர் தேக்கம் பின்புறம் யானைகள் புகுந்து மாமரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாக வன பகுதியில் இருந்து வரும் யானை கூட்டம், மா மரங்களை தொடர்ந்து ஒடித்து சேதப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மாம்பழ விளைச்சல் ஏமாற்றியுள்ள நிலையில், மாமரங்களை யானைகள் அழித்து வருவது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் இன்றைய ஆரம்ப தினத்தில் மருத்துவர் தினமும் இணைகின்றது. RTN இதயம் V.R. முத்து அவர்களின் “ரோட்டரி கர்மவீரர் காமராஜர் இதயம் பாதுகாப்பு ஊர்தி ”நம் நகருக்கு முதன் முதலில் வருகை தந்து இதயப் பிரச்சனை உள்ளவர்கள் CHECK UP செய்து கொள்ள உள்ளவர்கள், அவர்களுடைய மருத்துவ சோதனையை இன்று ஆரம்பித்துள்ளனர். தற்பொழுது P.A.C.R. நினைவு நூற்றாண்டு மண்டபத்தில் சுதர்சன் கார்டனில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சங்கத்தினரின் சேவையை ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பாராட்டி மகிழ்கிறோம். இவர்களுடைய சேவை தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
நம் நகரின் அருகில் உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்திரபோஷ் மனைவி சுமதி இவர்களது மூன்றாவது மகன் பார்த்தசாரதி. சுந்தரர்ராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு முடித்து ஜே.இ.இ. மெயின் நுழைவு தோர்வுக்கு பள்ளியில் இருந்தபடியே ஆன்லைனில் படித்து தேர்ச்சி அடைந்தார்.“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் சென்னை சைதாப்பேட்டை பயிற்சி மையத்தில் இரண்டு மாதங்கள் தங்கி இலவசமாக பயிற்சி எடுத்துள்ளனர். தேர்வு முடிவுகள் ஜீன் 9-ல் வெளியான நிலையில் 112 மதிப்பெண்கள் உடன் இந்திய அளவில் 740 வது இடம் பிடித்து தேர்ச்சிபெற்றார். சென்னை ஐ.ஐ.டி. யில் விண்வெளி துறை தொடர்பான படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளது. இம் மாணவனை இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் பாராட்டி ,வாழ்த்துகிறோம்.
அகடமிக் இன்சைட்ஸ் அமைப்பால் தமிழ்நாட்டில் உள்ள தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு சதவிகிதம், ஆளுமை மேம்பாடு, போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் ஆங்கிலப்புலமை உள்ளிட்ட அளவீடுகளை கொண்டு ஏராளமான செய்தது. நாடு முழுவதுமிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றன. இதில் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி 25 சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது. விருது பெற்றதற்காக ராம்கோ குருப் சேர்மேன் பி.ஆர். வெங்கட்ராமராஜா முதல்வர், ஆசிரியர், மாணவர்களை பாராட்டினார். இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக மாணவர்களை பாராட்டுகின்றோம்.
ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைஜூன் - 21 - 23, 2024வைர நகைகளுக்குஒரு காரட்டிற்கு10,000 தள்ளுபடி*கண்காட்சி நடைபெறும் இடம்- இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் காமராஜ் நகர், இராஜபாளையம்
இராஜபாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா தலைமை வகித்து, வேல்டு விஷன் சார்பில் நடந்த தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின ஊர்வலத்தை துவக்கினார். ஊர்வலத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.