சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம்
இராஜபாளையம் நகர் பகுதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு செல்லும் முடங்கியார் மெயின் ரோட்டில் ஏற்கனவே வளர்ந்திருந்த மரங்கள் சாலை அகலப்படுத்தும் பணிகாரணமாக அகற்றப்பட்டது. இப்பகுதிகளில் தற்போது நடப்படும் மரக்கன்றுகளை பேணி காத்து ,பயன்படும் மரங்களாக வளர அமைப்பின் உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.
ரோட்டின் ஓரம் வைக்கப்பட்டுள்ள மகிழம், புங்கை வேம்பு, நாவல் மரக்கன்றுகளுக்கு கால் நடைகள் சேதப்படுத்தவாறும் வெயில் படும் படியுமான சுற்று வேலி அமைத்து தகுந்த இடைவெளிகளில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி வளர்க்கின்றனர்.
மாயூரநாதர் கோயில் சுற்றுச்சாலையில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கின்றனர். பச்சை மடம் ஊரணி நீர்நிலை பாதுகாக்கவும், முயற்சி எடுப்பதோடு நகரின் பல்வேறு தெருக்களில் பசுமை அதிகரிக்க காரணமாக இருந்து வருகின்றனர். அரசு இடங்கள் ரோட்டோரம் என இவர்கள் வளர்த்து பராமரிக்க, மரக்கன்றுகள் தற்போது மரங்களாக மாறி பலன் தந்து வருகிறது. பரியாவரன், சாயி பசுமை இயக்கத்தை இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்.
போலிசாருக்கு பாராட்டு
கொலை வழக்கில் துப்பு துலக்கி திறமையாக செயல்பட்டு ,குற்றவாளிகளை கைது செய்த இராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.
பிப்ரவரி 24-ல் முருகானந்த் தம்பதியை கட்டிபோட்டு ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இராஜபாளையம் புது பஸ் ஸ்டான்ட் அருகே சந்தேக நபரை பிடித்து விசாரணையில், மதுரையை சேர்ந்த மூர்த்தி என்பவர் சம்பவத்திற்கு மூளையாக இருந்து மாநிலத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இராஜபாளையம் காவல் துறை அதிகாரிகளை இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறோம்
0
Leave a Reply