இளம் பசுமை ஆர்வலர்” எனும் சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் இணைந்து, சுற்றுச்சூழல் கல்வி காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு, பல்லுயிரியம்/உயிரின பன்மயம் பற்றி புரிந்து கொள்ளுதல் போன்றவை தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் முகாம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .
"இளம் பசுமை ஆர்வலர்" எனும் இச்சிறப்பு சுற்றுச்சூழல் முகாமில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியும் சுற்றுச்சூழல் ஆர்வமும் உடைய ஆசிரிய பயிற்றுநர்கள் தேவை. சுற்றுச்சூழல் அறிவியல், வாழ்வியல் கல்வி, வனவியல் கல்வி, வனவிலங்கு தொடர்புடைய ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தன்னார்வ பயிற்றுவிக்கும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அரசு / அரசு சாரா துறைகளில் பணிபுரிபவர்கள் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 2024-25 கல்வியாண்டில் ஏறக்குறைய 30 முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இருகட்டமாக முதலில் பயிற்சி வழங்கப்படும். இராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 88383-49353 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகுதியானவர்கள் பதிவு செய்ய 80729 18467 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
0
Leave a Reply