ஆகஸ்ட் 28ல் இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். 1-பள்ளியில்இருந்து 12 மாணவர்கள் 12 நூற்களைவாசித்து வருவார்கள்.(நூற்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.) 9 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை மொத்தம் 108.அவர்களுக்குமுதல் சுற்று: வினா - விடை எழுதுதல்.இரண்டாம் சுற்று: க்விஸ்அதிகம் Score பண்ணியவர்களுக்கு -1st 2nd 3rd என 36 பரிசுகளும் பள்ளிக்கு - Over all Trophy ம் வழங்கப்பட்டன.இப்படியாக மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக சிறப்பான முறையில் விழா நிறைவு பெற்றது.
இராஜபாளையம் ரோட்டரி சங்கம் முன்னெடுத்தTeachers Day Celebration - PRR Hall ல் மிக கோலாகலமாக நடைபெற்றது. A.K.D தர்மராஜா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. விஜயலக்ஷ்மி அவர்கள் பெரிதும் பாராட்டப்பட்டார். நம் சங்கத்தினின்று அந்நாளைய பள்ளியின் தாளாளர் Rtn.A .R . தசரத ராஜா அவர்கள் ஆசிரியர் விஜய லஷ்மி அவர்களின் பணிகளை சிறப்புற எடுத்துக் கூறி , வளமான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.Rtn.Dr. ஜெயக்குமார் -ஆசிரியர் பணியை பாராட்டிப் பேசினார்.ஆசிரியரின் மாணவர்கள் ஆனந்தி,கார்த்திகேயன், செண்பகம், சாந்தி என அனைவரும்தங்களுடையநினைவ னுபவங்களை- கண்கள் பனிக்கப் பேசினார்கள். செண்பகம் - தம் நினைவுப் பரிசுகளை ஆசிரியர்க்கும், A. K.D. Trust க்கும், சங்கத் தலைவர்க்கும் அன்புடன் வழங்கி மகிழ்ந்தார்கள். 75,76 களில், முதன் முதலாக தங்க மெடல் வாங்கி, A. K.D.பெண்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த செண்பகத்திற்கு சிறப்பு விருந்தினர் மாலை அணிவித்து மகிழ்ந்தார்.A. K.D. Girls School ல் தான் பணியாற்றிய காலம் குறித்து விஜி டீச்சர் சுவைபடக் கூறினார்கள். மாணவர்களின் வெள்ளந்தியான நிலை பற்றிக் கூறும் போது - மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் விளையாடும் Style, Skill பற்றி சிலாகித்துப் பேசும் பொழுது, நாங்கள் அந்த Ground ல் விளையாடிக் கொண்டிருப்பது போலவே உணர்ந்தோம். ஒவ்வொருவர் பெயரையும் உச்சரிக்க - அந்த நினைவாற்றல் சிலிர்க்க வைத்தது .நம் சங்க Club Service Chairman Rtn.செல்வராஜ் அவர்கள் விழாவில் பங்கேற்றது கூடுதல் மகிழ்ச்சியானது. முன்னாள் மாணவர்கள் , விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் விஜயலக்ஷ்மி அவர்களுக்கு சிறப்பு செய்தனர்.நிறைவில் இரண்டு சின்னச் சின்ன Games உடன் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அரசு ஆஸ்பத்திரி கடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. பொதுமக்களின் வசதிக்காக கடந்த ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ராஜபாளையம் மட்டு மின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு பொது மக்களுக்கு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கும் விதமாக ரூ.40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் அமைய ஏற்கனவே உள்ள 221 படுக்கை வசதிகளுடன் மொத்தம் 439 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாக புதிய ஆஸ் பத்திரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது
ராஜபாளையம் நகரில்1888 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் "டி குழுமம்24" என்ற பெயரில் ராஜபாளையம்ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் கிருஷ்ணராஜு தலைமையில் தலைமை ஆசிரியர் சரவணனின் முன்னிலையில் நடைபெற்றது.இப்பள்ளி மாணவர் செல்வராகேஷ் குமார் வரவேற்புரை ஆற்ற,மாணவர் ஷேக் முகமது ஒளியுல்லா நன்றியுரை வழங்கினார்.விழாவில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் உட்பட சுமார் 855பேர் பங்கேற்றனர்.இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றி பள்ளியின் வளர்ச்சிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்கினார்கள் .முன்னாள் மாணவர் சங்கர சுப்ரமணியம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ரூபாய் 2.5 லட்சம் செலவில் ஆர். ஓ அமைப்பு ஏற்படுத்த நன்கொடை வழங்கினார்கள்.முதன்முறையாக முன்னாள் மாணவர் சங்கத்திற்கு நிர்வாகி தேர்வு செய்யப்பட்டனர்.25 வயது முதல்82வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்த்து முன்னாள் ஆசிரியர்களை நெகிழ்வுடன் கெளரவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்க ளுக்கும் முன்னாள் ஆசிரியர் களுக்கும் விளையாட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசு வழங்கப்பட்டன.ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், காலை முதல் மாலை வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கான குறுவட்ட அளவிலான குழு, விளையாட்டு போட்டி கள் ஜூலை24-ம் தேதி தொடங்கி 14, 17, 19 வயது பிரிவு மாணவ மாணவியர்கள் என 27 பள்ளிகளில் இருந்து 1800 மாணவர்கள் பங்கேற்றனர் பள்ளிகளுக்கான இராஜபாளையம் குறுவட்டம் அபிரிவுபோட்டிகள்ஸ்ரீரமணவித்யாலயா மாண்டிசேரிமேல்நலைப்பள்ளி சார்பில் நடந்தது. ஏற்பாடுகளை முதல்வர் சுதா, உடற்கல்வி இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.குழு போட்டிகள் தொடங்கி தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் சுதா வரவேற்றார். ஆலோசகர் டாக்டர். கு. கணேசன் வாழ்த்துரை வழங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாகிர் உசேன் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். மாணவியர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை பி.ஏ.சி.ஆர். அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி வென்றது.
டி.பி.மில்ஸ். சாலையில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்கு எதிரே ரெயில் தண்டவாளத்துக்கு அடுத்துள்ள மலையடிப்பட்டி சாலையை இணைக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட சுரங்கப் பாதை பணிகள் இந்த ஆண்டு இறுதியிலேயே பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ரெயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கியதால் சுரங்கபாதை பணிகளை கைவிடும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரெயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் தென்காசி எம்.பி எம்.எல்.ஏ. உள்ளிட்டமக்கள் பிரதிநிதிகள் மூலம் தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு,. முதற்கட்டமாக சுரங்கப்பாதையினுள் பதிக்கப்படும் 20 டன் எடையுடள்ள 11 கான்கி ரீட் பிளாக்குகளை வரிசைப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 30 டன் எடையை கையாளும் வகையிலான பிரேம்கள் இணைக்கப்பட்ட ராட்சத கிரேன் மூலம், கான் கிரீட் பிளாக்குகள் தூக்கி வைக்கப்படும்.ரெயில்வே சுரங்கப்பாதை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான கல்வி நிலையங்கள், நூற்பாலைகள், சத்தி ரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மருத்துவதுணி உற்பத்தி செய்யும் ஏராளமான ஆலைகள் உள்ளது.சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதோஷ வழிபாடு ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்ப ஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், அம்பலப்புளி பஜார் பகுதியில் உள்ள குருசாமிகோவில், சங்கரன் கோவில் சாலையில் அமைந்துள்ள பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் உள் பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. ராஜபாளையம் அருகே சேத்தூர் திருக் கண்ணிஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர் தவநந்தி கண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை கீழ தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கம் கோவில், தெற்குவெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆக.18-ம் தேதி சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
86-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குநமது நகர் தென்காசி சாலையில் உள்ள P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில் ,ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ராம்கோ சேர்மன் திரு பி. ஆர் வெங்கட்ராமராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் I.A.S. பங்கேற்று பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்க, செயலாளர் வெங்கடேஸ்வரா ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் ராமராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் மணி வண்ணன் நன்றி கூற பொது குழுக்கூட்டம் நடந்தது.இரவு விருந்துடன், விழா நிறைவு பெற்றது
ராஜபாளையம்தொழில் வர்த்தக சங்கத்தின் 86-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குநமது நகர் தென்காசி சாலையில் உள்ள P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில் ,ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ராம்கோ சேர்மன் திரு பி. ஆர் வெங்கட்ராமராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் I.A.S. பங்கேற்று பேசினார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. துணைத் தலைவர் பத்மநாபன் வரவேற்க, செயலாளர் வெங்கடேஸ்வரா ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் ராமராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இணைச் செயலாளர் மணி வண்ணன் நன்றி கூற பொது குழுக்கூட்டம் நடந்தது.