25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

May 26, 2026

தமிழக வீரர் ஜோஷிக் ஸ்டெபின்டோ தேசிய கேடட் வாள்வீச்சுசாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ராபுரில் 21-வது தேசிய கேடட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, சப்ரே தனிநபர் பிரிவில் தமிழக வீரர் ஜோஷிக் ஸ்டெபின்டோ (கன்னியாகுமரி) சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்தை  வென்றார்.  இதன் அணிகள் பிரிவில் ஜோஷிக் ஸ்டெபின்டோ, வினிஷ்குமார், துஷ்யந்திரம், ரீத் ஷித் ஆகியோர் அடங்கிய தமிழக அணி வெண்கலப்பதக்கம்வென்றனர்.  துஷியந்திரம் (சென்னை) தவிர மற்ற 3 வீரர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

May 26, 2026

தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் , ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் தேசிய சீனியர் தடகளம் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்றனர்.

 ஜார்கண்ட் தலை நகர் ராஞ்சியில் ,பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன் ஷிப்போட்டி நடந்து வந்தது. நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜூர் 20.64 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் ,பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 56.51 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தைவென்றார்.

May 26, 2026

9.50 கோடி பரிசு தொகை உள்ள, சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்  போட்டி இன்று தொடக்கம் .

இன்று முதல் 31-ந் தேதி வரை சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடக்க உள்ளது.தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான டாமோகா மியா  ஜஜியுடனும் (ஜப்பான்), மாள்விகா பான்சோத், லின் ஹிசாங் டியுடனும் (சீன தைபே) மோதுகின்றனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான புத்ரி குசுமாவர்தானியுடன் (இந்தோனேசியா)  தனது சவாலை தொடங்குகிறார்ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, ஹரிகரன் அம்சகருணன்- எம்.ஆர். அர்ஜூன், பெண்கள் இரட்டையர் பிரிவில் கவிபிரியா-சிம்ரன் சிங், ருதபர்ணா- ஸ்வேதா பர்ணா உள்ளிட்ட இந்திய ஜோடிகள் களம் காணுகின்றன.

May 26, 2026

2026 IPL CRICKET- இறுதி போட்டிக்கு 4 அணிகள் தேர்வு .

முதல் நான்கு இடங்களை பிடித்த அணி பெங்களூர், குஜராத்,  ஹைதெராபாத், ராஜஸ்தான் அணிகள், இந்த நான்கு அணிகளும், ஒரு முறை கோப்பையை வென்றது. இன்று நடக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முதல் போட்டியாளர் , பெங்களூர், குஜராத் அணிகள், இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

May 25, 2026

LUCKNOW - PUNJAB - 23RD MAY 2026 IPL CRICKET

  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 68-வது லீக் ஆட் டத்தில் மோதின.டாஸ்' ஜெயித்த பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 18 ஓவகளில் 200/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசிவரைஆட்டம்  இழக்காமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 51 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். 

May 25, 2026

MUMBAI – RAJASTHAN--24TH  2026 IPL CRICKET  .

 மும்பை வான்கடே ஸ்டேடியத்தில், நேற்று மாலை 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் 69-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன்களான மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின.. டாஸ் வென்ற மும்பை அணி பீல்ட்ங் தேர்வு செய்தார்.  ராஜஸ் தான் அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.  மும்பை அணி 20 ஓவரில் 175/9 ரன்களே எடுக்க முடிந்தது. 

May 25, 2026

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி இன்று தொடக்கம் .

ஆஸ்லோ நகரில் 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம். 5-ந்தேதி வரை நடக்கிறது.உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல் சென் (நார்வே), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), அலிரெஜா பிரோஸ்ஜா (பிரான்ஸ்), வெஸ்லி சோ (அமெரிக்கா) ஆகிய 6 முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.ஒவ்வொரு வீரரும், மற்ற வீரர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர் வாகை சூடுவார். இதேபோல் 10 சுற்று கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ஜூ ஜினெர், ஜூ வென்ஜன் (இருவரும் சீனா), கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் (இருவரும் இந்தியா), அன்னா முசிசுக் (உக்ரைன்) பிபிசரா அசாப யேவா (கஜகஸ்தான்) ஆகியோர் களம் இறங்குகிறார்கள். 

May 23, 2026

HYDERABAD - BANGALORE - 22ND MAY 2026 IPL CRICKET .

பெங்களூரு, ஹைதெராபாத் அணிகள் நேற்று ஹைதெராபாத்தில்  நடந்த போட்டியில் மோதின.    டாஸ்  வென்ற ஹைதெராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.  20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.  ஐ.பி.எல்.-ல் ஐதராபாத்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்,  பெங்களூரு அணி  20 ஓவரில்200/4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 

May 22, 2026

GUJARAT – CHENNAI-21ST MAY 2026 IPL CRICKET .

. சென்னை, குஜராத் அணிகள், நேற்று ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. குஜராத் ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டது.  தனது கடைசி லீக் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி சென்னை களமிறங்கியது.  'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.   குஜராத் அணி 20 ஓவரில் 229/4 ரன் குவித்தது.  சென்னை அணி 13.4 ஓவரில் 140 ரன்னுக்கு  ஆல்  அவுட்  ஆகி ,பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. 

May 22, 2026

இந்திய வீராங்கனை சலிஹா  அஷ்மிதா  ,மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் கால் இறுதியில் …..

கோலாலம்பூரில் மலேசிய மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பேட்மிண் டன் போட்டி,நேற்று நடந்த பெண்கள் ஒற் றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சலிஹா  அஷ்மிதா  21-13, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் கோஹ் ஜின் வெய்யை எளிதில் வீழ்த்தி கால் இறுதிக்குமுன்னேறினார். இந்திய வீராங்கனை  மாள்விகா பான்சோத்,  மற்றொரு ஆட்டத்தில் 21-16, 8-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிஜார்ஸ் பெல்ட்டிடமும் , தேவிகா சிஹாக் 16-21, 13-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் யூபெய்யிடம் தோற்று வெளியேறினார்.இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-எம்.ஆர்.அர்ஜூன் இணை 14-21, 15–21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூகிய் யூயான்–லின் ஜியாங்யி ஜோடியிடம்  ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் தோல்வியை தழுவியது. 

1 2 ... 26 27 28 29 30 31 32 ... 171 172

AD's



More News