25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Mar 17, 2026

பெலாரசின் சபலென்கா.இந்தியன் வெல்ஸ்நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கோப்பையை  கைப்பற்றினார்.

பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர்அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் ,பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர்.முதல் செட்டை 3-6 என இழந்த சபலென்கா, 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இவர், 'டைபிரேக்கர்' வரை சென்ற 3வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார்.இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் சப லென்கா 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில்,இத்தொடரில் பைனல் வரை சென்ற ரிபாகினா, 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சபலென்கா நீடிக்கிறார். போலந்தின் இகா ஸ்வியாடெக் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷ்யாவின் மெத்வெடேவ்  ஆண்களுக்கான ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையர் பைனலில் மோதினர். சின்னர் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Mar 17, 2026

இந்தியா ஜூனியர் பாட்மின்டனில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றது.

ஸ்பெயினில் சர்வதேச 'ஜூனியர்' ஓபன் பாட்மின்டன் தொடர் ஸ்பெயினில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ் யான்ஷ் அகர்வால், ஹரிஷ் ராகவேந்திரன் வைத்தியநாதன் ஜோடி,  ஸ்பெயினின் ஜோயல்  ஆல்வரஸ், அட்ரியன் ரோட்ரிக்ஸ் விங் ஜோடியை எதிர் கொண்டது. முடிவில் இந்திய ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. இந்தியாவின் ஹரிஷ்ராகவேந்திரன் வைத்தியநாதன், ஜனனிகா ஜோடி, இங்கிலாந்தின் மியா பாக்ஸ், டின் விங் வாங் ஜோடியைகலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது.இந்திய ஜோடி முதல் செட்டை இந்திய ஜோடி 17-21 என இழந்து, அடுத்த இரு செட்டுகளை 21-13, 22-20 என வசப்படுத்தியது.இந்திய ஜோடி 17-21, 21-13, 22-20 என்ற செட் கணக்கில்பைனலின் முடிவில் வெற்றி பெற்று, தங்கம்வென்றனர். 

Mar 17, 2026

இந்திய அணி, 6வது அக்ரோபோலிஸ் சர்வதேச உஷு ஓபன் தொடரில் 24 பதக்கங்கள் .

6வது அக்ரோபோலிஸ் சர்வதேச உஷு ஓபன் தொடர் கிரீசின் ஏதென்ஸ் நகரில் ஆண்களுக்கான 'நன்-குவான்' பிரிவில் இந் தியாவின் யாஷ் நாம்தியோ தங்கம் வென்றார்.  தொடர்ந்து இவர், 'நான்-கன்' பிரிவிலும் தங்கம் வென்று ,'நன் தாவோ' பிரிவில் களமிறங் கிய யாஷ், வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். 'சாண்டா' போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, பெண்களுக்கான (18 வயது பிரிவு) 52 கிலோ, தங்கம் கைப்பற்றினார். இந்திய வீராங்கனை ஜோதி, 60 கிலோ சாண்டா, சீனியர் பிரிவில் தங்கம் வென்றார். இந்திய அணி, 7 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்றது. 

Mar 17, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வது சீசன் முதலிடத்தை கைப்பற்றிய சீனா.

மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாரா லிம்பிக் 14வது சீசன் இத்தாலியின் மிலன், கார்டினா நகரில் நடந்தது. பாரா ஐஸ் ஹாக்கி, பாரா ஆல்பைன்பனிச்சறுக்கு உள்ளிட்ட 6 வகையான விளையாட்டிகளில், 79 தங்கம் வழங்கப்பட்டது. 15 தங்கம் உட்பட 44 பதக்கம்  வென்றுசீனா முதலிடத்தை கைப் பற்றியது. இதில் 55 நாடுகளை சேர்ந்த 612 பேர் பங்கேற்றனர் . அமெரிக்கா (13 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம்), ரஷ்யா (8 தங்கம், ஒரு வெள்ளி, வெண்கலம்) தட்டிச் சென்றன.

Mar 16, 2026

இந்தியாவுக்கு உலக 'யூத்' குத்துச்சண்டையில்  ஐந்து பதக்கங்கள்.

உலக குத் துச்சண்டை 'பியூட்சர்ஸ்' கோப்பை (19 வயது) தொடர் தாய்லாந்துதலைநகர் பாங்காக்கில்,  பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின்சந்திரிகா பூஜாரி, உஸ்பெகிஸ்தானின் நஜோகத் மர்டோனோவா மோதி,.இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வென்றார்.இந்திய வீராங்கனை குஞ்சன், இங்கிலாந்தின் லில்லி பாசெட்மற்றொரு பைனலில் (48 கிலோ)  மோதி,குஞ்சன் 0-4 என தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.இந்தியாவின் ஜாய்ஸ்ரீ தேவி சிரோம், அமெரிக் காவின் ரூயிஸ்  பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில், மோதி, ஜாய்ஸ்ரீ 1-4 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜம் வெண்கலம் வென்றிருந்தார். இந்தியாவின் அம்பேகர், உஸ்பெகிஸ்தானின் அப்துகனி யார்கின்ஜோனோவ் ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் மோதி,.அம்பேகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இந்தியாவுக்கு இத்தொடரில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 5 பதக்கம்கிடைத்தது. 

Mar 16, 2026

பரணிகா இந்திய ஓபன் 'போல் வால்ட்' போட்டியில் தங்கம் வென்றார் .

இந்திய ஓபன் 'ஜம்ப்ஸ்' போட்டிகள்  பெங்களூருவில், பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பரணிகா, 4.10 மீ., தாண்டி தங்கத்தை கைப்பற்றினார்.  பெங்களூரு, தேசிய சிறப்பு மையம் அணியின் சிந்துஸ்ரீ (3.95 மீ.,) வெள்ளி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியின் பபிதா படேல் (3.90 மீ.,) வெண்கலம்வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை கார்த்திகா (3.80 மீ.,) 5வது இடம்பிடித்தார்.  தமிழகத்தின் சரண் ,ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (7.77 மீ.,)  வெண்கலம், கர்நாடகாவின் புருஷோத்தம் (7.87 மீ.,), ஒடிசாவின் சருண் பாயாசிங் (7.78 மீ.,) தங்கம், வெள்ளி வென்றனர்.   தமிழகத்தின் ஹரிகரன் ரமேஷ் ஆண்களுக்கான (20 வயது ) 'போல் வால்ட்' போட்டியில் (4.55 மீ.,) தங்கம் வென்றார்.  ஹர்ஷினி பெண்களுக்கான (18 வயது) உயரம் தாண்டுதலில் (1.50 மீ.,) தங்கம் வென்றார். 

Mar 16, 2026

இந்தியாவின் செல்வ பிரபு உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி வென்றார்.

என்.சி.ஏ.ஏ., உள்ளரங்கு தடகளசாம்பியன்ஷிப்('டிவிசன்-1') அமெரிக்காவில்,ஆண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்’ பைனலில் ,இந்தியாவின் செல்வ பிரபு 21, கான்சாஸ் பல்கலை., சார்பில் பங்கேற்றார். அதிகபட்சமாக 17.05 மீ., துாரம் தாண்டிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தியாவுக்கு இத்தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிஎன 2 பதக்கம்கிடைத்தது.லோகேஷ்சத்யநாதன்(நீளம்தாண்டுதல்)  ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.

Mar 14, 2026

இந்தியாவின் தருண் சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறினார்.

சுவிஸ் ஓபன்  ''சூப்பர் 300'' பாட்மின்டன்  தொடர் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், ஆண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தருண், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ மோதினர். முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய தருண், இரண்டாவது செட்டை 22-20 என வென்று 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Mar 14, 2026

இந்திய அணி உலக கோப்பை ஹாக்கி தகுதி சுற்றின் பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில் வரும் ஆக. 14-30ல் நடக்கவுள்ளது. இதற்கானதகுதி சுற்று ஐதராபாத்தில் மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொருபிரிவிலும் முதலிரண்டு இடம் பிடித்த இங்கிலாந்து (ஏ1), இத்தாலி (ஏ2), இந்தியா (பி1), ஸ்காட்லாந்து (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இத்தாலி அணிகள் நேற்று நடந்த அரையிறுதியில் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்குகிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.  

Mar 14, 2026

உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடரில்பவினா படேல் தங்கம் வென்றார்.

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் உலக பாரா சாலஞ்சர் டேபிள் டென்னிஸ் தொடர்போலந்தில் ,பெண்கள் ஒற்றையர் 'சி 4-5' பிரிவில் ('வீல் சேர்') இந்தியா சார்பில் ,டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற பவினா படேல் 39, தென் கொரியாவின் ஜங்யங்கை காலிறுதியில்,3-1 (8-11, 11-7, 11-6, 11-9) என வென்றார்.அடுத்து நடந்த அரையிறுதியில் தென் கொரியாவின் மூன் சங்யேவை சந்தித்தார். இதில் பவினா 3-1 என  (11-8, 11-7, 8-11, 11-4) வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் பவினா, பிரான்சின் புளோரா வாட்டியரை எதிர்கொண்டார். பவினா முதல் செட்டில் 11-6 , அடுத்த செட்டில் 11-5 என கைப்பற்றி, மூன்றாவது செட்டை 11-9 என வென்றார். முடிவில் 3-0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 

1 2 ... 29 30 31 32 33 34 35 ... 158 159

AD's



More News