மூன்றாவது முறை சிறந்த வீரர் ஆன சுப்மன் கில் தேர்வு
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்மித், நியூசிலாந்தின் பிலிப்ஸ் பெயர்கள்
பரிந்துரை செய்யப்பட்டன. தற்போது பிப்ரவரி மாதத்தில் 5 போட்டியில் 406 ரன் எடுத்த சுப்மன் கில் (சராசரி 101.50 ரன்), சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மூன்றாவது முறை சிறந்த வீரர் ஆன முதல் இந்தியர் என பெருமை பெற்றார்.
0
Leave a Reply