25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தூதுவளை சளி , காய்ச்சலுக்கு  சிறந்த மருந்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தூதுவளை சளி , காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு  பிரச்சனைகளிலிருந்து எளிதாக குணம் அடைய முடியும். சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். 

குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இரத்தத்திலுள்ள  சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரியான அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கு இரத்த அணுக்களின் அளவு மிகவும் அவசியமானது. இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது. 

தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த  சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.

இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்துசாப்பிட்டுவரும் பொழுதுநல்லபலனைஅடையமுடியும்.தினமும் இரண்டு தூதுவளை பூக்களை மென்று தின்ன உடல் பளபளப்பாக மாறும்.தூதுவளை பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட உடல் வலுவடையும்.ஒரு ஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து' இரவில் ஒருவேளை மட்டும் அருந்தினால் நரம்புகள் இறுகும்.உடல் உறுதி பெறும். என்றும் இளமையோடு இருக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News