25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

May 12, 2026

தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் இந்தியன் தடகள சீரிஸ்-6குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன் தினம் இந்தியன்தடகள சீரிஸ்-6 போட்டி பெண்களுக்கான குண்டு எறிதலில், தமிழக வீராங்கனை கிருஷ்ணாஜெயசங்கர்  மேனன் 16.96 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். உத்தர பிரதேச வீராங்கனை விதி 15.77 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், அரியானா வீராங்கனை அன்ஷூ 15.52 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.  வட்டு எறிதலில்  அரியானாவின் நந்தினி ராணி (58.82 மீட்டர்) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.கிருஷ்ணா (53.37 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் வென்றார். 

May 12, 2026

இந்திய வீராங்கனை கோமல் கோஹர்க்கு ஆசிய பளுதூக்குதலில் வெண்கலம் !

 குஜராத் மாநிலம் காந்தி நகரில் நேற்று, ஆசிய பளுதூக்குதல் சாம்பியன் ஷிப்போட்டி தொடங்கியது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 179 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் . பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் முதல் நாளில் இந்திய வீராங்கனை கோமல் கோஹர் மொத்தம் 177 கிலோ எடை தூக்கி (ஸ்னாட்ச்-78, கிளீன் அண்ட் ஜெர்க் 99) வெண்கலப்பதக்கம் பெற்றார்.  சீன தைபேயின் ஷூயாங் யி சென் (193 கிலோ) தங்கப்பதக்கமும், பாங் வான்லிங் (192 கிலோ) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

May 12, 2026

மாரத்தானில் கென்ய வீரர் சபாஸ்டியன் சாவே புதிய உலக சாதனை.

லண்டன் மாரத்தானில் கென்ய வீரர் சபாஸ்டியன் சாவே புதிய உலக சாதனை.2 மணி நேரம் 35 வினாடிகளில் கடந்ததே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், 42 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 59 நிமிடங்களில் எட்டி வரலாறு படைத்தார்.

May 11, 2026

CHENNAI - LUCKNOW  10TH MAY 2026 IPL CRICKET .

சென்னை, லக்னோ அணிகள் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின.  'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.  லக்னோ அணி 20 ஓவரில் 203/8 ரன் எடுத்தது,  சென்னை அணி 19.2 ஓவரில் 208/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

May 11, 2026

BANGALORE - MUMBAI - 10TH MAY 2026 IPL CRICKET.

பெங்களூரு, மும்பை அணிகள் நேற்று, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின.  'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  மும்பை அணி 20 ஓவ ரில் 166/7 ரன் எடுத்தது.  பெங்களூரு அணி  20 ஓவரில் 167/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

May 09, 2026

DELHI - KOLKATTA  8TH MAY 2026 IPL CRICKET.

கொல்கத்தா, டெல்லி அணிகள்நேற்று, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்,  மோதின.  'டாஸ்' வென்ற கொல்கட்டா கேப்டன் ரஹானே, 'பவுலிங்' தேர்வு செய்தார்.  டில்லி அணி 20 ஓவரில் 142/8 ரன் எடுத்தது. கொல்கத்தா அணி 14.2 ஓவரில் 147/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

May 09, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான, சர்வதேச பாரா டேபிள் டென்னிசில், வெண்கலம் வென்றார் சோனல்பென்,

மாற்றுத்திறனாளிகளுக்கான, சர்வதேச பாரா டேபிள் டென்னிஸ் தொடர்,  சுலோவேனியாவில் லாஸ்கோ நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சோனல்பென், தாய்லாந்தின்இடானனை எதிர் கொண்டார்.முதல்செட்டை என கைப்பற்றிய 11-3 சோனல்பென்தொடர்ந்து, விளையாடி, ஐந்தாவது, கடைசி செட்டில் இவர், 12-14 என ,முடிவில் சோனல்பென் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

May 09, 2026

முதன் முறையாக ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா.

17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை , சீனாவின் சுஜு நகரில்,  10வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  'டாப்-6' இடம் பெறும் அணிகள், தொடரின் முடிவில், வரும் அக். 17-நவ.7ல் மொராக்கோவில் நடக்க உள்ள 17 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்தில், பங்கேற்க தகுதி பெறும்.  முதன் முறையாக 21 ஆண்டில், ஆசிய  கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி 'பி' பிரிவில், இடம் பெற்றது.  தனது மூன்றாவது, கடைசி போட்டியில்நேற்று லெபனானை சந்தித்தது. முதல் பாதியில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 21 ஆண்டு  ஆசிய கோப்பை (17 வயது) அரங்கில், இந்தியா பெற்ற முதல் வெற்றி.

May 08, 2026

BANGALORE - LUCKNOW  - 7TH MAY IPL CRICKET .

50 வது லீக் போட்டியில்  நேற்று லக்னோ  பெங்களூரு அணிகள் மோதின.  டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்ட்ங் தேர்வு செய்தது. லக்னோ அணி 19 ஓவரில் 209/3 ரன்கள் எடுத்தது.  பெங்களூரு அணி  19 ஓவரில் 203/6 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.  இந்த போட்டியில் லக்னோ அணி  முதல் இடத்தில் உள்ளது.  

May 08, 2026

உலகக் கோப்பை வில்வித்தை,இந்திய அணி இறுதிப் போட்டிக்கு  தகுதி.

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 2) நடந்து வரூகிறது.பெண்கள் ரிகர்வ் அணிகள் பிரிவின் அரை இறுதியில் இந்திய அணி, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான, தென்கொரியாவை சந்தித்தது. இதில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும்மோஹோட்ஆகியோர்அடங்கியஇந்தியஅணி 5-1 என்றகணக்கில்தென்கொரியாவைவீழ்த்திஇறுதிப்போட்டிக்குமுன்னேறியது.இறுதிப்போட்டியில் 2-ம் நிலைஅணியான சீனாவுடன் மோதுகிறது.

1 2 ... 28 29 30 31 32 33 34 ... 171 172

AD's



More News