மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டனில், இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் சீனாவில் ,ஆண்கள் இரட்டையர் பிரிவு (டபிள்யு.எச். 1-2) அரையிறுதியில் இந்தியாவின் பிரேம்குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி 4-21, 10-21 என சீனாவின் மை ஜியான் பெங், ஜிமோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல்.3-4) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-16, 21-17 என சீனாவின் யுயாங் காவோ, ஜியாங் லிசுவான் ஜோடியை வென்றது.
(எஸ்.எல்.3) அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-19 என, ஜப்பானின்புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 4) இந்தியாவின்சுகந்த் கடம் 21–16, 21–12 என தென் கொரியாவின் சோ நடானை தோற்கடித்தார்.எஸ்.எச். 4 பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா 21– 16, 21-16 என சீனாவின் ஜெங்கை வென்றார்.
0
Leave a Reply