25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


விடுகதை

Jul 21, 2025

அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. 

அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. அது என்ன?- இடியாப்பம்  அடிமேல் அடி வாங்கி, அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்

Jul 14, 2025

கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?

கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?-- :  உப்பு விரல் இல்லாமலே, ஒரு கை அது என்ன?  - தும்பிக்கை

Jul 07, 2025

வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான்

வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான். அது என்ன?*--பட்டம் வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?--பூட்டும், சாவியும்.

Jun 30, 2025

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். 

வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். அது என்ன?---முட்டை.உயிரில்லாதவனுக்கு. உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?--பாய்.

Jun 23, 2025

 சுற்றுவது தெரியாது.ஆனால், சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார் ?

 சுற்றுவது தெரியாது.ஆனால், சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார் ?  - பூமி குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன? -  ஊசி நூல்

Jun 16, 2025

எண்ணெய் குடித்துவிட்டு, ஏழு கடல் தாண்டுவான். அவன் யார்?

எண்ணெய் குடித்துவிட்டு, ஏழு கடல் தாண்டுவான். அவன் யார்?--விமானம்ஒருவனுக்கு உணவளித்தால், ஊரையே கூட்டுவான்.அவன் யார்?--காகம்

Jun 08, 2025

கரைந்து போகுது வெள்ளி தட்டு. 

கரைந்து போகுது வெள்ளி தட்டு. அது என்ன?  —  தேய்பிறை உரச உரச குழைவான், பூச பூச மனப்பான். அவன் யார்?   -  சந்தனம்

Jun 01, 2025

சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?

சிறு தூசி விழுந்ததும்,குளமே கலங்கியது அது என்ன?--கண்சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?—வாழைப்பழம்

May 25, 2025

பூமியிலே பிறக்கும்,புகையாய்ப் போகும்.

வெயிலில் மலரும் காற்றில் உலரும். அது என்ன? -  வியர்வைபூமியிலே பிறக்கும்,புகையாய்ப் போகும். அது என்ன? -  பெட்ரோல் 

May 18, 2025

அச்சு இல்லாத சக்கரம்,அழகு காட்டும் சக்கரம்.

அச்சு இல்லாத சக்கரம்,அழகு காட்டும் சக்கரம். அது என்ன? - வளையல்ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? - கடிதம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News