25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முட்டை மிளகு வறுவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முட்டை மிளகு வறுவல்.

தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை - 4

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது,)

இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,

மிளகு - அரை டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப),

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,

எண்ணெய் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

வேகவைத்த முட்டைகளை உரித்து, அவற்றின் மேல் லேசாக கீறிக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும்.

மஞ்சள் தூள், சீரகத் தூள், மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.கடைசியாக முட்டைகளைச் சேர்த்து, மசாலாவுடன் நன்றாகக் கலந்து, மசாலா முட்டையின் மேல் ஒட்டிக்கொள்ளும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி, சூடாக ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News