வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? - உப்புஅள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? - காற்று
எட்டுப் பேர் நாங்க எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம் நாங்கள் யார்?- செஸ் சிப்பாய் அறைகள் உண்டு இது வீடு அல்ல, சித்திரமும் அல்ல, காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு கோட்டையும் அல்ல அது - தேன் கூடு.
நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத் தண்ணீர் இல்லை - அச்சு வெல்லம். உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான் - வெங்காயம்.
அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். -சாம்பிராணி . தலை இல்லாதவன் தலையை சுமப்பவன், - தலையணை
பூபூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. - வேர்கடலை கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? - புகை
பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன? விடை: வத்தல் மிளகாய்இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?விடை: மத்து
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன?- ஊதுபத்திஇருந்த இடத்தில் நகர்ந்தபடி *இரவும் பகலும் செல்வான். அவன் யார்? - கடிகாரம்
இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? கடிகாரம்.ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க,திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு.
இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? கடிகாரம்.ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க,திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு
தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன? கப்பல்கள் தொட்டால் மணக்கும். சுவைத்தால் புளிக்கும் அது என்ன? எலுமிச்சம்பழம்