25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 76 ஆவது சுதந்திர தின விழா பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக  திருமதி.சுதா இளவரசு அவர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றினார்.  பள்ளி முதல்வர்  திரு. கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்க, தாளாளர் விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவம் செய்தார். நிகழ்வில் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ரமணி சந்திரசேகர் ராஜா கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய திரு நாட்டில் ஏராளமான வளங்கள் உள்ளன. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்த  வேண்டும் என்று கூறினார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழிகாட்டுதல்  இருந்தால் ஒவ்வொருவரும் சாதிக்கலாம் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

 ஹெலன் கெல்லர், வால்ட் டிஸ்னி, ஹாரிபாட்டர் போன்ற சாதனையாளர்களை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு உற்சாக மூட்டினார். கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தமது திறமைகளை  மிக அழகாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன . நிகழ்ச்சி ஏற்பாடுகளை   ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் வெங்கட் பெருமாள் அவர்களும் கலந்து கொண்டார்.  ஆசிரியை பத்மாவதி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News